சிட்டாக பறக்கும் ஆர்டர்.. 5000mAh பேட்டரி.. 256GB மெமரி.. சாம்சங் 5ஜி போனுக்கு விலைகுறைப்பு.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி போனுக்கு இந்தியாவில் விலை குறைக்கப்பட்டுள்ளது. டைமன்சிட்டி சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமராக்கள், AMOLED டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி போன் ரூ.30,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போனுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.32,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த வேரியண்ட்-க்கு விலை குறைக்கப்பட்டு ரூ.26,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A34 5G specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி போன். பின்பு 1080x2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
தரமான மீடியாடெக் Dimensity 1080 6nm பிராசஸர் உடன் Mali-G68 MC4 GPU ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்தது. ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
8ஜிபி ரேம்+ 128ஜிபி மெமரி மறறும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி போன் ஆனது 48எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் போனை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி போன். 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போன் குறைந்த எடையில் வெளிவந்துள்ளது.
மேலும் சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான 5ஜி போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளன.


Click it and Unblock the Notifications