இந்தியாவிற்குள் அசத்தலாக களமிறங்க ரெடியாகும் OnePlus Nord 2T.. நீங்கள் நினைப்பதை விட மிக விரைவில்..

|

ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ், நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த புதிய OnePlus Nord 2T ஸ்மார்ட்போன் இந்தியாவிற்குள் களமிறங்க போகிறது. கடந்த மாதம் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட் போன் சாதனம் இப்போது, இந்தியாவிலும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதுவும், இந்த சாதனம் நீங்கள் எதிர்பார்க்கும் நேரத்தை விட முன்னதாகவே அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

OnePlus Nord 2T இந்தியாவிற்குள் வருகிறதா?

OnePlus Nord 2T இந்தியாவிற்குள் வருகிறதா?

சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி, OnePlus Nord 2T ஸ்மார்ட் போன் சாதனம் இந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று கூறியுள்ளது. இருப்பினும், சரியான வெளியீட்டு தேதி தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் மற்ற OnePlus சாதனங்களைப் போலவே, OnePlus Nord 2T ஆனது இந்தியாவில் Amazon வழியாக பிரத்தியேகமாக விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OnePlus Nord 2T சாதனத்தை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

OnePlus Nord 2T சாதனத்தை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

OnePlus Nord 2T ஸ்மார்ட் போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மாறுபாட்டின் விலை EUR 399 ஆகும். இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 32,100 என்ற விலையை நெருங்குகிறது. அதேபோல், இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு மாறுபாடு EUR 499 விலையில் வருகிறது. இது இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ. 40,800 என்ற விலையில் வருகிறது. இந்தியாவில் இந்த போனின் அடிப்படை விலை ரூ.30,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது கிரே ஷேடோ மற்றும் ஜேட் பிளாக் வண்ண விருப்பங்களில் வருகிறது.

வீட்டிலிருந்தபடி PAN கார்டு போட்டோவை இவ்வளவு சுலபமாக மாற்ற முடியுமா? கட்டணம் எவ்வளவு தெரியுமா?வீட்டிலிருந்தபடி PAN கார்டு போட்டோவை இவ்வளவு சுலபமாக மாற்ற முடியுமா? கட்டணம் எவ்வளவு தெரியுமா?

OnePlus Nord 2T ஸ்மார்ட் போனின் விவரக்குறிப்புகள்

OnePlus Nord 2T ஸ்மார்ட் போனின் விவரக்குறிப்புகள்

OnePlus Nord 2T ஆனது முழு HD+ தெளிவுத்திறனுடன் கொண்ட 6.43' இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 90Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது. இது முன் கேமராவிற்கு மேல் இடது மூலையில் ஒரு பஞ்ச் ஹோல் கட்அவுட் வடிவமைப்புடன் இந்த சாதனம் வருகிறது. இந்த புதிய OnePlus Nord 2T போனில் MediaTek Dimensity 1300 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் கேமரா அம்சம் படி பார்க்கையில்.

OnePlus Nord 2T கேமரா மற்றும் பேட்டரி அம்சம்

OnePlus Nord 2T கேமரா மற்றும் பேட்டரி அம்சம்

OnePlus Nord 2T மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்766 பிரைமரி ஷூட்டர், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, முன்புறத்தில் 32 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, இது 80W SuperVOOC சார்ஜிங் மற்றும் 50W AirVOOC வேகமான வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும். இந்த சாதனத்தில் 4500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் வானத்தில் தோன்றும் அதிசயம்: 'ஸ்ட்ராபெரி மூன்'.. நிலவு இப்படி சிவப்பாக தெரிய காரணம் என்ன?அடுத்த வாரம் வானத்தில் தோன்றும் அதிசயம்: 'ஸ்ட்ராபெரி மூன்'.. நிலவு இப்படி சிவப்பாக தெரிய காரணம் என்ன?

OnePlus Nord 2T போனின் இணைப்பு விருப்பம்

OnePlus Nord 2T போனின் இணைப்பு விருப்பம்

மேலும், இது ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் தி பாக்ஸுடன் வருகிறது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரத்தியேகமான ஆக்சிஜன் ஓஎஸ் 12 லேயர் உடன் வருகிறது. இந்த OnePlus Nord 2T ஸ்மார்ட் போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. இணைப்பு அம்சங்களை பொறுத்த வரை, இது 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 6 802.11 ax 2X2 MIMO, ப்ளூடூத் 5.2, GPS (L1+L5 Dual Band) + GLONASS, USB Type-C மற்றும் NFC ஆகியவற்றுடன் வருகிறது. இந்த சாதனத்தில் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 2T Expected To Launch In India This Month End : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X