அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. இரண்டு டிஸ்பிளே.. புதிய Nokia போன் ரெடி.. எந்த மாடல்?
எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் உலகம் முழுவதும் எச்எம்டி பெயரில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்நிறுவனம் நோக்கியா போன்களை அறிமுகம் செய்வதை நிறுத்தவில்லை. அதாவது அவ்வப்போது நோக்கியா போன்கள் வெளிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் நோக்கியா என்90 என்ற போனின் கான்செப்ட் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த நோக்கியா என்90 போன் விரைவில் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தனித்துவமான டிசைன் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். இந்த போன் மட்டும் வெளிவந்தா ல்கண்டிப்பாக அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு இருக்கும். மேலும் இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

நோக்கியா என்90 அம்சங்கள் (Nokia N90 specifications): நோக்கியா என்90 போனின் பேக் பேனலில், பார்ப்பவர்களைச் சட்டென ஈர்க்கக்கூடிய ஒரு கவர்ச்சியான எல்இடி ஸ்ட்ரிப்பை (LED Strips) கொண்டுள்ளது. குறிப்பாக நத்திங் போன்களில் செயல்படுவதை போலவே, இது நோட்டிஃபிக்கேஷன் லைட் (Notification Light)ஆக செயல்படும் என்று கூறப்படுகிறது.
இன்னும் தெளிவாக கூறவேண்டும் என்றால், கேமிங் செய்யும் போது, மொபைல் சார்ஜிங் செய்யும் போது மற்றும் உள்வரும் அழைப்புகள் அல்லது மெசேஜ்கள் போன்ற அறிவிப்புகளின் போது, இதன் பேக் பேனலில் உள்ள ஆர்ஜிபி லைட்டிங்-எனேபிள்டு ஆர்க் இன்டர்பேஸ் ஆனது வெவ்வேறு வண்ணங்களில் ஒளிரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக எல்இடி ஸ்ட்ரிப்பை கொண்ட போன்களுக்கு தான் தற்போது அதிக வரவேற்பு உள்ளது.

கிளாசிக் டி9 கீபோர்டு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா என்90 போன். மேலும் இந்த போனில் இரண்டு டிஸ்பிளே வசதி உள்ளது. அதுவும் சுழல் வடிவ டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த போன் 100எம்பி கேமரா உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக நோக்கியா என்90 போன் ஆனது அலுமினியம் பாடி மற்றும் ஃபிளிப் பேக்டர் (flip factor) கொண்டுள்ளது. அதேபோல் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே சிறந்த ஆடியோ அனுபவம் இதில் கிடைக்கும். இதுதவிர பல்வேறு புதிய அம்சங்கள் நோக்கியா என்90 போனில் உள்ளன. அதேபோல் இந்த போன் சற்று உயர்வான விலையில் தான் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன.
மேலும் சமீபத்தில் நோக்கியா 6310 (2024), நோக்கியா 5310 (2024), நோக்கியா 230 (2024) ஆகிய மூன்று போன்கள் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய நோக்கியா போன்களின் அம்சங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
நோக்கியா 6310 (2024) அம்சங்கள் (Nokia 6310 specifications): இந்த நோக்கியா 6310 (2024) மாடல் 1450எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட விஜிஏ கேமரா, 2.8-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ் கார்டு ஸ்லாட் மற்றும் பல சிறப்பான வசதிகளுடன் இந்த அசத்தலான நோக்கியா 6310 (2024) மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 5310 (2024) அம்சங்கள் (Nokia 5310 specifications): யுனிசாக் 6531எப் (Unisoc 6531F) சிப்செட் உடன் நோக்கியா 5310 (2024) போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போன் உயரமாகவும் அகலமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2.8-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 1450எம்ஏஎச் பேட்டரி வசதி, எப்எம் ரேடியோ, டூயல் ஸ்பீக்கர்கள், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற வசதிகள் இந்த போனில் உள்ளன.
நோக்கியா 230 (2024) அம்சங்கள் (Nokia 230 specifications): 2எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா 230 (2024) மாடல். அதேபோல் இந்த போனில் 2எம்பி செல்பி கேமரா, 2.8-இன்ச் டிஎப்டி டிஸ்பிளே, யுனிசாக் 6531எப் (Unisoc 6531F) சிப்செட், 1450எம்ஏஎச் பேட்டரி, யுஎஸ்பி போர்ட், புளூடூத் 5.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
Photo courtesy: trendhunter.com, nokiamob
Source: trendhunter.com


Click it and Unblock the Notifications








