நாம் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு சூப்பர் வசதியை கொண்டுவரும் கூகுள் மேப்ஸ்.! அப்படி என்ன வசதி?

|

கூகுள் மேப்ஸ் செயலியில் தொடர்ந்து பயனுள்ள அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக ஓட்டுநர்கள் முதல் சாலை பாதசாரிகள் வரை இந்த கூகுள் மேப்ஸ் வசதியை அதிகம் பயன்படுத்துகின்றனர், காரணம் முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்து கொண்டு செல்வோருக்கு பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ்.

அதிநவீன தொழில்நுட்பம்

அதிநவீன தொழில்நுட்பம்

அதேபோல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் இடங்களை விரல் அசைவில் நம்மால் காணவும் இது வழிவகுக்கிறது. பின்பு சாலைகள் மட்டுமல்லாதுதெருக்கள் மற்றும் வீடுகளையும் நம்மால் இந்த அதிநவீன தொழில்நுட்பம் மூலம் காண முடியும்.

12525 கிராமத்துக்கு 1ஜிபிபிஎஸ் வேகத்தில் இணையம்: ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கும் பணியை தொடக்கி வைத்த முதல்வர்.12525 கிராமத்துக்கு 1ஜிபிபிஎஸ் வேகத்தில் இணையம்: ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கும் பணியை தொடக்கி வைத்த முதல்வர்.

 காற்றின் தன்மை மற்றும் தரம்

காற்றின் தன்மை மற்றும் தரம்

இந்நிலையில் கூகுள் மேப் செயலியில் ஒரு புதிய அட்டகாசமான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நாம் செல்லும் இடத்தில் காற்றின் தன்மை மற்றும் தரம் குறித்து கணித்து அதனை கூகுள் மேப்ஸ் தெரியப்படுத்தும். குறிப்பாக காற்றின் துய்மை,பனிப்படலம் உருவாகியுள்ள பகுதிகள் குறித்து தகவல்களை வழங்கும் கூகுள் மேப்ஸ்.

ரூ.75,000 கோடி மதிப்புள்ள ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி மீது மோதிய விண்கல்: அடுத்த நடந்த டுவிஸ்ட்!ரூ.75,000 கோடி மதிப்புள்ள ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி மீது மோதிய விண்கல்: அடுத்த நடந்த டுவிஸ்ட்!

 ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்

குறிப்பாக இந்த வசதி தற்போது பரிசோதனை முடிந்து அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இந்த புதிய வசதி அறிமுகமாகி உள்ளது. இது வெற்றிபெற்றால் உலக நாடுகள் அனைத்திலும் கூகுள் மேப் இந்த வசதியை சேரக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"தயாராக இருப்போம்" விரைவில் 5ஜி: ரூ.20,000 இருந்தாலே போதும் 5ஜி ஸ்மார்ட்போனே வாங்கலாம்- பெஸ்ட் லிஸ்ட்!

AQI என்கிற அளவுகோல்

AQI என்கிற அளவுகோல்

அதேபோல் காற்றின் தரம் AQI என்கிற அளவுகோல் கொண்டு அளக்கப்படுகிறது. பின்பு இதற்குவேண்டி பர்பிள் ஏர் எனப்படும் குறைந்த செலவில் உருவான சென்சார் நெட்வொர்கை பயன்படுத்துகிறது கூகுள் மேப்ஸ். மேலும் நேஷனல் இண்டராஜென்ஸி ஃபயர் சென்டர் அமைப்புடன்கூட்டணி வைத்துள்ள கூகுள் மேப், அமெரிக்காவில் தீவிபத்து ஏற்படும் இடங்களை மேப் செயலியில் காட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற இடங்களுக்கு செல்லாமல் மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

36000ஆண்டுகள் பழமையான குகை

36000ஆண்டுகள் பழமையான குகை

அதேபோல் சமீபத்தில் கூகுள் மேப்பில் ரகசிய குகை ஒன்று புலப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக வைரலாகி வருகிறது. அதாவது கூகுள் மேப்ஸ் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் 36000ஆண்டுகள் பழமையான குகைகள் இருக்கும் இடம் தெளிவாக ஜூம் செய்யப்பட்டு காண்பிக்கப்படுகிறது.

இந்தியாவிற்குள் அசத்தலாக களமிறங்க ரெடியாகும் OnePlus Nord 2T.. நீங்கள் நினைப்பதை விட மிக விரைவில்..இந்தியாவிற்குள் அசத்தலாக களமிறங்க ரெடியாகும் OnePlus Nord 2T.. நீங்கள் நினைப்பதை விட மிக விரைவில்..

1918-ம் ஆண்டு

1918-ம் ஆண்டு

தெற்கு பிரான்சில் அமைந்துள்ள இந்த சாவெட் குகை ஆனது தனித்துவமான ஓவியங்களுக்கு மிகவும் பெயர்போனது. மேலும் இந்த குகையில் பழங்கால மனிதர்கள் வரைந்த ஏராளமான ஓவீயங்கள் காணக்கிடைக்கின்றன. குகையின் பாறைகளில் இருக்கும் இந்த ஓவியங்கள் உலகின் முதல் கலை அருங்காட்சியமாக இருக்கலாம் என்று கூறுகிறது UNESCO அமைப்பு. குறிப்பாக பிரனான்ஸ் நாட்டின் ஆர்டெச் நதிப் படுகையில் அமைந்துள்ள இந்த குகைகள், 1918-ம் ஆண்டு
கண்டுபிடிக்கப்பட்டன. அதாவது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த குகை, ஓவியங்கள் கலை வரலாற்றில் முக்கிய அங்கமாக இருக்கிறது.

ஜியோ, ஏர்டெல் கொஞ்சம் ஓரமா போங்க.,கம்மி விலையில் தினசரி 3ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.!ஜியோ, ஏர்டெல் கொஞ்சம் ஓரமா போங்க.,கம்மி விலையில் தினசரி 3ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.!

UNESCO அமைப்பு

இந்த இடத்தை UNESCO அமைப்பு உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக கடந்த 2014-ம் ஆண்டு அங்கீகரித்தது. மேலும் இந்த குகைகளின் சுவற்றில் 13 வகையான உயிரினங்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்த வீடியோவை கூகுள் மேப்ஸ் நிறுவனம் வெளியிட இணையத்தில் அதிக வைரலாகி உள்ளது. அதேபோல் வரும் மாதங்களில் கூகுள் மேப்ஸ் செயலியில் பல புதிய அம்சங்கள் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக
கூகுள் மேப்ஸ் செயலியில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google Maps to help you know the air quality: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X