மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் டிசைன், டூயல் அமோலெட் டிஸ்பிளே, 64எம்பி கேமரா, 45W சார்ஜிங், 4000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் எந்தவொரு ஃபிளிப் மாடலும் கிடைக்காத பட்ஜெட்டில் டெக்னோ பாண்டம் வி ஃபிளிப் (TECNO PHANTOM V Flip) போன் விற்பனைக்கு வந்துள்ளது.
ஃபிளிப் போன் பிரியர்களுக்கு இதைவிட கம்மி விலையில் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் வேறெந்த போனும் கிடைக்காது. பீச்சர்கள் மட்டுமல்லாமல், ரிங் அவுட்டர் டிஸ்பிளே, கர்வ்ட் எட்ஜ் பாடி போன்ற டிசைன்களிலும் இந்த டெக்னோ பாண்டம் வி ஃபிளிப் மாடல் பின்னியெடுக்கிறது. இப்போது, பீச்சர்களை பார்த்து விடுவோம்.

டெக்னோ பாண்டம் வி ஃபிளிப் அம்சங்கள் (TECNO PHANTOM V Flip Specifications): இந்த போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 8050 6nm) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஹைஓஎஸ் 13.5 (HiOS 13.5) கொண்டிருக்கிறது. ஆகவே, மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம்.
இந்த டெக்னோ போனில் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஒரே வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. டிஸ்பிளே பீச்சர்கள் அல்ட்ரா பிரீமியமாக வருகின்றன. மெயின் டிஸ்பிளேவில் 6.9 இன்ச் (1080 × 2640 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) பேனல் வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.
1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல அவுட்டரில் 1.32 இன்ச் (360 x 360 பிக்சல்கள்) சர்க்குலர் அமோலெட் டிஸ்பிளே (Circular AMOLED Display) வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே உடன் டூயல் கேமரா சிஸ்டம் (Dual Camera System) இடம் பெற்றுள்ளது.

ஆகவே, 64 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. அல்ட்ரா கிளியர் ஃப்ரீகேம் சிஸ்டம் (Ultra Clear FreeCam System) வருகிறது. இதில், ப்ரீகேம் செல்பீ, ப்ரீகேம் டைம்-லேப்ஸ், ப்ரீகேம் வீடியோ கால் போன்ற பீச்சர்கள் வருகின்றன. அதேபோல 32 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டிருக்கிறது. இதில் ஆட்டோபோகஸ் (Autofocus) சப்போர்ட் வருகிறது.
இந்த ஃபிளிப் போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4000mAh பேட்டரி வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. 3டி கர்வ்ட் டிசைனில் 6.95 மிமீ தடிமன் மற்றும் 172 கிராம் எடை உடன் அல்ட்ரா ஸ்லிம் பாடி கொண்டிருக்கிறது.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 6 (Wi-Fi 6), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) கனெக்விடிட்டிகள் வருகின்றன. மிஸ்டிக் டவுன் (Mystic Dawn) மற்றும் ஐகானிக் பிளாக் (Iconic Black) ஆகிய 2 கலர்கள் கொண்டிருக்கிறது. இந்த போனின் விலை ரூ.54,999ஆக இருக்கிறது.
இப்போது, அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.5000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.7000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பேங்க் டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ஆகவே, இந்த போனை ரூ.12000 டிஸ்கவுண்ட் போக ரூ.45,999 பட்ஜெட்டில் வாங்கலாம். ஈஎம்ஐ ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications