Home
News

அய்யய்யோ.. உடனே இந்த 3 App-களையும் DELETE பண்ணிடுங்க.. அப்புறம் நாங்க பொறுப்பு இல்ல.. ஆய்வாளர்கள் அலெர்ட்!

இசெட் (ESET) என்று அழைக்கப்படும் சைபர் செக்யூரிட்டி சாஃப்ட்வேர் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், 3 ஆண்ட்ராய்டு ஆப்களின் பெயர்களை பட்டியலிட்டு, யாரெல்லாம் இந்த ஆப்களை தத்தம் ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்து வைத்து இருக்கிறீர்களோ.. அவைகளை உடனே டெலிட் அல்லது அன்இன்ஸ்டால் செய்யுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏனென்றால்.. இந்த 3 ஆப்களும் ஸ்மார்ட்போனில் உள்ள ஃபைனான்ஷியல் ஆப்களை அணுகி.. ஐடி, பாஸ்வேர்ட் உட்பட பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் திறன்களை கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலோட்டமாக பார்க்கும் போது "அடிப்படை செயல்பாடுகளை" வழங்குவது போல் காட்சியளிக்கும் இந்த 3 ஆப்களிலும் எக்ஸ்ப்ளாயிட்ஸ்பை மால்வேர் (XploitSPY Malware) ஒளிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடனே இந்த 3 App-களையும் DELETE பண்ணிடுங்க.. ஆய்வாளர்கள் அலெர்ட்!

இன்னும் கொடுமையான விஷயம் என்னவென்றால்.. இந்த 3 மால்வேர் ஆப்களுமே கூகுள் பிளே ப்ரொடெக்ட்டிடம் (Google Play Protect) இருந்து கூட தப்பித்து உள்ளன. அறியாதோர்களுக்கு கூகுள் பிளே ப்ரொடெக்ட் என்பது "தீங்கு விளைவிக்கும் ஆப்களை நிறுவுவதைத் தடுக்க" ஒவ்வொரு நாளும் ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள எல்லா ஆப்களையும் ஸ்கேன் செய்யும் ஒருவகையான மெஷின் லேர்னிங் சேவையாகும்.

துரதிர்ஷ்டவசமாக.. கூகுள் நிறுவனத்தின் இந்த பாதுகாப்பை தோற்கடிப்பதற்கான வழிகளை ஹேக்கர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே.. இப்போது நமக்கு வேறு வழியே இல்லை.. கீழ்வரும் 3 ஆப்களில் ஏதேனும் ஒன்றை டவுன்லோட் அல்லது இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வந்தாலும் கூட, அதை உடனே டெலிட் அல்லது அன்இன்ஸ்டால் செய்து விடவும்:

உடனே இந்த 3 App-களையும் DELETE பண்ணிடுங்க.. ஆய்வாளர்கள் அலெர்ட்!

1. டிங்க் மெசஞ்சர் (Dink Messenger)
2. சிம் இன்ஃபோ (Sim Info)
3. டெஃப்காம் (Defcom)
இந்த மூன்று மால்வேர் ஆப்களுமே ஏற்கனவே கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) இருந்து அகற்றப்பட்டு விட்டன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

உங்கள் போன் வேறு ஏதேனும் எக்ஸ்ப்ளாயிட்ஸ்பை மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை பின்வரும் அறிகுறிகளை வைத்து தீர்மானிக்கலாம்?
1. மெதுவான இண்டர்நெட் ஸ்பீட் உட்பட, உங்கள் ஸ்மார்ட்போனின் செயல்திறன் வழக்கத்தை விட மிகவும் மெதுவாக இயங்கும்.
2. உங்கள் அனுமதியின்றி சிஸ்டம் செட்டிங்ஸ் மாற்றப்பட்டு இருக்கும்
3. ஸ்மார்ட்போன் பேட்டரி மிகவும் வேகமாக தீரும்.

உடனே இந்த 3 App-களையும் DELETE பண்ணிடுங்க.. ஆய்வாளர்கள் அலெர்ட்!

எக்ஸ்ப்ளாயிட்ஸ்பை மால்வேர் ஆப்களால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஃபைனான்ஷியல் ஆப்களில் இருந்து பணம் காணாமல் போய் இருந்தால், நீங்கள் ஏற்கனவே எக்ஸ்ப்ளாயிட்ஸ்பை மால்வேரால் பாதிக்கப்பட்டு விட்டீர்கள் என்று அர்த்தம். பணத்தை தவிர்த்து உங்களை பற்றிய தனிப்பட்ட விவரங்களும் கூட திருடப்பட்டு இருக்கும்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இதுபோன்ற மால்வேர் ஆப்களின் "நுழைவை" தவிர்ப்பது எப்படி?
மால்வேர் ஆப்களால் பாதிக்கப்படுவதை தவிர்க்க நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, நீங்கள் எந்தவொரு ஆப்பையும் இன்ஸ்டால் செய்வதற்கு முன்பும், சில சின்ன சின்ன சோதனைகளை செய்ய வேண்டும்.

1. அதிக எண்ணிக்கையிலான டவுன்லோட்ஸ் மற்றும் ரிவ்யூஸ் இல்லையா? - தவிர்த்து விடவும்!
2. எக்கச்சக்கமான பெர்மிஷன்களை கேட்கிறதா? - அன்இன்ஸ்டால் செய்து விடவும் (ஏனெனில் பிற ஆப்களை ஈர்க்கும் திறன் கொண்ட மால்வேர் ஆப்கள் தான் எக்கச்சக்கமான பெர்மிஷன்களை கேட்கும்)
3. கூகுள் பிளே ஸ்டோர் மிகவும் பாதுகாப்பான இடம் தான். ஆனாலும் அவ்வப்போது, திட்டமிடுவது போல் விஷயங்கள் நடப்பதில்லை, எனவே நீங்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம்.

கூகுள் பிளே ஸ்டோர் வழியாக மட்டும் தான் மால்வேர் ஆப்கள் பரவுமா? கிடையவே கிடையாது. பிளே ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ள ஆப்களில் காணப்படுவதை தவிர்த்து, மால்வேரால் பாதிக்கப்பட்ட அட்டாச்மென்ட்-ஐ உள்ளடக்கிய இமெயில், ஆன்லைன் வழியாக வெளியிடப்படும் தீங்கிழைக்கும் விளம்பரங்கள் மற்றும் பார்க்கும்படி தூண்டுதலை உருவாக்கும் மோசடி இணையதளங்கள் வழியாகவும் கூட மால்வேர் பாதிப்பு ஏற்படும்.

Best Mobiles in India

English summary
New XploitSPY Malware Warning Delete these 3 Android Apps Which Steal Money From Financial Apps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X