Nothing நிறுவனத்திற்கு நன்றி கூறும் Samsung ரசிகர்கள்! அப்படி என்ன நடந்தது?

|

பெரிதாக நினைவூட்ட வேண்டாம் என்று நினைக்கிறோம்! கார்ல் பெய் தலைமையிலான நத்திங் நிறுவனம் சமீபத்தில் அதன் முதல் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 1- ஐ ஒரு மிட்-ரேன்ஜ் மாடலாக அறிமுகம் செய்தது அல்லவா?

அதில் வெறும் இரண்டு கேமராக்கள் மட்டுமே உள்ளது என்பதை நீங்கள் அறிந்து இருக்கலாம். அதாவது ஒரு மெயின் சென்சார் மற்றும் ஒரு அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மட்டுமே உள்ளது!

ஒரு போனில் 4 கேமராக்கள் எதுக்கு? ஊரை ஏமாற்றுவதற்கா?

ஒரு போனில் 4 கேமராக்கள் எதுக்கு? ஊரை ஏமாற்றுவதற்கா?

அதாவது நத்திங் நிறுவனம், ட்ரிபிள் அல்லது குவாட் ரியர் கேமரா செட்டப் என்று சொல்லி தேவையே இல்லாத / பெரிய அளவில் உதவாத கேமரா சென்சார்களை உட்பொதித்து மக்களை ஏமாற்றவில்லை.

இந்த பட்ஜெட்டிற்கு இந்த 2 கேமரா சென்சார்கள் மட்டுமே போதும்; இது கண்டிப்பாக வியாபாரம் ஆகும் என்கிற நம்பிக்கையுடன் நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை களமிறக்கியது.

SBI வங்கியின் ஒரே ஒரு அறிவிப்பு; ஒட்டுமொத்த கஸ்டமர்களும் செம்ம ஹேப்பி!SBI வங்கியின் ஒரே ஒரு அறிவிப்பு; ஒட்டுமொத்த கஸ்டமர்களும் செம்ம ஹேப்பி!

அதை அப்படியே

அதை அப்படியே "காப்பி அடிக்கும்" சாம்சங்!

தற்போது, சாம்சங் நிறுவனமும் நத்திங்கின் அடிச்சுவடுகளை பின்பற்றத் திட்டமிட்டுள்ளது. ஆம்! ​​சாம்சங் நிறுவனம் அதன் வரவிருக்கும் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் கேமராக்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளது.

இப்படியாக

இப்படியாக "தேவை இல்லாத ஆணிகளை புடுங்கும்" சாம்சங்!

தென் கொரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சங், கேலக்ஸி ஏ53 அல்லது ஏ33 போன்ற அதன் மிட் ரேன்ஜ் போன்களில் பொதுவாக மூன்று அல்லது நான்கு கேமராக்களை வைக்கிறது.

மேற்குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்கள் குவாட்-ரியர் கேமரா செட்டப்பைக் கொண்டுள்ளன - அதாவது ஒரு ப்ரைமரி ஷூட்டர், அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ், ஒரு மேக்ரோ கேமரா மற்றும் டெப்த் சென்சார்; இனிமேல் இந்த எண்ணிக்கை குறையும்!

சீரியஸ் மேட்டர்! முதல் வேலையா சீரியஸ் மேட்டர்! முதல் வேலையா "இதை" UNINSTALL பண்ணுங்க.. கதறும் Google!

எந்த அளவிற்கு குறையும்?

எந்த அளவிற்கு குறையும்?

தி எலெக் வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, சாம்சங் தனது வரவிருக்கும் கேலக்ஸி ஏ24, கேலக்ஸி ஏ34 மற்றும் கேலக்ஸி ஏ54 மாடல்களில் "பயனற்ற" டெப்த் சென்சார்களை அகற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட மூன்று ஸ்மார்ட்போன்களும் வருகிற 2023 ஆம் ஆண்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'டெப்த்' மட்டும் தானா? இல்ல 'மேக்ரோ'வும் இருக்காதா?

'டெப்த்' மட்டும் தானா? இல்ல 'மேக்ரோ'வும் இருக்காதா?

அதே அறிக்கை, சாம்சங் நிறுவனம் மேக்ரோ சென்சாரை தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிடுகிறது. அதாவது மேற்குறிப்பிட்ட மூன்று கேலக்சி ஸ்மார்ட்போன்களில் குவாட் ரியர் கேமரா செட்டப்பிற்கு பதிலாக, ட்ரிபிள் ரியர் கேமராக்கள் இடம்பெறலாம்.

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், Galaxy A24, Galaxy A34 மற்றும் Galaxy A54 ஸ்மார்ட்போன்கள் ஆனது மெயின் கேமரா + அல்ட்ராவைட் கேமரா + மேக்ரோ கேமராவை மட்டுமே பேக் செய்யும்.

இனி இனி "பத்தல பத்தல"னு சொல்ல முடியாது; நியாயமான விலையில் உலகின் முதல் 200W போன்!

சாம்சங்கின் இந்த முடிவுக்கு நத்திங் மட்டுமே காரணம் இல்லை!

சாம்சங்கின் இந்த முடிவுக்கு நத்திங் மட்டுமே காரணம் இல்லை!

எக்ஸ்ட்ராவாக ஒரு கேமரா இருப்பதால் அந்த ஸ்மார்ட்போனின் கேமரா செயல்திறன் அதிகமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில், நுகர்வோர்கள் மிட்-ரேன்ஜ் விலையிலான ஸ்மார்ட்போன்களை வாங்குவதில்லை என்பதே சாம்சங்கின் இந்த முடிவுக்கு முக்கிய காரணம்.

மேலும் GSMArena வழியாக வெளியான இந்த அறிக்கையின்படி, மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை வழங்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே "பயனுள்ள" இரண்டு கேமராக்களை மட்டுமே தங்கள் போன்களில் சேர்த்து வருகின்றனர்.

இதனால் சாம்சங்கிற்கும் லாபம் உண்டு!

இதனால் சாம்சங்கிற்கும் லாபம் உண்டு!

சாம்சங் நிறுவனம் (வரும் நாட்களில்) அதன் ரியர் கேமரா செட்டப்களை "ஒழுங்கீனப்படுத்தும்" நோக்கத்தின் கீழ் தேவையான கேமரா யூனிட்களை மட்டுமே சேர்க்கும் புதிய போக்கைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சாம்சங் நிறுவனத்திற்கும் லாபம் உண்டு! ஏனெனில் டெப்த் சென்சாருடன் தொடர்புடைய செலவுகள் குறையும். அதே சமயம், மீதமுள்ள யூனிட்களில் அத்தியாவசியமான கேமரா அம்சங்களை சேர்க்கும் பொறுப்பும் சாம்சங்கிற்கு அதிகரிக்கும்.

ரூ.30,000 க்குள் நீங்க வேற ஏதாச்சும் ஒரு 43-inch TV வாங்குனா.. நாங்க பொறுப்பில்ல!ரூ.30,000 க்குள் நீங்க வேற ஏதாச்சும் ஒரு 43-inch TV வாங்குனா.. நாங்க பொறுப்பில்ல!

வெளியே போன டெப்த் சென்சார்.. உள்ளே வரும் டெலிஃபோட்டோ கேமரா!

வெளியே போன டெப்த் சென்சார்.. உள்ளே வரும் டெலிஃபோட்டோ கேமரா!

Sammobile வழியாக வெளியான மற்றொரு அறிக்கை, சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அதன் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் OIS-ஐ வழங்க தொடங்கியுள்ளதால், எல்லாமே "சரியான திசையில் தான் நகர்கிறது" என்று கூறுகிறது.

மேலும் அந்த அறிக்கை, இந்த தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனம் அதன் ஹைஹர் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் டெலிஃபோட்டோ கேமராக்களை அறிமுகப்படுத்தலாம் என்றும் தெரிவிக்கிறது.

அதற்காக Galaxy A34, Galaxy A54 இல் டெலி கேமராவை எதிர்பார்த்து விடாதீர்கள்!

அதற்காக Galaxy A34, Galaxy A54 இல் டெலி கேமராவை எதிர்பார்த்து விடாதீர்கள்!

Galaxy A34 ஸ்மார்ட்போனில் 48MP மெயின் கேமரா இருக்கலாம் என்றும்,Galaxy A54 மாடலில் 50MP மெயின் சென்சார் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கேலக்ஸி A34 ஸ்மார்ட்போனில் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் A54 ஆனது 5MP அல்ட்ரா-வைட் சென்சார்-ஐயே பேக் செய்யலாம்.

அறிமுகத்தை பொறுத்தவரை, கேலக்ஸி A34 ஆனது மார்ச் 2023 இல் அறிமுகப்படுத்தப்படலாம், மறுகையில் உள்ள A54 ஆனது ஒரு மாதம் கழித்து வெளியிடப்படலாம்.

Nothing-இன் தில்லாலங்கடி வேலை! Nothing-இன் தில்லாலங்கடி வேலை! "இதெல்லாம்" வேணுமா? அப்போ எக்ஸ்ட்ரா காசு கொடு!

லேட்டு.. லேட்டு!

லேட்டு.. லேட்டு!

இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்! டெப்த் சென்சார், மோனோக்ரோம் லென்ஸ் அல்லது மேக்ரோ ஷூட்டர் போன்றவற்றை ரியர் கேமரா செட்டப்பில் சேர்க்க வேண்டிய அவசியத்தையே, இப்போது தான் சில ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் உணர்ந்துள்ளனர் என்பது இன்னும் மோசமான விடயம்.

Photo Courtesy: Samsung

Best Mobiles in India

English summary
Finally Samsung to Remove Useless Depth Sensors From its Mid Range Smartphones Thanks to Nothing Phone 1

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X