Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
ஒட்டுமொத்த பேடிஎம் (Paytm) யூசர்களின் யுபிஐ ஐடிக்களும் (UPI IDs) எஸ்பிஐ (SBI), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), யெஸ் வங்கி (Yes Bank) உள்ளிட்ட நான்கு வங்கிகளுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து புதிய பேடிஎம் சவுண்ட்பாக்ஸ் (New Paytm Soundbox) களமிறக்கப்பட்டுள்ளது.
ஆர்பிஐ (RBI) விதிகளை மீறியதற்காக பேடிஎம் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அதன் யூசர்கள் கடந்த சில மாதங்களாக அல்லோலம் கல்லோலம்பட்டு விட்டனர். பேடிஎம் பேமெண்ட் தொடங்கி பேடிஎம் சவுண்ட்பாக்ஸ் வரையில் பயன்படுத்திய யூசர்களுக்கு குழப்பங்களும், பயமும் எழுந்ததை மறுக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழலில் பேடிஎம் நிறுவனத்துக்கு மூன்றாம் தரப்பு ஆப்ளிகேஷன் வழங்குநர் (Third-party Application Provider) உரிமம் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி மற்றும் எச்டிஎஃப்சி போன்ற முன்னணி வங்கிகளுடன் இணைந்து யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் அனுமதி கொடுக்கப்பட்டது.
இதனால், ஒட்டுமொத்த பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் (Paytm Payments Bank) வாடிக்கையாளர்களின் யுபிஐ ஐடிக்களும் மேற்கண்ட 4 வங்கிகளுக்கு மாற்றும் பணிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இப்போது, பேடிஎம் நிறுவனத்தால் வழங்கப்பட்ட அனைத்து யுபிஐ ஐடிக்களும் புதிய வங்கிகளுக்கு மாற்றப்பட்டுவிட்ட சூழலில் புதிய பேடிஎம் சவுண்ட்பாக்ஸ் களமிறக்கப்பட்டுள்ளது.
இந்த சவுண்ட்பாக்ஸ் மூலம் யுபிஐ பேமெண்ட்ஸ் (UPI Payments) மற்றும் கிரெடிட் கார்டு மீதான யுபிஐ பேமெண்ட்ஸ் (Credit Card on UPI payments) செய்து கொள்ளலாம். இந்த புதிய பேடிஎம் சவுண்ட்பாக்ஸ் குறித்த அறிவிப்பை பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புதிய சவுண்ட்பாக்ஸ்கள் சிறந்த சவுண்ட் குவாலிட்டி, 10 நாட்கள் பேட்டரி பேக்கப், ஹை-ஸ்பீடு 4ஜி கனெக்டிவிட்டி மற்றும் பவர்-பேக்டு பீச்சர்களை கொண்டிருப்பதாக விஜய் சேகர் சர்மா தெரிவித்திருக்கிறார். அதோடு இந்த சவுண்ட்பாக்ஸ்கள் மேட் இன் இந்தியா தயாரிப்பாகும். நொய்டாவில் இதற்காக தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலை மூலம் நாளொன்றுக்கு 10,000 சவுண்ட்பாக்ஸ்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் வீடியோ வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். பேடிஎம் வெப்சைட்டில் இந்த புதிய சவுண்ட்பாக்ஸ்கள் ஆர்டருக்கு வந்துவிட்டன. படிப்படியாக பழைய சவுண்ட்பாக்ஸ்களுக்கு மாற்றாக இந்த புதிய மற்றும் அட்வான்ஸ்டு சவுண்ட்பாக்ஸ்கள் வர இருக்கின்றன.
இதனால், பழைய சவுண்ட் பாக்ஸ்கள் என்னவாகும் என்ற குழப்பம் அதன் வாடிக்கையாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால், அதுகுறித்த எந்தவித தகவலையும் பேடிஎம் நிறுவனம் கொடுக்கவில்லை. ஆகவே, பழைய சவுண்ட்பாக்ஸ்கள் வழக்கம் போல பயன்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேடிஎம் நிறுவனத்துக்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கட்டுப்பாடுகளை விதித்து, காலெக்கெடுவை நிர்ணயம் செய்யததை அடுத்து போட்டி நிறுவனங்கள் பேடிஎம் இடத்தை பிடிக்கும் முயற்சியில் களமிறங்கின. கூகுள் சவுண்ட்பாட் (Google SoundPod), ஜியோ சவுண்ட்பாக்ஸ் (Jio Soundbox) போன்றவற்றின் தயாரிப்புகள் அதிகரிக்கப்பட்டன.
இதில் ஜியோ சவுண்ட்பாக்ஸ், முக்கிய நகரங்களில் இருக்கும் ஜியோ ஸ்டோர்களில் முதல்கட்டமாக பரலாக்கப்பட்டன. அதேபோல கூகுள் சவுண்ட்பாட்களும் பல்வேறு நகரங்களில் இருக்கும் சிறு வியாபாரிகளிடையே கொண்டு சேர்க்கும் பணிகளும் தொடங்கின. இவை பேடிஎம் சவுண்ட்பாக்ஸ்களை விட அட்வான்ஸாக இருப்பதால், பேடிஎம் நிறுவனம் அந்த போட்டியை சமாளிக்க இந்த புதிய சவுண்ட்பாக்ஸ்களை களமிறக்கி இருக்கிறது.


Click it and Unblock the Notifications