ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் இன்று ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி மற்றும் ரியல்மி நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு போன்களும் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போன்களின் விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி அம்சங்கள் (NARZO 70x 5G specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் ப்ரைட்னஸ்,240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி போன். மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த போன்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி கேமரா என்கிற டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 8எம்பி செல்பி கேமரா, 3.5மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ, ரியல்மி யுஐ 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

5000எம்ஏச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி போன். மேலும் 45 வாட்ஸ் சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். மிஸ்டி ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் ஸ்னோ மவுண்டன் ப்ளூ நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
ரியல்மி நார்சோ 70 5ஜி அம்சங்கள் ( realme NARZO 70 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் டிஸ்பிளே வதியைக கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 70 5ஜி போன். மேலும் 2400 ×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
டைமன்சிட்டி 7050 6என்எம் பிராசஸர் வசதியுடன் இந்த ரியல்மி நார்சோ 70 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி68 எம்சி4 ஜிபியு (Mali G68 MC4 GPU)கிராபிக்ஸ் கார்டு மற்றும் ரியல்மி யுஐ 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு இந்த ரியல்மி நார்சோ 70 5ஜி போனில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 70 5ஜி போன். மேலும் 16எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5மிமீ ஆடியோ ஜாக், 5ஜி, புளூடூத் 5.2, டூயல் 4ஜி வோல்ட்இ, ஜிபிஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.13,499-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி போனை ரூ.10,999 விலையில் வாங்கிவிட முடியும்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 70 5ஜி போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.16,999-ஆக உள்ளது. குறிப்பாகத் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ரியல்மி நார்சோ 70 5ஜி போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் இந்த இரண்டு ரியல்மி போன்களையும் அமேசான் தளத்தில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications