Home
News

சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?

கூகுள் நிறுவனமானது மூன்றாம் தரப்பு ஆட் பிளாக்கர் ஆப்களை (Third Party Ad Blocker Apps) உட்பட ஒட்டுமொத்த ஆட் பிளாக்கர்களையும் ஒழித்துக்கட்ட கூடிய வேலை ஒன்றை பார்த்துள்ளது. அதென்ன வேலை? பயனர்களுக்கு என்ன எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது? அதை மீறினால் என்னவாகும்? இதோ விவரங்கள்:

கூகுள் (Google) நிறுவனமானது ஆட் பிளாக்கர்களுக்கு எதிரான தனது கடுமையான நடவடிக்கைகளை மொபைல் டிவைஸ்களுக்கும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. கூகுள் நிறுவனம் தனது வீடியோ பிளாட்ஃபார்ம் (Video Platform) ஆன யூட்யூப்பின் பயனர்களுக்கு (YouTube Users) முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளது.

Ad Blockers ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning!

மொபைல்களில் மூன்றாம் தரப்பு ஆட் பிளாக்கர் ஆப்களை பயன்படுத்துவதால், பஃபரிங் சிக்கல்கள் (Buffering Problems) ஏற்படலாம் அல்லது "இந்த ஆப்பில் பின்வரும் கன்டென்ட் கிடைக்கவில்லை (The following content is not available on this app) என்கிற எரர் மெசேஜை (Error ம் Message) எதிர்கொள்ளலாம் என்று யூட்யூப் பயனர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இது ஆட் பிளாக்கர்களுக்கு எதிரான கூகுள் நிறுவனத்தின் முதல் நடவடிக்கை அல்ல. உலகளவில் உள்ள யூட்யூப் பயனர்கள் அனைவருமே வீடியோ பிளேபேக்கின் போது விளம்பரங்களை பார்க்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றனர். விளம்பர்ங்களை பார்க்க விரும்பவில்லை என்றால் கட்டண சேவையான யூட்யூப் பிரீமியமிற்கு (YouTube Premium) மாறுமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.

Ad Blockers ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning!

இதற்கு எதிராக ஆட் பிளாக்கர் எக்ஸ்டென்ஷன்களை (Ad Blocker Extensions) பயன்படுத்தும் பயனர்களுக்கு யூட்யூப் இயங்குதளமானது செயலிழக்கும் (Deactivate) நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது இந்த கிராக்டவுன் (Crackdown) நடவடிக்கை, மொபைல்களில் உள்ள மூன்றாம் தரப்பு ஆட் பிளாக்கர் ஆப்களுக்கும் வந்துள்ளது.

இதன் மூலம் யூட்யூப் தனது கொள்கைகளின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் கொள்கைகள் மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்தி விளம்பரங்களை முடக்குவதற்கு எதிராக உள்ளது. ஏனென்றால் இப்படி செய்வதால், பார்வையாளர்கள் காணும் விளம்பரங்களை வைத்து பணம் சம்பாதிக்கும் படைப்பாளிகளின் உழைப்பு மற்றும் திறமை வீணாகிறது.

Ad Blockers ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning!

கூகுள் நிறுவனத்தின் இந்த உத்தரவு ஆட்கார்ட் (AdGuard) போன்ற மொபைல் ஆட் பிளாக்கர்களை துவம்சம் செய்யும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அறியாதோர்களுக்கு ஆட்கார்ட் என்பது அதன் ஆப்பிற்குள் யூட்யூப் கன்டென்ட்களை எந்த தடையும் இல்லாமல் பார்க்க உதவும் ஒரு ஆப் ஆகும்.

"எங்கள் விதிமுறைகளை மீறும் ஆப்களை அடையாளம் காணும் பட்சத்தில் எங்கள் பிளாட்ஃபார்ம், படைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்" என்றும் யூட்யூப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை எல்லாம் எதிர்கொள்ள விரும்பாத பயனர்கள் யூட்யூப் பிரீமியம் சேவைக்குள் வருமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

யூட்யூப் சேவையில் மட்டுமின்றி கூகுள் நிறுவனமானது கடந்த சில வாரங்களில், அதன் பல வகையான சேவைகளில் பெரிய-பெரிய மாற்றங்களை செய்து வருகிறது. அவைகளில் ஜிமெயில் சேவைக்கு கொண்டுவரப்பட்ட புதிய விதிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஜிமெயிலுக்கு வந்த அனைத்து புதிய விதிகளுமே ஜிமெயில் பயனர்களின் இன்பாக்ஸிற்கு வரும் ஸ்பேம் இமெயில்களின் அளவை குறைப்பதையும், பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளன.

இதன்கீழ் புதிய அங்கீகாரத் தேவைகளை பூர்த்தி செய்யாதை பல்க் செண்டர்களால் அனுப்பப்படும் இமெயில்களானது கூகுளால் நிராகரிக்கப்படும் என்றும், ஒருமுறை பல்க் செண்டர் என்கிற ஸ்டேட்டஸை பெற்றுவிட்டால், அதற்கு எந்த விதமான காலாவதி தேதியும் இருக்காது. அவர்கள் நிரந்தரமாக பல்க் செண்டர் என்று முத்திரை குத்தப்படுவார்கள் என்றும், பல்க் செண்டர்கள் அனைவரும் ஒரே கிளிக்கில் அன்சப்ஸ்க்ரைப் செய்யும் விருப்பத்தை (One-click unsubscribe option) சேர்க்க வேண்டும் என்றும் கூகுள் உத்தரவிட்டுள்ளது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஜிமெயில் ஆப் சேவையில் ஜெமினி ஏஐ-யின் திறன்கள் (Gemini AI Capabilities) சேர்க்கப்பட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஜிமெயில் ஆப்பில் உள்ள ஹெல்ப் மீ ரைட் (Help me write) அம்சமானது, இனிமேல் வாய்ஸ் ப்ராம்ட்டிங் மற்றும் இன்புட்டை (Voice prompting and input) ஆதரிக்கும்.

இந்த அம்சத்தின் கீழ் பேசுவதன் மூலம் உங்களால் ஒரு இமெயிலை எழுத முடியும். கூடவே ஜிமெயிலில் உள்ள ஜெமினி ஏஐ-க்கு இன்ஸ்டன்ட் பாலிஷ் (Instant Polish) என்கிற புதிய அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்கீழ் ஒரே ஒரு கிளிக்கில் தோராயமான சில குறிப்புகளை மெருகூட்டப்பட்ட ஒரு இமெயிலாக மாற்ற முடியும்.

Best Mobiles in India

English summary
Google Started to Crackdown Third Party Ad Blocker Apps In Mobile and Warning YouTube Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X