Home
News

Gmail சேவையில் 2 முக்கிய மாற்றங்கள்.. இனிமேல் Email பண்ணுற முறையே மாறும்.. Google அதிரடி!

கூகுள் (Google) நிறுவனத்தின் கிளவுட் நெக்ஸ்ட் 2024 மாநாட்டின் போது, கூகுளின் பிரபலமான இமெயில் சேவையான ஜிமெயிலுக்கு (Gmail) கொண்டு வரப்பட்டுள்ள 2 முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டது. அதென்ன மாற்றங்கள்? இதனால் ஜிமெயில் பயனர்களுக்கு என்ன பயன்? இதோ விரிவான விவரங்கள்:

கூகுள் நிறுவனம் அதன் வொர்க்ஸ்பேஸ் சூட் (Workspace suite) முழுவதுமாக.. அதாவது ஜிமெயில், ஷீட்ஸ் (Sheets), டாக்ஸ் (Docs) உட்பட அதன் பல சேவைகளில்.. பல்வேறு வகையான அப்டேட்களை கொண்டு வந்துள்ளது மற்றும் பயனர்களின் ப்ரொடெக்டிவிட்டியை மேம்படுத்தும் நோக்கத்தின்கீழ் ஜெமினி ஏஐ-யின் திறன்களையும் (Gemini AI Capabilities) சேர்த்துள்ளது.

Gmail சேவையில் 2 முக்கிய மாற்றங்கள்.. Google அதிரடி!

குறிப்பாக ஜிமெயில் சேவைக்கு வந்துள்ள 2 புதிய அம்சங்கள் ஆனது இதுவரை நமக்கு பழக்கமான இமெயில் அனுப்பும் முறையையே முற்றிலும் மாற்றும்படியாக உள்ளது என்றே கூறலாம். இந்த 2 புதிய அம்சங்களுமே மொபைல் ஜிமெயலில் (Mobile Gmail) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் உள்ள ஜிமெயில் ஆப்பிற்கு (Gmail App) கொண்டுவரப்பட்டுள்ளன.

ஜிமெயில் ஆப்பில் உள்ள ஹெல்ப் மீ ரைட் (Help me write) அம்சமானது, இனிமேல் வாய்ஸ் ப்ராம்ட்டிங் மற்றும் இன்புட்டை (Voice prompting and input) ஆதரிக்கும். அதாவது ஜிமெயில் ஆப்பில் உள்ள ஏஐ அசிஸ்டென்ட்டால் இனிமேல் உங்களுடைய குரலை கேட்க முடியும். இதன் மூலம் பயனர்கள் தங்கள் ஜிமெயில் ஆப்பில் இருந்து தங்கள் குரலை பயன்படுத்தி இமெயில்களை அனுப்ப முடியும்.

Gmail சேவையில் 2 முக்கிய மாற்றங்கள்.. Google அதிரடி!

மேலும் ஜிமெயிலில் உள்ள ஜெமினி ஏஐ-க்கு இன்ஸ்டன்ட் பாலிஷ் (Instant Polish) என்கிற புதிய அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் கீழ்.. ஒரே ஒரு கிளிக்கில் தோராயமான சில குறிப்புகளை (Rough Notes) மெருகூட்டப்பட்ட ஒரு மின்னஞ்சலாக (Polished Email) மாற்ற முடியும்.

ஜிமெயிலுக்கு வந்துள்ள இவ்விரு புதிய மேம்படுகளுமே, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இமெயில் அனுப்புவதை எளிமையாக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த இடத்தில்.. கூகுள் டாக்ஸ் அல்லது ஜிமெயிலில் ஹெல்ப் மீ ரைட் அம்சத்தை முயற்சிக்கும் நிறுவன பயனர்களில் 70% பேர் ஜெமினியின் பரிந்துரைகளை கடைபிடிப்பதாக கூகுள் தெரிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Gmail சேவையில் 2 முக்கிய மாற்றங்கள்.. Google அதிரடி!

இதேபோல கூகுள் டாக்ஸ் (Google Docs) சேவையில்.. நியூ டேப்ஸ் (New tabs) என்கிற அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது சிங்கிள் டாக்குமென்ட்டில் பல்வேறு தகவல்களை ஒழுங்கமைக்க உதவும். இதன் பல டாக்குமென்ட்களை ஒன்றாக இணைக்க வேண்டிய அல்லது டிரைவ் மூலம் தேட வேண்டிய தேவை குறையும். மேலும் கூகுள் டாக்ஸில் ஃபுல் ப்ளீட் கவர் இமேஜ்களும் (Full-bleed cover images) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கூகுள் ஷீட்ஸ் (Google Sheets) சேவையில்.. நியூ டேபிள்ஸ் (new tables) என்கிற அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது டேட்டா ஆர்கனைசேஷன் மற்றும் ஃபார்மெட்டிங்கை முன்பைவிட எளிதாக்குகிறது. மேலும் கூகுள் ஷீட்ஸ் ஆனது இப்போது பல்வேறு நோக்கங்களுக்கான பல் வகையான டெம்ப்ளேட்களின் தேர்வையும் வழங்குகிறது,

இதுதவிர்த்து கூகுள் சாட் (Google Chat) சேவையிலும்.. சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. உரையாடல்களை சுருக்குவது மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது உட்பட.. கூகுள் சாட் சேவையில் ஜெமினி ஏஐ-யின் திறன்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோமெட்டிக் மெசேஜ் டிரான்ஸ்லேஷன் (Automatic message translation) மற்றும் 500,000 மெம்பர்கள் வரை என்கிற அதிக ஸ்பேஸ் போன்ற திறன்களும் கூகுள் சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதேபோல கூகுள் மீட் (Google Meet) சேவையில்.. ட்ரான்ஸ்லேட் ஃபார் மீ (Translate for me) என்கிற ஆட்டோமெட்டிக் கேப்ஷன் டிரான்ஸ்லேஷன் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் 69 மொழிகளை ஆதரிக்கிறது. இதோடு சேர்த்து டேக் நோட்ஸ் ஃபார் மீ (Take notes for me) என்கிற புதிய அம்சமும் தற்போது முன்னோட்டத்தில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Added New AI Features Help Me Write Voice Input and Instant Polish in Gmail Mobile App
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X