மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
வங்கியில் சேமிப்பு கணக்கு (Bank Saving Account) வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் (Minimum Balance) கொண்டிருக்க வேண்டும் என்ற விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த விதிகள் மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
2024-25 நிதியாண்டில் பல்வேறு விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. வருமான வரி, பிஃஎப் பணம் போன்ற விதிகளால் நடுத்தர மக்கள் மட்டுமல்லாமல், வங்கி கணக்கு, சிறு சேமிப்பு திட்டங்கள், கிரெடிட் கார்டு போன்ற விதிகளால் சாமானிய மக்களின் வாழ்க்கையிலும் நேரடியாக மாற்றங்கள் வர இருக்கின்றன.

இதில் வங்கிகளில் எடுக்கப்படும் மாற்றங்கள் அதில் கணக்கு வைத்திருக்கும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களையும் வியர்க்கவே வைக்கிறது. முன்னதாக, எஸ்பிஐ (SBI), ஐசிஐசிஐ (ICICI) வங்கிகளில் டெபிட் கார்டு பராமரிப்பு கட்டணங்களில் (Debit Card Maintenance Charges) கொண்டுவரப்பட்ட மாற்றங்களால் மற்ற வங்கி வாடிக்கையாளர்களும் சற்று பீதியடைந்து விட்டனர்.
இதேபோல மற்ற வங்கிகளும் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ள நேரத்தில், புதிய மினிமம் பேலன்ஸ் விதிகள் (New Minimum Balance Rules) ஒட்டுமொத்த வங்கி வாடிக்கையாளர்களையும் கலக்கமடைய செய்துள்ளது. ஏனென்றால், இந்த விதிகள் மே 1ஆம் தேதி முதலே அமலுக்கு வர இருக்கின்றன.
முதலில் எந்த வங்கிக்கு, எந்த கணக்குக்கு, எவ்வளவு மினிமம் பேலன்ஸ் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதை பார்த்து விடுவோம். யெஸ் வங்கியில் (YES Bank) ப்ரோ மேக்ஸ் சேமிப்பு கணக்கு (PRO Max Savings Account) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50,000ஆக மினிமம் பேலன்ஸ் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதை பராமரிக்காதபட்சத்தில் அதிகபட்சமாக ரூ.1000 கட்டணம் விதிக்கப்படும், அதேபோல யெஸ் ப்ரோ பிளஸ் சேமிப்பு கணக்கு (YES PRO Plus Savings Account), யெஸ் எசன்ஸ் சேமிப்பு கணக்கு (Yes Essence Savings Account) மற்றும் யெஸ் ரெஸ்பெக்ட் சேமிப்பு கணக்கு (YES Respect Savings Account) ஆகியவற்றுக்கு ரூ.25,000ஆக மினிமன் பேலன்ஸ் தொகை மாறுகிறது.
இந்த பேலன்ஸை பராமரிக்கவில்லை என்றால், ரூ.750 கட்டணம் விதிக்கப்படும். மேலும், யெஸ் ப்ரோ சேமிப்பு கணக்கு (YES Pro Savings Account) வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.10000 மினிமம் பேலன்ஸ் கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அதிகபட்சமாக ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், யெஸ் சேவிங் வேல்யூ (YES Saving Value), கிஷான் சேமிப்பு கணக்கு (Kisan Saving Account) ஆகிவற்றுக்கும் ரூ.5000ஆக மினிமம் பேலன்ஸ் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை பராமரிக்காமல் போனால், அதிகபட்சமாக ரூ.500 கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.
இறுதியாக மை ஃபர்ஸ்ட் யெஸ் சேமிப்பு கணக்கு (My First YES Savings Account) வாடிக்கையாளர்களுக்கு மினிமம் பேலன்ஸ் தொகையாக ரூ.2500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை பராமரிக்காமல் போனால், அதிகபட்சமாக ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இந்த விதிகள் வரும் மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதேபோல மற்ற வங்கிகளிலும் மினிமன் பேலன்ஸ், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றில் பல்வேறு விதிகள் அடுத்தடுத்து அமலுக்கு வர இருக்கின்றன. ஆகவே, வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது மினிமம் பேலன்ஸ் தொகையை கவனமுடன் பராமரிப்பது அவர்களுக்கு விதிகப்படும் கட்டணங்களில் இருந்து பாதுகாக்கும்.


Click it and Unblock the Notifications








