Home
News

Google-ஐ கோர்ட்டுக்கு இழுத்த ஜப்பான் டாக்டர்கள்.. அதுக்கு நான் என்னடா பண்ணுறது.. கதறும் சுந்தர் பிச்சை!

ஜப்பானில் உள்ள மருத்துவர்கள், கூகுள் (Google) நிறுவனத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்து, டோக்கியோ மாவட்ட நீதிமன்றத்தில் (Tokyo District Court) கூகுளுக்கு எதிராக வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். வழக்கு போடும் அளவிற்கு கூகுள் அப்படி என்ன செய்தது? இதோ விவரங்கள்:

கூகுளின் மீது வழக்கு போடும் அளவிற்கு ஜப்பான் டாக்டர்களை கோபம் அடைய செய்துள்ளது - கூகுள் மேப்ஸ் (Google Maps) சேவைதான். கூகுள் மேப்ஸ் என்பது ஜப்பானில் உள்ள பிரபலமான ஆப் ஆகும். அங்குள்ள மக்கள், எந்த மருத்துவரை பார்க்க செல்லலாம் அல்லது எந்த மருத்துவமனைக்கு செல்லலாம் என்பதை தேர்ந்தெடுக்க கூகுள் மேப்ஸ் சேவையில் உள்ள ஆன்லைன் ரீவ்யூக்களை (Online Reviews) பெரிதும் நம்பியிருப்பதாக கூறப்படுகிறது.

Google-ஐ கோர்ட்டுக்கு இழுத்த ஜப்பான் டாக்டர்கள்.. ஏன்?

அதாவது மருத்துவர் அல்லது மருத்துவமனை குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மூலம் அணுகாமல், ஜப்பான் நாட்டு மக்கள், அந்தந்த மருத்துவர் அல்லது மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள் . பயனர்கள் உருவாக்கிய ரிவ்யூக்களை பெரிதும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை தான் ஜப்பான் டாக்டர்களை வழக்கு போடும் அளவிற்கு தூண்டியுள்ளது.

கூகுள் மேப்ஸ் ஆனது சரிபார்க்கப்படாத மற்றும் தவறான எதிர்மறை மதிப்புரைகளை அனுமதிக்கிறது, இதன் மூலம் குறிப்பிட்ட மருத்துவர் அல்லது மருத்துவனமனையின் நற்பெயர் சேதப்படுத்தப்படுகிறது. இது ஒட்டுமொத்த நோயாளியின் பராமரிப்பிலும் (Patient Care) தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஜப்பான் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை தொடர்ந்து இரண்டு முக்கிய பிரச்சினைகளை மையமாக கொண்டு கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Google-ஐ கோர்ட்டுக்கு இழுத்த ஜப்பான் டாக்டர்கள்.. ஏன்?

1. நியாயமற்ற ரீவ்யூக்கள் (Unfair Reviews): கூகுள் மேப்ஸில் உள்ள எதிர்மறையான மதிப்புரைகள், பெரும்பாலும் அநாமதேயமானவைகளாகவும் (anonymous) மற்றும் சூழல்களுக்கு பொறுத்தாதவைகளாகவும் உள்ளன. அவைகள் புனையப்பட்டதாகவோ அல்லது கோபத்தால் தூண்டப்பட்டதாகவோ இருக்கலாம் என்று மருத்துவர்கள் வாதிடுகின்றனர். நோயாளி குறித்த தகவல்களை ரகசியமாக வைக்கவேண்டும் என்பதால்.. இதுபோன்ற ரிவ்யூக்களுக்கு எதிராக பேசுவதும் கடினம் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

2. கூகுளின் நடவடிக்கை இல்லாமை (Google's Lack of Action): தவறான அல்லது தவறாக வழிநடத்தும் தகவல் தொடர்பான கூகுள் மேப்ஸ் ரிவ்யூக்களை பற்றி மருத்துவர்கள் புகார் அளிப்பதற்கும், அந்த புகார்களை நிவர்த்தி செய்வதற்கு கூகுள் நிறுவனமானது போதுமான நடவடிக்கைகளை செய்யவில்லை என்றும் ஜப்பான் மருத்துவர்கள் தொடர்ந்துள்ள வழக்கு குறிப்பிடுகிறது.

Google-ஐ கோர்ட்டுக்கு இழுத்த ஜப்பான் டாக்டர்கள்.. ஏன்?

ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) தொடர்பான போட்டியில் ஏற்கனவே சுந்தர் பிச்சையின் தலை அங்குமிங்கும் உருண்டு கொண்டிருக்கும் வேளையில் ஜப்பான் டாக்டர்களின் இந்த வழக்கு அவருக்கு நிச்சயம் இன்னொரு தலைவலியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஏஐ துறையில் நடக்கும் போட்டி: டெஸ்லா (Tesla), ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) மற்றும் எக்ஸ் (X) ஆகிய நிறுவனங்களின் சொந்தக்காரர் ஆன எலான் மஸ்க் (Elon Musk), தனது சொந்த ஏஐ சாட்பாட் ஆன க்ரோக் ஏஐ-ன் இரண்டாவது வெர்ஷன் (Grok 2 AI) பயிற்சியில் இருப்பதாகவும், அது பொது வெளிக்கு வரும்போது அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்றும் கூறி உள்ளார்.

Google-ஐ கோர்ட்டுக்கு இழுத்த ஜப்பான் டாக்டர்கள்.. ஏன்?

க்ரோக் 2 வெர்ஷன் ஆனது ஒவ்வொரு மெட்ரிக்கிலும் ஏற்கனவே உள்ள ஏஐ-ஐ விட சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் க்ரோக் 1.5 ஆனது கோட்டிங் மற்றும் கணிதம் தொடர்பான பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை பெற்றுள்ளதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பு கூகுள் நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் ஆன ஜெமினிக்கு (Google AI Chatbot Gemini) கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். போதாக்குறைக்கு இன்னொரு போட்டியாளர் ஆன ஓப்பன்ஏஐ நிறுவனமானது, விரைவில் அதன் சாட்ஜிபிடி-5 வெர்ஷனை (ChatGPT 5 Version) ரிலீஸ் செய்ய உள்ளது.

ஜிபிடி 5 (GPT 5) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஜெனரேட்டிவ் ப்ரீ ட்ரெயின்டு ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் 5 (Generative Pre-Trained Transformers 5) வெர்ஷன் ஆனது ஆட்டோநமஸ் முறையில் செயல்படக்கூடிய ஏஐ ஏஜெண்ட்கள் (AI Agents that can Operate Autonomously) போன்ற புதிய திறன்களை கொண்டு இருக்கும் என்று கூறப்படுவதால்... கூகுள் ஜெமினிக்கு வரும் நாட்கள் மிகவும் கடினமானதாக இருக்கபோகிறது.

Best Mobiles in India

English summary
Japan Doctors Filing Lawsuit Against Google Regarding Negative Online Reviews In Google Maps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X