TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
மே 31 ஆம் தேதிக்குள் வரி விதிப்புக்குரியவர்கள் தங்களது பான் எண்ணை ஆதார் உடன் இணைக்கும் பட்சத்தில், டி.டி.எஸ்-க்கான ஷார்ட் டிடெக்ஷனிற்கு (Short deduction of TDS) எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று வருமான வரித்துறை (Income Tax Department) தெரிவித்துள்ளது.
வருமான வரி விதிகளின்படி, பான் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் (Permanent Account Number) ஆனது ஆதார் உடன் இணைக்கப்படாவிட்டால், டி.டி.எஸ் ஆனது பொருந்தக்கூடிய விகிதத்தை விட இருமடங்காக கழிக்கப்பட வேண்டும். ஒருவேளை நீங்கள் இன்னமும் பான்-ஆதார் இணைப்பை (PAN-Aadhaar Link) செய்யவில்லை என்றால்.. ஆஃப்லைன் (Offline) மற்றும் ஆன்லைன் (Online) வழியாக அதை செய்வது எப்படி என்பதற்கான எளிய வழிமுறைகள் இதோ:

ஆஃப்லைன் வழியாக பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி? இதை செய்ய, அருகில் உள்ள பான் கார்டு மையத்திற்கு (PAN Card Centre) நீங்கள் செல்லவேண்டி இருக்கும். அங்கு சென்று பான்-ஆதார் இணைப்பிற்கான படிவத்தை வாங்கி, பூர்த்தி செய்து, அதை பான் மற்றும் ஆதார் அட்டைகளின் நகல்களுடன் (PAN and Aadhar Card Xerox) சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்!
ஆன்லைன் வழியாக பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி? முதலில் வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலுக்கு (Income Tax e-filing portal) செல்லவும். அங்கே ஹோம் பேஜின் (Home Page) இடது புறத்தில் உள்ள குவிக் லிங்க்ஸ் (Quick Links) என்கிற என்ற தலைப்பின் கீழ் லிங்க் ஆதார் (Link Aadhaar) என்கிற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.

பின்னர் உங்கள் பான் மற்றும் ஆதார் நம்பரை உள்ளிட்டு வேலிடேட் (Validate) பட்டனை கிளிக் செய்யவும். அபராதம் குறித்து 'உங்கள் கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்டன' என்று ஒரு பாப்-அப் மெசேஜ் (Pop-up Message) தோன்றும். அதனை தொடர்ந்து பாண்-ஆதார் இணைப்பிற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க, கன்ட்டினியூ (Continue) பட்டனை கிளிக் செய்யவும்.
இப்போது தேவையான விவரங்களை உள்ளிட்டு லிங்க் ஆதார் (Link Aadhaar) என்கிற பட்டனை கிளிக் செய்யவும். பின்னர் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு வந்த ஒடிபி (OTP) நம்பரை உள்ளிடவும். அவ்வளவு தான் பான்-ஆதார் அட்டையை இணைப்பதற்கான உங்களது கோரிக்கை (Request to link the PAN-Aadhaar card) வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்படும்.

ஏப்ரல் 30 ஆம் தேதியோடு முடிவடையும் பான் அட்டை தொடர்பான இன்னொரு கெடு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கான மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோவில் (Mutual Fund Folio) உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி விவரங்கள் ஆனது பான் கார்டு அல்லது மற்ற அடையாள அட்டையில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதியுடன் பொருந்த வேண்டும்.
ஒருவேளை மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோ மற்றும் பான் அட்டையில் உள்ள பெயர் மற்றும் பொருந்தவில்லை என்றால், இதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் அதை வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் சரிசெய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு பின்னர் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் பரிவர்த்தனை நிராகரிப்பை (Transaction Rejection) சந்திக்க நேரிடும்.
இந்த எச்சரிக்கை எம்எப் சென்ட்ரல் (MF Central) மற்றும் சிஏஎம்எஸ் (CAMS) போன்ற மியூச்சுவல் ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் ஏஜென்சிகளிடம் இருந்து வந்துள்ளது. முதலீட்டாளரின் பான் ற்றும் எம்எப் ஃபோலியோ ஆகிய இரண்டிற்கும் இடையேயான பெயர் / பிறந்த தேதியில் உள்ள பொருத்தமின்மை ஆனது பணப் பரிமாற்ற நிராகரிப்புக்கு வழிவகுக்கும் என்று அறிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications








