Jio 5G & Airtel 5G யூஸ் பண்ண புது சிம் கார்டு வாங்க வேண்டுமா? உடனே படிங்க.!

|

ஏர்டெல் (Airtel) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனங்கள் இந்தியாவில் அதன் 5ஜி வெட்வொர்க் (5G Network) சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி இரண்டும் ஏற்கனவே சில நகரங்களில் இப்போது கிடைக்கின்றன, மற்ற நகரங்களில் வரும் மாதங்களில் 5ஜி நெட்வொர்க்கிற்கான அணுகல் கிடைக்கும் என்று நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இருப்பினும், 5ஜி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து மக்களுக்குள் மிகப்பெரிய சந்தேகம் ஒன்று எழுந்துள்ளது.

ஜியோஸ் ட்ரூ 5ஜி vs ஏர்டெல் 5ஜி பிளஸ்

ஜியோஸ் ட்ரூ 5ஜி vs ஏர்டெல் 5ஜி பிளஸ்

என்ன தான் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தாலும் கூட, இன்னும் எல்லோருக்கும் 5ஜி சேவை பயன்படுத்தக் கிடைக்கவில்லை.

ஜியோவின் தலைவர் முகேஷ் அம்பானி கூறுகையில், ஜியோஸ் ட்ரூ 5ஜி (Jio True 5G) சேவை டிசம்பர் 2023-க்குள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.

5G சேவையை பயன்படுத்த ஒருவர் புதிய சிம் வாங்க வேண்டுமா?

5G சேவையை பயன்படுத்த ஒருவர் புதிய சிம் வாங்க வேண்டுமா?

அதேபோல். ஏர்டெல் தனது ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையை மார்ச் 2024-க்குள் நாடு முழுவதும் வெளியிடுவதாக உறுதியளித்துள்ளது.

இப்போது நாட்டின் சில பகுதிகளில் 5G ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளதால், மக்களுக்கு நிறையக் கேள்விகள் எழுந்துள்ளன.

5ஜி சேவையை அனுபவிக்கத் துடிக்கும் ஸ்மார்ட்போன் பயனர்கள் மனதில் இருக்கும் ஒரு பொதுவான கேள்வி என்னவென்றால், போனில் 5G சேவையை பயன்படுத்த ஒருவர் புதிய சிம் வாங்க வேண்டுமா?

5G சேவைக்கு அப்டேட் செய்வதாக கூறி மோசடி.! வங்கி கணக்கு பணம் அபேஸ்.! உஷார் மக்களே.!5G சேவைக்கு அப்டேட் செய்வதாக கூறி மோசடி.! வங்கி கணக்கு பணம் அபேஸ்.! உஷார் மக்களே.!

உங்களிடம் இருக்கும் சிம் கார்டில் 5ஜி யூஸ் பண்ணலாமா?

உங்களிடம் இருக்கும் சிம் கார்டில் 5ஜி யூஸ் பண்ணலாமா?

அல்லது ஏற்கனவே உள்ள சிம் கார்டை பயன்படுத்தி 5ஜி சேவையைப் பயன்படுத்தத் துவங்கலாமா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.

இதற்கான பதில் இல்லை என்பதாகும். Airtel மற்றும் Jio பயனர்கள் 5G சேவைகளை அணுக புதிய சிம் கார்டு வாங்கத் தேவையில்லை என்பதே உண்மையாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஏர்டெல் 5ஜி பிளஸ் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, பார்தி ஏர்டெல் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கோபால் விட்டல் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மக்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கிய ஏர்டெல்

மக்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கிய ஏர்டெல்

கடந்த 27 ஆண்டுகளாக இந்தியாவின் தொலைத்தொடர்பு புரட்சியில் ஏர்டெல் முன்னணியில் உள்ளது.

எங்களின் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக மிகச்சிறந்த நெட்வொர்க்கை உருவாக்குவதில் எங்கள் பயணத்தில் மற்றொரு படியை இப்போது அடியெடுத்து வைத்துள்ளோம்.

எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் எங்கள் வாடிக்கையாளர்கள் மையமாக உள்ளனர்.

ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!

5ஜி பயன்படுத்த உங்களுக்கு விருப்பமா?

5ஜி பயன்படுத்த உங்களுக்கு விருப்பமா?

எனவே, எங்கள் வாடிக்கையாளர்கள் எந்த 5G ஸ்மார்ட்போனை வைத்திருந்தாலும், அதில் வாடிக்கையாளர்களின் பழைய சிம் கார்டு (SIM Card) உடன் வேலை செய்யும் படி எங்கள் சேவையை உருவாக்கியுள்ளோம் என்று விட்டல் தெரிவித்துள்ளார்.

5ஜி பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களின் நீங்களும் ஒருவர் என்றால், நீங்கள் எந்த நெட்வொர்க்கில் இருந்தாலும், நீங்கள் புதிய சிம் கார்டை வாங்க வேண்டியதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜியோ 5ஜி மற்றும் ஏர்டெல் 5ஜி யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஜியோ 5ஜி மற்றும் ஏர்டெல் 5ஜி யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஜியோ 5ஜி மற்றும் ஏர்டெல் 5ஜி இரண்டும் ஏற்கனவே உள்ள சிம் கார்டுகளில் வேலை செய்யும். கொல்கத்தா, டெல்லி, மும்பை, வாரணாசி உள்ளிட்ட 4 நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவையை வழங்குகிறது. அதேசமயம், ஏர்டெல் ஒரு படி மேலே சென்று டெல்லி, வாரணாசி, நாக்பூர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, சென்னை மற்றும் சிலிகுரி உள்ளிட்ட 8 நகரங்களில் தனது 5ஜி சேவையை வெளியிட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள பயனர்கள் உங்கள் போனின் செட்டிங்ஸ் சென்று 5G ஐ இயக்க முடியுமா இல்லையா என்பதைச் சரிபார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Jio True 5G and Airel 5G Plus Now Available To Use Do You Need New SIM Card To Start Service

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X