Home
News

Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?

இந்தியாவில் உள்ள சில சாம்சங் கேலக்ஸி போன் ஓனர்கள், திடீரென தங்கள் ஸ்மார்ட்போன்களில் கிரீன் லைன் டிஸ்பிளே சிக்கலை எதிர்கொண்டதன் விளைவாக.. அவர்களின் ஸ்மார்ட்போன்களுக்கு முற்றிலும் இலவசமாக ஸ்கிரீன் ரீப்ளேஸ்மென்ட் செய்து கொடுக்கப்படும் என்றும் சாம்சங் இந்தியா நிறுவனம் அறிவித்து உள்ளது.

இந்த இலவச டிஸ்பிளே ரீபிளேஸ்மென்ட் திட்டம் (Free display replacement programme) தொடர்பாக சாம்சங் (Samsung) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கிரீன் லைன் டிஸ்பிளே சிக்கலால் (Green line display issue) பாதிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் உள்ள டிஸ்பிளேக்கள் இலவசமாக மாற்றி கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடு!

மேலும் சூப்பர் அமோஎல்இடி (Super AMOLED) டிஸ்ளேக்களை கொண்ட கேலக்ஸி எஸ்22 (Galaxy S22) மற்றும் கேலக்ஸி எஸ்21 (Galaxy S21) மாடல்களைத்தான் இந்த சிக்கல் பெரிதும் பாதித்துள்ளதாகவும், அப்படியாக பாதிக்கப்பட்ட போன்களில் உள்ள டிஸ்பிளேவில் ஒரு நிரந்தரமான செங்குத்தான பச்சை நிற கோடு (Permanent vertical green line) தோன்றுவதையும் சாம்சங் ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த வாரம் கேலக்ஸி எஸ்21 மற்றும் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பல பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை பாதிக்கும் இந்த க்ரீன் லைன் சிக்கலை பற்றி சமூக ஊடகங்களின் வழியாக புகார் அளிக்க தொடங்கினர். டிஸ்பிளேவில் ஒரு மெல்லிய செங்குத்தான பச்சை நிற கோடு தோன்றி, ஸ்மார்ட்போனின் செயல்பாட்டை (Smartphone Performance) பாதிப்பதாக என்று பல பயனர்கள் புகார் அளித்து இருந்தனர்.

Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடு!

குறிப்பாக சூப்பர் அமோஎல்இடி பேனல்கள் கொண்ட பழைய கேலக்ஸி எஸ் சீரிஸ் போன்களில் (Old Samsung S Series Smartphones) தான் இந்த க்ரீன் லைன் டிஸ்பிளே பிரச்சனை அதிகமாக தோன்றியுள்ளது. தொடர்ச்சியாக அதிகரித்து வரும் புகார்களை நிவர்த்தி செய்ய, சாம்சங் நிறுவனம், இந்த சிக்கலால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஒன்-டைம் ஃப்ரீ டிஸ்பிளே ரீபிளேஸ்மென்ட்டை (One-time free display replacement) அறிவித்துள்ளது.

சாம்சங் இந்தியா கடந்த ஆண்டு முதலே தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு இலவச டிஸ்பிளே ரீபிளேஸ்மென்ட்-ஐ வழங்கி வருகிறது. இந்த ஏற்பாடு ஏற்கனவே கேலக்ஸி எஸ்20 சீரிஸ் (Galaxy S20 Series) மற்றும் கேலக்ஸி நோட் 20 சீரிஸுக்கு (Galaxy Note S20 Series) கிடைத்தது.

Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடு!

இப்போது, ​​கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்21 பிளஸ் (Galaxy S21 Plus), கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா (Galaxy S21 Ultra), கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்22 பிளஸ் (Galaxy S22 Plus) மற்றும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா (Galaxy S22 Ultra) ஆகிய மாடல்களுக்கும் வந்துள்ளது.

ஏப்ரல் 30 ஆம் தேதி வரை சாம்சங் சேவை மையத்தில் (Samsung Service Center), டிஸ்பிளே ரீபிளேஸ்மென்ட் சேவைக்கான சந்திப்பிற்கு (Appointment for Replacement Service) பயனர்கள் முன்பதிவு செய்யலாம். பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இலவச பேட்டரி மற்றும் கிட் ரீப்பிளேஸ்மென்ட்டும் (Free battery and kit replacement) கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிளேக்களில் இதுபோன்ற பச்சை நிற கோடு ஏற்படும் பிரச்சினை கடந்த ஆண்டு முதலே உள்ளது. இந்த சிக்கலுக்கான சரியான காரணம் நிச்சயமற்றதாக இருந்தாலும், சில பயனர்கள் இது மென்பொருள் கோளாறாக (Software Problem) இருக்கலாம் என்று நம்புகின்றனர். வேறு சில பயனர்கள் இந்த சிக்கலுக்கு சாத்தியமான வன்பொருள் குறைபாடுகள் (Hardware defects) மற்றும் தீவிர பயன்பாடு (Intense usage) தான் காரணம் என்கின்றனர்.

Best Mobiles in India

English summary
Green Line Display Issue in Your Samsung Galaxy S Series Phone How to do Free Display Replacement
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X