ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டு ஏற்கனவே 6 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த பின்பு, மேலும் ஒரு ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது ரியல்மி. அதாவது ரியல்மி நிறுவனம் வரும் ஏப்ரல் 24-ம் தேதி இந்தியாவில் ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி போனை தான் அறிமுகம் செய்ய உள்ளது.
குறிப்பாக இந்த ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிளாட் டிஸ்பிளே, ட்ரிபிள் ரியர் கேமரா, 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme Narzo 70x 5G specifications): மேட் ஃபினிஷ் பேக் (matte finish back)மற்றும் பிளாட் டிஸ்பிளே (flat display) உடன் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
இந்த ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் ரூ.12,000 பட்ஜெட்டில் இந்த ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் சர்வதேச சந்தையில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ரியல்மி சி65 போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரியல்மி சி65 அம்சங்கள்: மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85 SoC) சிப்செட் வசதியுடன் ரியல்மி சி65 வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.
இந்த ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ரியல்மி சி65 போன் விற்பனைக்கு வரும்.

குறிப்பாக 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 720x1,604 பிக்சல்ஸ், 650 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. அதேபோல் இதில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வசதி உள்ளது.
5000எம்ஏஎச் பேட்டரிவசதியுடன் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (45W fast charging) வசதி உள்ளது. அதேபோல் புளூடூத் 5.3, ஜிபிஎஸ், ஜிபிஎஸ், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications