Home
News

சுந்தர் பிச்சைக்கு சுத்தி போடுங்கப்பா.. Google-ன் இந்த கட்டண சேவை இனிமேல் FREE.. சும்மா கிளிக் பண்ணா போதும்!

அட யாராச்சும் நம்ம சுந்தர் பிச்சைக்கு சுத்தி போடுங்கப்பா.. மைக்ரோசாஃப்ட் காரனோ.. இல்ல சாட்ஜிபிடி ஓனரா கண்ணு வச்சிட போறானுங்க.. என்று கூறும் அளவிற்கு கூகுள் (Google) நிறுவனமானது தொடர்ச்சியான முறையில் பல அப்டேட்களை.. பல வேலைகளை செய்த வண்ணம் உள்ளது.

அதன் தொடர்ச்சியாக, கூகுள் போட்டோஸ் (Google Photos) சேவையின் கீழ்.. தற்போது வரையிலாக சந்தா கட்டணத்தின் கீழ் அணுக கிடைக்கும் சில முக்கிய அம்சங்கள் இனிமேல் முற்றிலும் இலவசமாக, அனைத்து பயனர்களுக்கும் அணுக கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதென்ன அம்சங்கள்? அதனால் என்ன பயன்? இவைகள் எப்போது முதல் இலவசமாக்கப்படும்? இதோ விவரங்கள்:

Google-ன் இந்த கட்டண சேவை இனிமேல் FREE!

கூகுள் போட்டோஸ் சேவையின் கீழ் அணுக கிடைக்கும் மேஜிக் ஏரேசர் (Magic Eraser), போட்டோ அன்பிளர் (Photo Unblur) மற்றும் போர்ட்ரெயிட் லைட் (Portrait light) போன்ற ஏஐ அம்சங்கள, வருகிற மே 15 ஆம் தேதி முதல் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கூகுள் போட்டோஸ்-ஐ பயன்படுத்தும் எவருமே, எந்த சந்தாவும் இல்லாமல் மேற்குறிப்பிட்ட அம்சங்களை பயன்படுத்தலாம். மேலும் பிக்சல் டேப்லெட்டுகள் உட்பட மேலும் பல டிவைஸ்களிலும் இந்த அம்சங்களை பயன்படுத்தலாம். அப்படியான டிவைஸ் - க்ரோமஓஎஸ் எடிஷன் 118+ உடனான க்ரோம்புக் பிளஸ் ஆக இருக்க வேண்டும்; குறைந்தபட்சம் 3ஜிபி ரேம்; ஆண்ட்ராய்டு 8.0 / ஐஓஎஸ் அல்லது அதற்கு மேற்பட்டதாக ஓஎஸ் கொண்டிருக்கருக்க வேண்டும் என்பதே கூகுள் கேட்கும் தகுதிகளாகும்.

Google-ன் இந்த கட்டண சேவை இனிமேல் FREE!

நினைவூட்டும் மேஜிக் ஏரேசர் என்பது, உங்கள் புகைப்படங்களிலிருந்து தேவையற்ற பொருட்களை அல்லது மோசமான அல்லது தேவையில்லாத அல்லது குறுக்கே வந்த ஃபோட்டோபாம்பர்களை (Photobombers) ஒரு சில கிளிக்குகளில் அகற்ற உதவும் ஒரு ஏஐ அம்சமாகும். இந்த அம்சம் முதன்முதலில், 2023 ஆம் ஆண்டில் பிக்சல் போன்களுக்கான பிரத்யேக அம்சமாக அறிவிக்கப்பட்டது.தற்போது அனைவருக்கும் வந்து சேரவுள்ளது.

போட்டோ அன்பிளர் என்பது பெயர் குறிப்பிடுவது போலவே மங்கலான புகைப்படங்களை கிளியர் செய்ய உதவும் ஒரு (Clear Blurry Photographs) அம்சமாகும். அடுத்ததாக உள்ள போர்ட்ரெய்ட் லைட் எனபது போர்ட்ரெய்ட் புகைப்படங்களில் ஒளியின் நிலை மற்றும் பிரகாசத்தை சரிசெய்ய அனுமதிக்கும் (Adjust position and Brightness of light) அம்சமாகும்.

Google-ன் இந்த கட்டண சேவை இனிமேல் FREE!

கூகுள் போட்டோஸ் மட்டுமின்றி கூகுள் நிறுவனம் அதன் வொர்க்ஸ்பேஸ் சூட் (Workspace suite) முழுவதுமாக.. அதாவது ஜிமெயில், ஷீட்ஸ் (Sheets), டாக்ஸ் (Docs) உட்பட அதன் பல சேவைகளில்.. பல்வேறு வகையான அப்டேட்களை கொண்டு வந்துள்ளது மற்றும் பயனர்களின் ப்ரொடெக்டிவிட்டியை மேம்படுத்தும் நோக்கத்தின்கீழ் ஜெமினி ஏஐ-யின் திறன்களையும் (Gemini AI Capabilities) சேர்த்துள்ளது.

ஜிமெயில் சேவைக்கு கொண்டுவரப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஜிமெயில் ஆப்பில் உள்ள ஹெல்ப் மீ ரைட் (Help me write) அம்சமானது, இனிமேல் வாய்ஸ் ப்ராம்ட்டிங் மற்றும் இன்புட்டை (Voice prompting and input) ஆதரிக்கும்படி அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஜிமெயில் ஆப்பில் உள்ள ஏஐ அசிஸ்டென்ட்டால் இனிமேல் உங்களுடைய குரலை கேட்க முடியும்; உங்கள் குரலை பயன்படுத்தி இமெயில்களை அனுப்ப முடியும்.

இதோடு ஜிமெயிலில் உள்ள ஜெமினி ஏஐ-க்கு இன்ஸ்டன்ட் பாலிஷ் (Instant Polish) என்கிற புதிய அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் கீழ்.. ஒரே ஒரு கிளிக்கில் தோராயமான சில குறிப்புகளை (Rough Notes) மெருகூட்டப்பட்ட ஒரு மின்னஞ்சலாக (Polished Email) மாற்ற முடியும்.

சில தினங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆன ஆண்ட்ராய்டு 15-ன் முதல் பப்ளிக் பீட்டாவை (Public Beta) வெளியிட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் ஆனது வருகிற மே 14 ஆம் தேதி நடைபெறும் கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாடான (Google's annual developer conference).. கூகுள் ஐ/ஓவி 2024 நிகழ்வில் (Google I/O 2024 Event) அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பதையும் இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Photos AI Editing Tools like Magic Eraser Photo Unblur Are Free For All Users From May 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X