Google Pay கதை க்ளோஸ்.. மொத்த இந்தியர்களுக்கும் வந்தது Google Wallet ஆப்.. இனி எல்லாமே இதுல தான் பண்ணனும்!
நீண்ட காத்திருப்பிற்கு பின்னர்.. ஒருவழியாக கூகுள் வேலட் ஆப் (Google Wallet App) ஆனது இந்தியாவில் உள்ள பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வழியாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.
இந்தியாவில் கூகுள் வேலட் ஆப் அறிமுகமாகி விட்டதால், இனிமேல் கூகுள் பே (Google Pay App) ஆப்பின் நிலைமை என்ன? கூகுள் வேலட் ஆப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தும் பயனர்களால்.. அதில் என்னென்ன சேவைகளை அணுக முடியும்? என்னென்ன வேலைகளை செய்ய முடியும்? இதோ விவரங்கள்:

இனி கூகுள் பே ஆப்பின் நிலைமை என்ன? கடந்த 2011 இல் அறிமுகமாகி பின்னர் 2018 இல் கூகுள் பே ஆக மாற்றப்பட்ட கூகுள் வேலட் ஆனது இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கூகுள் பெ ஆப்பிற்கு எந்த பாதிப்பும் இருக்காது. அது வழக்கம்போல செயல்படும். அதாவது கூகுள் நிறுவனமானது கூகுள் பே மற்றும் கூகுள் வேலட் ஆகிய இரண்டையும் தனித்தனியான ஆப்களாக வழங்கும்,
இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் கூகுள் வேலட் ஆப்பை பயன்படுத்துபவர்களால் தங்கள் நண்பர்களுக்கு பணம் அனுப்ப முடியும், ஆன்லைனிலும் ஃபிசிக்கல் ஸ்டோர்களிலும் பொருட்களுக்கு பணம் செலுத்த முடியும், என்எப்சி-எனேபிள்டு டெர்மினல்களில் தங்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி டேப் அன்ட் பே செய்ய முடியும்.
ஒட்டுமொத்தமாக கூகுள் பே ஆப்பில் செய்ய முடியும் எல்லா வேலைகளையும்.. கூடவே கூகுள் பே ஆப் வழியாக செய்ய முடியாத சில விஷயங்களையும் கூகுள் வேலட் ஆப் வழியாக நம்மால் செய்ய முடியும். இருந்தாலும் கூட கூகுள் நிறுவனம் இதை ஒரு தனி ஆப் ஆக வழங்குகிறது. பின்னாளில் கூகுள் பே ஆப் காணாமல் போவதற்கான வாய்ப்பு உள்ளதா என்று கேட்டால்.. அதற்கான சரியான பதில் எங்களிடம் இல்லை!
கூகுள் வேலட் ஆப்பில் ஸ்பெஷலாக என்னென்ன வசதிகள் கிடைக்கும்? கூகுள் வேலட் ஆப்பில் பின் பாதுகாப்பு (PIN protection) மற்றும் தொலைந்த போன அல்லது திருடப்பட்ட டிவைஸில் உள்ள சேவையை தொலைவிலிருந்தே முடக்கும் திறன் (Remotely disable the service) போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
கூகுள் வேலட் வழியாக வேறு என்னென்ன செய்யலாம்?
1. பயனர்கள் தங்களுடைய டெபிட் கார்டுகள் (Debit cards), கிரெடிட் கார்டுகள் (Credit cards), லாயல்டி கார்டுகள் (Loyalty cards) மற்றும் கிஃப்ட் கார்டுகளை (Gift cards) தங்கள் கூகுள் வேலட் அக்கவுண்டில் பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.
2. கூகுள் வேலட் பயனர்களால் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமின்றி.. இமெயில் ஐடி (Email ID) அல்லது மொபைல் நம்பர் (Mobile Number) கொண்ட எவருக்கும் பணம் அனுப்பலாம். இது பில்களை பிரிப்பதற்கும், நண்பர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்துவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
3. கூகுள் வேலட் ஆப் பயனர்கள் மற்றவர்களிடமிருந்து நேரடியாக தங்கள் கூகுள் வேலட் அக்கவுண்டிற்கு (Google Wallet Account) பணத்தை பெறலாம். இது நண்பர்களிடமிம் இருந்தோ அல்லது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்களை (Goods and services payments) ஏற்றுக்கொள்வதை மிகவும் எளிதாக்கும்
4. கடைசியாக கூகுள் வேலட் மூலம், கூகுள் வேலட்-ஐ ஒரு கட்டண முறையாக (Payment method) ஏற்கும் இணையதளங்கள் மற்றும் ஆப்களில் பயனர்கள் ஆன்லைனில் வழியாக பணம் செலுத்தலாம். பயனர்கள் ஒவ்வொரு முறையும் தங்கள் கட்டண விவரங்களை உள்ளிடாமல் பணம் செலுத்த அனுமதிப்பதன் மூலம் இது செக் அவுட் செயல்முறையை (Checkout process) இன்னும் நெறிப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications








