கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
கம்ப்யூட்டர் (Computer) பயன்படுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பெரும்பாலானோருக்கு ஏன் கீபோர்டில் F மற்றும் J கீ-களில் மட்டும் ஒரு சிறிய கோடு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரியாமல் இருக்கிறார்கள்.
கம்ப்யூட்டர் என்பது இப்போது நமது வாழ்க்கையை தழுவிய ஒரு முக்கியமான சாதனமாக மாறிவிட்டது. மனிதர்களின் வேலையை சுலபமாக்குவதில் கம்ப்யூட்டருக்கு இப்போது ஒரு முக்கிய பங்கிருக்கிறது. உண்மையை சொல்ல போனால், நம்மிடம் கம்ப்யூட்டர் இல்லை என்றாலும், நம்மை சுற்றியோ அல்லது நாம் வெளியில் செல்லும் இடங்களிலோ அல்லது ஏதேனும் ஒரு இடத்திலாவது ஒரு கம்ப்யூட்டர் சேவையை நாம் அணுக வேண்டிய நிலை நிலவுகிறது என்பதே இன்று நிஜமானது.

F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? (Why only the F and J keys have a dash bump?):
கம்ப்யூட்டர் என்று சொல்லும் பொழுது லேப்டாப், டெஸ்க்டாப் என்று இரண்டுமே வந்துவிடுகிறது. கம்ப்யூட்டரை இயக்க கீபோர்ட் முக்கியமானது. கீபோர்ட் உதவி இல்லாமல் ஒரு கம்ப்யூட்டரை இயக்குவது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்காது. கீபோர்ட் தான் கம்ப்யூட்டரின் இன்புட் சாதனமாக செயல்படுகிறது. கம்ப்யூட்டர் கீபோர்டில் மொத்தம் எத்தனை கீஸ்கள் இருக்கிறது தெரியுமா? ஒரு கீபோர்டில் மட்டும் மொத்தம் 104 கீஸ்கள் இருக்கிறது.
என்ன தான் ஒரு கீபோர்டில் 104 கீஸ்கள் வழங்கப்பட்டிருந்தாலும், உலகளவில் உள்ள எல்லா கீபோர்ட்களிலும் உள்ள F மற்றும் J கீ-களில் மட்டும் ஒரு சிறிய கோடு போன்ற மேடு வழங்கப்பட்டிருக்கிறது. இதை பெரும்பாலானோர் கவனித்திருப்பீர்கள். இன்னும் பெரும்பாலானோர் இப்போது வரை இதை கவனித்திருக்கமாடீர்கள். இந்த F மற்றும் J ஆகிய இரண்டு கீஸ்களில் மட்டுமே ஏன் இந்த கோடு வழங்கப்பட்டுள்ளது? இதற்கான காரணம் என்ன?
இந்த கோடுகள் பற்றி அறியாமல் சிலர் டைப்பிங் செய்கிறார்கள். இந்த கோடுகளின் பயன்பாட்டை பற்றி அறிந்தவர்களில் சிலர், ஏன் விஷயம் தெரியவைத்தவர்களை கேலி செய்கிறார்கள்? இந்த சிறிய கோட்டிற்கு பின்னால் உள்ள உண்மை என்ன என்பதை இப்போது பார்க்கலாம். கீபோர்டில் உள்ள எல்லா கீஸ்களையும் எளிதாக அணுக அனுமதிக்கும் முறைக்கு பெயர் தான் ஹோம் ரோ கீ பொசிஷன் (home row key position) ஆகும்.

கீபோர்டில் எந்த விரலை எந்த கீ-யில் வைப்பது சரியான முறை? எது சரியான டைப்பிங் முறை?
இந்த பொசிஷனில் உங்கள் கைகளை சரியாக வைப்பதற்கு தான் F மற்றும் J கீ-களில் மட்டும் ஒரு சிறிய கோடு போன்ற மேடு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பொசிஷனில் உங்கள் விரல்களை வைப்பது தான் சரியான டைப்பிங் முறை என்றும் கூறப்படுகிறது. உங்கள் கைவிரல்களை F மற்றும் J கீஸ்களில் ஆள்காட்டி விரலை வைத்து, அதற்கு பின் மற்ற 3 விரல்களையும் வைப்பது தான் சரியான டைப்பிங் முறையாக பார்க்கப்படுகிறது.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், A, S, D, மற்றும் F கீகளில் உங்கள் இடது கைவிரல்களும், J, K, L, மற்றும் செமிகோலன் (;) கீகளில் உங்கள் வலது கைவிரகளை வைப்பது தான் சரியான டைப்பிங் முறையாகும். இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் கீபோர்டில் உள்ள அணைத்து கீகளையும் உங்களால் எளிதாக அணுக முடியும் மற்றும் வேகமான டைப்பிங்கிற்கும் இது தான் சிறந்த முறையாக வலியுறுத்தப்படுகிறது.
இதை தவிர்த்து இந்த F மற்றும் J கீ-களில் மட்டும் காணப்படும் சிறிய கோடு போன்ற மேடு பார்வையற்றவர்கள் அவர்களின் கைகளை சரியாக கீபோர்டில் பொசிஷன் செய்ய உதவுகிறது. இந்த இரண்டு காரணங்களுக்காக மட்டுமே நம்முடைய கீபோர்ட்களில் உள்ள F மற்றும் J கீஸ்களில் மட்டும் ஒரு சிறிய கோடு போன்ற மேடு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications