ரூ.599 விலையில் இப்படி ஒரு Redmi Writing Pad-ஆ.! இது டேப்லெட்டா இல்ல வேற மாதிரி டிவைஸா?

|

Xiaomi இந்தியாவில் புதிய Redmi Writing Pad என்ற சாதனத்தை சைலெண்டாக அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ரெட்மி ரைட்டிங் பேட் தயாரிப்பு என்பது ரெட்மி பேட் போன்ற முழு அளவிலான ஆண்ட்ராய்டு டேப்லெட் போல் காட்சியளிக்கிறது.

இருப்பினும், மக்களுக்கு இந்த விலையில் இப்படி ஒரு சாதனம் கிடைக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதேபோல், இது டேப்லெட்டா அல்லது வேற மாதிரி டிவைஸா என்று சிறிய குழப்பம் உருவாகியுள்ளது.

Redmi Writing Pad என்பது டேப்லெட் டிவைசா? இல்லை வேற மாதிரி டிவைசா?

Redmi Writing Pad என்பது டேப்லெட் டிவைசா? இல்லை வேற மாதிரி டிவைசா?

இந்த Redmi Writing Pad மிகவும் கையடக்கமான மற்றும் நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால், பார்ப்பதற்கு டேப்லெட் (Tablet) போல் காட்சியளிப்பதனால் வாடிக்கையாளர்களுக்குச் சிறிய குழப்பம் உருவாகியுள்ளது.

உண்மையைச் சொல்லப் போனால், இது டேப்லெட் சாதனம் இல்லை என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதன் பெயர் குறிப்பிடுவது போல, இது ஒரு எலக்ட்ரானிக் ரைட்டிங் பேட் (Electronic Writing Pad) ஆகும்.

இந்த ரெட்மி ரைட்டிங் பேட் டிவைஸை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

இந்த ரெட்மி ரைட்டிங் பேட் டிவைஸை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

மலிவு விலையில் கிடைக்கும் மிகவும் பெரிய அளவு டேப் போன்ற இந்த ரெட்மி ரைட்டிங் பேட் சாதனத்தைப் பயன்படுத்தி, நோட்ஸ் எடுக்க (Taking Notes) அல்லது டூடுலிங் (Doodling) செய்வது போன்ற வேலைகளுக்காக இதைப் பயன்படுத்தலாம்.

டூடுல் செய்ய உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த சாதனத்தை டிரை செய்யலாம். இந்த ரெட்மி ரைட்டிங் பேட் ஒரு பிரஷர் சென்சிடிவ் ஸ்டைலஸ் (Pressure Sensitive Stylus) உடன் வருகிறது. எழுதுவதற்கும், வரைவதற்கு இது மிகவும் லாவகமாக இருக்கிறது.

உங்க போனை சார்ஜ் செய்தால் கூட ஹேக் செய்யப்படுமா? என்னப்பா சொல்றீங்க.! உஷார் மக்களே.!உங்க போனை சார்ஜ் செய்தால் கூட ஹேக் செய்யப்படுமா? என்னப்பா சொல்றீங்க.! உஷார் மக்களே.!

Redmi Writing Pad டிவைஸின் விலை என்ன? எங்கிருந்து வாங்கலாம்?

Redmi Writing Pad டிவைஸின் விலை என்ன? எங்கிருந்து வாங்கலாம்?

Xiaomi தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த Redmi Writing Pad டிவைஸை பட்டியலிட்டுள்ளது.

Mi ஹோம் ஸ்டோர்ஸ் (Mi Home Store) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பார்ட்னர் ஸ்டோர்கள் வழியாக இந்த சாதனத்தை சியோமி ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

இந்தியாவில் Redmi Writing Pad டிவைஸின் விலை ரூ.599 என்ற அறிமுக விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஆரம்பக்கால சலுகை விலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் வழியாக இந்த Redmi Writing Pad ஐ எங்கிருந்து வாங்கலாம்?

ஆன்லைன் வழியாக இந்த Redmi Writing Pad ஐ எங்கிருந்து வாங்கலாம்?

இதற்குப் பின், வரும் நாட்களில் இதன் விலை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சலுகை விலை காலக்கெடு குறித்த செல்லுபடியாகும் விவரங்கள் எதையும் Xiaomi வெளியிடவில்லை. Xiaomi அறிமுகம் செய்துள்ள இந்த Redmi Writing Pad ஒற்றை பிளாக் வேரியண்ட் வண்ண விருப்பத்தில் வருகிறது.

இது Mi.com வழியாக வாங்கக் கிடைக்கிறது. சரி, இப்போது இந்த Redmi Writing Pad இன் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

WhatsApp பயனர்களே ஜாக்கிரதை.! அசல் போல போலி வாட்ஸ்அப்.! உங்க போன்ல WhatsApp பயனர்களே ஜாக்கிரதை.! அசல் போல போலி வாட்ஸ்அப்.! உங்க போன்ல "இது" இருக்கா?

புதிய Redmi Writing Pad சிறப்பம்சம்

புதிய Redmi Writing Pad சிறப்பம்சம்

இந்த புதிய Redmi Writing Pad 8.5 இன்ச் பாலிமர் எல்சிடி டிஸ்பிளேயுடன் வருகிறது. அதன் ரைட்டிங் பேட் டிஸ்பிளே காகிதத்தில் உள்ள மை போன்ற தோற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

இதில் பேக்லைட் அம்சம் என்று எதுவும் கிடையாது என்பதனால், நீண்ட நேரப் பயன்பாட்டிற்குப் பிறகு உங்கள் கண்கள் சோர்வடையாது என்று நிறுவனம் கூறியுள்ளது.

Redmi Writing Pad உடன் நோட்ஸ் எடுக்கவும், டூடுல்களை வரையவும் ஸ்டைலஸ் வழங்கப்பட்டுள்ளது.

எத்தனை முறை இந்த ரைட்டிங் பேடில் தடையின்றி எழுதலாம்?

எத்தனை முறை இந்த ரைட்டிங் பேடில் தடையின்றி எழுதலாம்?

இது ஒரு 'ஸ்லைடு & அட்டாச்' மெக்கானிசத்துடன் வருகிறது. உங்கள் ஸ்டைலஸ் இதன் மூலம் பாதுகாப்பாக Redmi Writing Pad உடனே இருக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

Xiaomi தனது ரைட்டிங் பேட் சாதனத்தில், பட்டன் செல்களைப் பயன்படுத்தியுள்ளது. இவை மாற்றக்கூடியவை. Redmi Writing Pad இன் பேட்டரி ஆயுள் இறக்கும் முன் பயனர்கள் ரைட்டிங் பேடில் 20,000 பக்கங்கள் வரை எழுத முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இத்துடன் ஆரஞ்சு நிற லாக்கிங் பட்டனையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Writing Pad with Stylus Support Launched In India At Rs 599 Know The Specification Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X