வேலை செய்யும் இடத்தில் இதை எல்லாம் செய்யாதீங்க.. Google ஊழியர்களை எச்சரித்த சுந்தர் பிச்சை.. ஏன்?
கூகுள் நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்த கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளன.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குச் சுந்தர் பிச்சை (sundar pichai) எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதாவது கடந்த இரண்டு நாட்களாக கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இஸ்ரேலுடன் நெருக்கமாக பணிபுரிந்து, நிறுவனத்திற்கு எதிராக உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தியதற்காக ஒன்பது ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதன்பின் ஒரு நாள் கழித்து போராட்டங்களோடு தொடர்புடைய 28 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு தலைவர் கிறிஸ் ராகோவ் ஊழியர்களுக்குக் கடுமையான செய்தியை அனுப்பியிருந்தார். அதில் எங்கள் பணியிடத்தில் இதுபோன்ற நடத்தைக்கு இடமில்லை. அதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இது கொள்கைகளை மீறும் செயல் என்று தெரிவித்தார்.

இதற்குப்பிறகு ஊழியர்களுக்கு கூகுளின் சிஇஒ (google ceo) சுந்தர் பிச்சையும் எச்சரிக்கும் வகையில் செய்தியைப் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், கூகுள் ஒரு துடிப்பான திறந்த விவாதத்தின் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது அற்புதமான தயாரிப்புகளை உருவாக்குவதற்கும், சிறந்த யோசனைகளைச் செயலாக மாற்றுவதற்கும் உதவுகிறது. அதைப் பாதுகாப்பது முக்கியம் என்று தெரிவித்தார்.
அதேபோல் எங்கள் கொள்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் தெரிவாக உள்ளன. இது ஒரு பிசினஸ், இங்கு சக பணியாளர்களைச் சீர்குலைக்கும் வகையில் அல்லது அவர்களுக்குப் பாதுகாப்பற்றதாக உணரும் வகையில் செயல்படுவது, நிறுவனத்தைத் தனிப்பட்ட தளமாகப் பயன்படுத்த முயற்சிப்பது அல்லது சீர்குலைக்கும் பிரச்சனைகள் அல்லது அரசியலை விவாதம் செய்வது போன்றவற்றுக்கான இடமில்லை என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
மேலும் சமீபத்தில் கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு பைண்ட் மை டிவைஸ் (FIND MY DEVICE) என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அம்சத்தின் சிறப்பு என்னென்ன என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம். அதாவது கூகுள் கொண்டுவந்துள்ள பைண்ட் மை டிவைஸ் அம்சம் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களின் காணாமல் போன சாதனங்களை எளிதில் கண்டறிய முடியும்.
குறிப்பாக காணாமல் போகும் போன்கள், ஹெட்போன்கள் போன்றவற்றைக் கண்டுபிடிக்க இந்த அம்சம் பயன்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பைண்ட் மை டிவைஸ் அம்சம் முதல் கட்டமாக அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே அங்கு இருக்கும் பயனர்கள் இதைப் பயன்படுத்தலாம்.

இந்தியாவில் பைண்ட் மை டிவைஸ் (FIND MY DEVICE) அம்சம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகவில்லை. இருந்தபோதிலும் இந்த பைண்ட் மை டிவைஸ் அம்சம் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஃபைண்ட் மை டிவைஸ் போன்றே, கூகுளின் ஃபைண்ட் மை டிவைஸ் ப்ளூடூத் சிக்னல்களை கொண்டு காணாமல் போன சாதனங்களைக் கண்டறியும்.
மேலும் இந்த அம்சம் மூலம் அருகாமையில் உள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களில் இண்டர்நெட் இணைப்பு இல்லை என்றாலும் கூட கண்டறிய முடியும். பின்பு கூகுளின் ஃபைண்ட் மை டிவைஸ் அம்சம் ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்குப் பின் வெளியான வெர்ஷன்களில் வழங்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதில் உங்களது லொகேஷன் தொடர்பான தரவுகள் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் முறையில் சேமிக்கப்படும் என்பதால் உங்களது தனிப்பட்ட தகவல்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது.


Click it and Unblock the Notifications