ரூ.75,000 கோடி மதிப்புள்ள ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி மீது மோதிய விண்கல்: அடுத்து நடந்த டுவிஸ்ட்!

|

சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மீது விண்கல் மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரபஞ்சம் தோன்றியபோது உருவான நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசா உருவாக்கியது.

மிகப்பெரிய பட்ஜெட்

மிகப்பெரிய பட்ஜெட்

கடந்த ஆண்டு பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் இந்த தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது. குறிப்பாக இந்திய மதிப்பில் 75 ஆயிரம் கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக உழைத்து ஆய்வாளர்கள்
இந்த ஜேம்ஸ் வெப் விண்வெளிதொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

100 மடங்கு சக்தி மற்றும் திறன்

100 மடங்கு சக்தி மற்றும் திறன்

பிரபஞ்சம் தோன்றியபோது உருவான நட்சத்திரங்களை குறித்து ஆய்வு செய்வதற்கு இந்த அதிநவீன ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசா அமைப்பு உருவாக்கியது. அதுவும் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிஆனது முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளியில் ஏவப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கியை விட 100 மடங்கு சக்தி மற்றும் திறன் கொண்டதாகும்.

ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலம் சேர்ப்பது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலம் சேர்ப்பது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?

தங்கக் கண்ணாடி உள்ளது

தங்கக் கண்ணாடி உள்ளது

அதேபோல் 1990ல் நாசா அனுப்பிய 'ஹப்பிள்' என பெயரிடப்பட்ட தொலைநோக்கியில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசா உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் தங்கக் கண்ணாடி உள்ளது.அதன் அகலம் 21.32 அடி. பெரிலியத்தால் செய்யப்பட்ட 18 அறுகோண துண்டுகளை இணைத்து இந்த கண்ணாடி தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துண்டிலும்
48.2 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு பிரதிபலிப்பானாக செயல்படுகிறது.

"தயாராக இருப்போம்" விரைவில் 5ஜி: ரூ.20,000 இருந்தாலே போதும் 5ஜி ஸ்மார்ட்போனே வாங்கலாம்- பெஸ்ட் லிஸ்ட்!

6.2 டன் எடைகொண்ட தொலைநோக்கி

6.2 டன் எடைகொண்ட தொலைநோக்கி

6.2 டன் எடைகொண்ட இந்த தொலைநோக்கி -230 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் இயங்கக்கூடியது. பேரண்டத்தை பல்வேறு விதமாக இந்த தொலைநோக்கி புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. அவற்றை வரும் ஜூலை 12-ம் தேதி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட இருப்பதாக தகவல் வெளிவந்தன.

ரூ.300 முதல் ரீசார்ஜிங் ஃபேன்.. கரண்ட் இல்லாவிட்டாலும் சில்லுனு காத்து வாங்கலாம்.. உடனே வாங்குங்கள்..ரூ.300 முதல் ரீசார்ஜிங் ஃபேன்.. கரண்ட் இல்லாவிட்டாலும் சில்லுனு காத்து வாங்கலாம்.. உடனே வாங்குங்கள்..

  5 முறை விண்கல் தொலைநோக்கியில் மோதியது

5 முறை விண்கல் தொலைநோக்கியில் மோதியது

இந்த நிலையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மீது சிறிய விண்கல் ஒன்று மோதியதாக அறிவித்திருக்கிறது நாசா. அதுவும் திறந்த வடிவமுடைய இந்த தொலைநோக்கியில் பொருத்தப்பட்டிருக்கும் பெரிலியம் தங்க தகடுகளில் சி-3 என்று அழைக்கப்படும் ஒரு தகட்டினை இந்த விண்கல்தாக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தொடர்ந்து 5 முறை இந்த விண்கல் தொலைநோக்கியில் மோதியிருப்பதாக தெரிகிறது.

ஜியோ, ஏர்டெல் கொஞ்சம் ஓரமா போங்க.,கம்மி விலையில் தினசரி 3ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.!ஜியோ, ஏர்டெல் கொஞ்சம் ஓரமா போங்க.,கம்மி விலையில் தினசரி 3ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.!

எந்த பாதிப்பும் ஏற்படாது

எந்த பாதிப்பும் ஏற்படாது

விண்கல் தாக்கினாலும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் செயல்பாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஆராய்ச்சியாளர்ககள் கூறியுள்ளனர். குறிப்பாக விண்வெளியில் இதுபோன்ற விண்கற்கள் இந்ததொலைநோக்கியில் மோதும் என்பது எதிர்பார்த்தே, அதற்கு தகுந்தபடி உலோகங்களைதேர்ந்தெடுத்து பயன்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக பிரதிபலிப்பானில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள தகட்டின் நிலையை பொறியாளர்கள் மாற்றியமைக்க இருப்பதாகவும், இதன் மூலம் தெளிவான காட்சியை பெறமுடியும் என்றும் நாசா அறிவித்துள்ளது.

உலகம் தோன்றியது எப்படி?

உலகம் தோன்றியது எப்படி?

உலகம் தோன்றியது எப்படி என்று கூட இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள். பொதுவாக நட்சத்திரங்கள் இறந்தாலும் பல ஒளி ஆண்டுகள்தொலைவில் இருப்பதால் அதன் ஒளி நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். அந்த நட்சத்திரம் இறந்தாலும் அதன் ஒளியை வைத்து அதனை ஆராய முடியும். இப்படிபல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இறந்த நட்சத்திரங்கள் குறித்து இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆராய போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
James Webb Space Telescope hit by a meteoroid: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X