Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
ப்ளூடூத் அம்சத்தை நிரந்தரமாக ஆஃப் செய்து வைக்க முடியாதபடி புதிய மாற்றத்தை கொண்வர உள்ள கூகுள் (Google) நிறுவனமானது.. அதோடு சேர்த்து, ஆண்ட்ராய்டு (Android) போன்களுக்கான இன்னொரு முக்கிய மாற்றத்தையும் கொண்டு வருகிறது. அது குவாரன்டைன் (Quarantine) என்கிற புதிய அம்சமாகும்.
கூகுள் கொண்டுவரும் குவாரன்டைன் அம்சம் என்றால் என்ன? இதனால் ஆண்டராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு என்ன லாபம்? இதற்க்கு ஏன் குவாரன்டைன் என்று பெயரிடப்பட்டுள்ளது? இது அம்சம் எப்போது நம்முடைய ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு வந்து சேரும்? இதனுடன் வேறு என்னென்ன புதிய அம்சங்கள் வரும்? இதோ விவரங்கள்:

குவாரன்டைன் அம்சம் என்றால் என்ன? குவாரன்டைன் என்பது கூகுள் நிறுவனத்தின் புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆன ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் வழியாக நமக்கெல்லாம் வந்துசேரவுள்ள ஒரு புதிய அம்சமாகும். இந்த அம்சத்தின் வேலை என்னவென்றால்.. உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் அல்லது மால்வேரால் பாதிக்கப்பட்ட ஒரு ஆப்பை நீங்கள் கண்டறிந்த பிறகு, அதை தனிமைப்படுத்த உதவும்.
டெஸ்டிங்கில் உள்ள இந்த அம்சம் ஃபைனல் ஆண்ட்ராய்டு 15 வெளியீட்டில் சேர்க்கப்படும் பட்சத்தில், விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டமில் (Windows Operating System) உள்ள ஆன்ட்டி-வைரஸ் புரோகிராம்களை (Antivirus Program) போலவே ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டமாலும் கூட ஆப்களை "தனிமைப்படுத்தி" வைக்க முடியும்.

மால்வேரால் பாதிக்கப்பட்ட ஒரு ஆப்பை தனிப்படுத்தி வைப்பதால் என்ன ஆகும்? குவாரன்டைன் அம்சம் வழியாக ஒரு ஆப் தனிமைப்படுத்தப்பட்டவுடன், அதன் திறன்கள் கடுமையாக மட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் அதனால் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் எந்தவொரு பாதகமான அல்லது தீங்கு விளைவிக்கும் நடவடிக்கையையும் எடுக்க முடியாது.
இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால் குவாரன்டைன் செய்யப்பட்ட ஒரு ஆப் ஆனது நோட்டிஃபிக்கேஷன்களை (Notifications) காட்டாது, அதன் விண்டோக்கள் மறைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் நிறுத்தப்படும், ரிங்கிங் (Ringing) செய்வது தடுக்கப்படும் மற்றும் ஸ்மார்ட்போனில் உள்ள பிற ஆப்களுடன் அது தொடர்புகொள்வதும் தடுக்கப்படும்.

இதற்கு ஏன் குவாரன்டைன் என்று பெயரிடப்பட்டுள்ளது? மேலோட்டாமாக பார்த்தால் கோவிட்-19 பரவல் தான் இதற்கு காரணம் என்பது போல் தோன்றும். தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி வைக்க பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை தான் - குவாரன்டைன். இப்படி செய்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்றுநோய் பரவாமல் தடுக்க முடிந்தது.
ஆனால் உண்மை என்னவென்றால் குவாரன்டைன் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே புழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தையாகும். கோவிட்-19 தொற்றுநோய்க்கு பின்னர் இது மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையாகி விட்டது. அதன் விளைவாக கூகுள் நிறுவனம் இந்த அம்சத்திற்கு குவாரன்டைன் என்கிற "பொருத்தமான" பெயரை தேர்வு செய்து இருக்கலாம்.

குவாரன்டைன் அம்சம் எப்போது அறிமுகமாகும்? ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ல் இந்த அம்சத்திற்கான குறியீடு மட்டுமே காணப்பட்டுள்ளது. அதாவது பீட்டா வெர்ஷனிலும் கூட இது இன்னும் இயக்கத்திற்கு வரவில்லை. ஆக இந்த அம்சம், நிச்சயம் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ல் இடம்பெறுமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதே அம்சம் கடந்த 2022-இல் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ன் டெவலப்பர் பில்ட்-ல் காணப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ப்ளூடூத் அம்சத்திற்கு என்ன மாற்றம் வரவுள்ளது? ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட் வழியாக ப்ளூடூத் அம்சத்தின் கீழ், ஒரு புதிய ப்ளூடூத் மோட் (New Bluetooth Mode) சேர்க்கப்படவுள்ளது. இந்த புதிய மோட் ஆனது, உங்கள் ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் ஆஃப் செய்யப்பட்டு இருந்தாலும் கூட, அது பார்ப்பதற்கு ஆஃப் செய்யப்பட்டு இருப்பது போல் தோன்றினாலும் கூட, அது லோ-எனர்ஜி லெவலில் (Low-energy state) தொடர்ந்து செயல்படும்.

இதனால் நமக்கு என்ன பயன்? ப்ளூடூத்தின் முக்கிய செயல்பாடுகள் ஆனது இன்ஆக்டிவ் (Inactive) ஆக இருக்கும் மறுகையில், பேட்டரி லைஃப்பும் (Battery Life) கணிசமாக பாதிக்கப்படாமல், பேக்கிரவுண்டில் (Background) அத்தியாவசிய பணிகளை செய்வதன் மூலம் - இந்த புதிய மோட் ஆனது - ப்ளூடூத் சேவைகளின் வசதி மற்றும் செயல்திறனை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று கூகுள் கூறுகிறது.


Click it and Unblock the Notifications