இனி App-களை மறைக்கலாம்.. சிரிச்சுகிட்டே சம்பவம் செஞ்ச சுந்தர்.. வந்தாச்சு Android 15.. இது Google-ன் டர்ன்!
ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 17 ஆப்ரேட்டிங் சிஸ்டமை.. அப்படியே "வாரிச்சுருட்டி" சாப்பிடும் படியான அம்சங்கள் மற்றும் அப்டேட்ளுடன் கூகுள் (Google) நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) ஆனது ஒருவழியாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஆம்! கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ன் முதல் பப்ளிக் பீட்டாவை (Public Beta) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட் வழியாக.. கூடிய விரைவில் அனைவருக்கும் வந்துசேர உள்ள புதிய அம்சங்கள் மற்றும் முக்கிய மேம்பாடுகளை பற்றி முன்கூட்டியே அறிந்துகொள்ள முடிகிறது!

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் எப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்? இது வருகிற மே 14 ஆம் தேதி நடைபெறும் கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாடான (Google's annual developer conference).. கூகுள் ஐ/ஓவி 2024 நிகழ்வில் (Google I/O 2024 Event) வெளியிடப்பட உள்ளது.
ஆண்ட்ராய்டு 15 வழியாக என்னென்ன புதிய அம்சங்கள் கிடைக்கும்? முழுமையாக நிரப்பப்படாத ஸ்க்ரீனில் இருக்கும் ஆப்கள் ஆனது ஃபுல் ஸ்க்ரீனையும் நிரப்பும் நோக்கத்தின் கீழ் தானாகவே அளவை மாற்றும் திறனை ஆண்ட்ராய்டு 15 அப்டேட் கொண்டு வந்துள்ளது. மேலும் நீண்ட காலமாக கோரப்படும் அம்சங்களில் ஒன்றான - ஆப் ஆர்க்கைவிங் அன்ட் அன்ஆர்க்கைவிங் (App Archiving and Unarchiving) ஆதரவும் ஆண்ட்ராய்டு 15 வழியாக கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆப் ஆர்க்கைவிங் அன்ட் அன்ஆர்க்கைவிங் ஆதரவானது வாட்ஸ்அப்பில் உள்ள ஆர்க்கைவ் அன்ட் அன்ஆர்க்கைவ் அம்சத்தை போலவே தான் செயல்படும். தேவையில்லாத ஆப்களை ஒதுக்கி.. மற்ற ஆப்களுக்கு தேவையான இடத்தை கொடுக்கும் மற்றும் தேவையான நேரத்தில் குறிப்பிட்ட ஆப்களை அணுக, ஒரு எளிமையான பாதையை உருவாக்கி கொடுக்கும்.
இதுதவிர்த்து ஆண்டராய்டு 15 வழியாக மேம்படுத்தப்பட்ட பிரெய்லி ஆதரவும் (Improved Braille Support) கொண்டுவரப்பட்டுள்ளது. கூடவே செல்லுலார் நெட்வொர்க்கிற்கான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் (Cellular Network Security Controls), வைஃபை நெட்வொர்க்கிற்கான டிவைஸ் அடையாள மேலாண்மை (Wi-Fi Network Device Identification Management) போன்ற மேம்பாடுகளை ஆண்ட்ராய்டு 15 கொண்டுவந்துள்ளது.

எல்லாவற்றை விட முக்கியமான ஆண்ட்ராய்டு 15 ஆனது டீஃபால்ட் வாலட் ஆப்பையும் (Default Wallet App) கொண்டுவருகிறது. அதாவது டீஃபால்ட் போன் கால் ஆப், டீஃபால்ட் மெசேஜிங் ஆப்பை போல.. பயனர்கள் தங்களுக்கு விருப்பமான வாலட் ஆப்பை டீஃபால்ட் ஆப் ஆக செட் செய்துகொள்ள முடியும்.
கவனிக்கப்பட வேண்டிய பிரத்யேக அம்சத்தை பொறுத்தவரை.. பிக்சல் வெதர் விட்ஜெட்டுகளை (Pixel Weather Widgets) சொல்லலாம். பெயர் குறிப்பிடுவது போலவே இது பிக்சல் போன்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதன்கீழ் பிக்சல் போன் பயனர்கள் புதிய பிக்சல் வெதர் விட்ஜெட்டுகளுக்கான அணுகலை பெறுவார்கள்.
தற்போது எந்தெந்த போன்களில் ஆண்ட்ராய்டு 15 பீட்டா வெர்ஷன் அணுக கிடைக்கிறது? ஆண்ட்ராய்டு பீட்டா திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட கூகுள் பிக்சல் போன்களுக்கு.. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பிக்சல் 6 (Pixel 6), பிக்சல் 6 ப்ரோ (Pixel 6 Pro), பிக்சல் 6ஏ (Pixel 6a) போன்ற சற்றே பழைய மாடல்களில் கூட ஆண்ட்ராய்டு 15 பீட்டா வெர்ஷன் அணுக கிடைக்கிறது
மேலும் பிக்சல் 7 (Pixel 7), பிக்சல் 7 ப்ரோ (Pixel 7 Pro), பிக்சல் 7ஏ (Pixel 7a), பிக்சல் டேப்லெட் (Pixel Tablet), பிக்சல் ஃபோல்ட் (Pixel Fold), பிக்சல் 8 (Pixel 8) மற்றும் பிக்சல் 8 ப்ரோ (Pixel 8 Pro) போன்ற லேட்டஸ்ட் டிவைஸ்களிலும் கூட ஆண்ட்ராய்டு 15 பீட்டா வெர்ஷன் அணுக கிடைக்கிறது.
மேற்குறிப்பிட்ட பிக்சல் டிவைஸ்களை பயன்படுத் பயனர்கள், தங்கள் பிக்சல் டிவைஸ் மூலம் ஆண்ட்ராய்டு பீட்டா திட்டத்தில் (google.com/android/beta) பதிவு செய்து.. செட்டிங்ஸ்-ல் உள்ள சிஸ்டம் அப்டேட் வழியாக லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 பீட்டா வெர்ஷனை டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்யலாம், அதை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








