Home
News

ஜியோ, ஏர்டெல் கொஞ்சம் ஓரமா போங்க.,கம்மி விலையில் தினசரி 3ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் பல அசத்தலான திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனாலும் ஜியோ,ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியாக கம்மி விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்கள்

கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்கள்

பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்கள் இருந்தாலும், நாடு முழுவதும் இன்னும் 4ஜி சேவையை வழங்கவில்லை. விரைவில்இந்நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களும் விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் விட கம்மி விலையில் தினசரி 3ஜிபிடேட்டா நன்மையை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

3ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தின் விலை?

3ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தின் விலை?

தினசரி 3ஜிபி டேட்டா வழங்கும் அந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.299 தான். இப்போது இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் டேட்டா நன்மை முடிந்ததும் இணைய வேகம் 80 Kbps ஆகக் குறைகிறது. இதே விலையில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் நன்மைகளை பார்ப்போம்.

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிரjioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்.

 ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் உள்ளன. பின்பு இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.Amazon Prime Video Mobile Edition, Free Hello Tunes மற்றும் Wynk Music ஒரு மாத இலவச சோதனை போன்றநன்மைகளையும் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் வோடபோன் ஐடியா நிறுவனமும் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. அதன் நன்மைகளைப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிரVi Movie & TV கிளாசிக், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங் ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட் போன்ற சலுகைகள் இந்த வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 299 Prepaid plan offering 3GB of daily data: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X