Home
Mobile

ஓபன் பண்ணா? நெருப்பா ஒரு 5G போன்.. சில்லுனு வாங்கும் பட்ஜெட் விலை.. தெரிபறக்கும் realme P1 Pro என்ன விலை?

ஓபன் பண்ணா செக்கச்செவேர்னு ஒரு ஸ்மார்ட்போன். இந்தியாவிலேயே இந்த பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் ஒரேயொரு கர்வுடு டிஸ்பிளே 5ஜி ஸ்மார்ட்போனே (Curved display 5G Mobile) இது மட்டும் தான். புது realme P1 Pro போனின் முழு விபரங்கள்.

பட்ஜெட் பிரியர்களை கவரும் விதத்தில் ரியல்மி (realme) நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை ரூ.20,000 விலைக்குள் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், இன்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய ரியல்மி பி1 ப்ரோ 5ஜி (realme P1 Pro 5G) ஸ்மார்ட்போனை கருத்தில்கொள்வது சிறந்த தேர்வாக அமையும் என்று அறிவுரைக்கப்படுகிறது.

ஓபன் பண்ணா? நெருப்பா ஒரு 5G போன்.. சில்லுனு வாங்கும் பட்ஜெட் விலை..

ரியல்மி பி1 ப்ரோ 5ஜி (realme P1 Pro 5G):
காரணம், இது வெறும் ரூ.19,999 என்ற துவக்க விலையில் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன் சாதனமாக இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பட்ஜெட் விலைக்கு இதில் ஏராளமான சூப்பர் அம்சங்களை ரியல்மி நிறுவனம் பேக் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்ன? இதை எப்போது வாடிக்கையாளர்கள் வாங்கலாம் என்பது போன்ற முழு விபரத்தை இப்போது பார்க்கலாம்.

புதிய ரியல்மி பி1 ப்ரோ 5ஜி (realme P1 Pro 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 6.7" இன்ச் அளவு கொண்ட 120Hz AMOLED டிஸ்பிளேவை (display) கொண்டுள்ளது. இது 2160Hz PWM டிமிங் (Dimming) மற்றும் ப்ரோ-எக்ஸ்டிஆர் (Pro-XDR) ஆதரவை கொண்ட கர்வுடு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Snapdragon 6 Gen 1) உடன் இயங்குகிறது.

இந்த ரியல்மி பி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 3டி விசி கூலிங் சிஸ்டம் (3D VC Cooling system) அம்சம் மற்றும் டாக்டைல் என்ஜின் (tactile engine) அம்சத்தை பெறுகிறது. இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் (Budget smartphone) 8GB + 8GB டைனமிக் ரேம் (Dynamic RAM) அம்சத்துடன் மிகவும் ஸ்மூத்தான ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது.

ஓபன் பண்ணா? நெருப்பா ஒரு 5G போன்.. சில்லுனு வாங்கும் பட்ஜெட் விலை..

ரியல்மி பி1 ப்ரோ 5ஜி விலை (realme P1 Pro 5G Price):
இது 256GB ஸ்டோரேஜ் அம்சத்தை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 50 MP (OIS) + 8 MP உடன் கூடிய டூயல் ரியர் கேமரா (Dual Rear Camera) அமைப்பை கொண்டுள்ளது. இதன் பிரைமரி மெயின் கேமரா Somy LYT-600 சென்சார் உடன் வருகிறது. முன்பக்கத்தில், இந்த டிவைஸ் 16MP செல்பி கேமராவை வழங்குகிறது. இது மிகவும் தரமான மற்றும் கலர்புல் புகைப்படம் மற்றும் வீடியோவை வழங்குகிறது.

இந்த புதிய ரியல்மி பி1 ப்ரோ 5ஜி (realme P1 Pro 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த சாதனம் 45W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) ஆதரவை கொண்டுள்ளது. இதன் ஆரம்ப சிறப்பு சலுகை விலை ரூ.19,999 ஆகும். பிளிப்கார்ட் (Flipkart) வழியாக இது வரும் ஏப்ரல் 22ம் தேதி, 6PM முதல் 8PM வரை விற்பனை செய்யப்படும்.

இது பீனிக்ஸ் ரெட் (Phoenix Red) மற்றும் பேரட் ப்ளூ (Parrot Blue) ஆகிய இரண்டு நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. இத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி பி1 5ஜி (realme P1 5G) ஸ்மார்ட்போன் சாதனம் இந்தியாவில் வெறும் ரூ.14,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது இன்று, 6PM முதல் 8PM வரை மட்டும் விற்பனைக்கு வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
realme P1 Pro 5G Phoenix Red Parrot Blue 8GB RAM 256GB Storage Launched From Rs 19999 Via Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X