அசூர விற்பனை.. ரூ.12299 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 1TB மெமரி.. எந்த மாடல்?
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 6000mAh பேட்டரி, 50 எம்பி ஆட்டோ போகஸ் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 1 டிபி மெமரி சப்போர்ட் போன்ற பீச்சர்களுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி எம்15 (Samsung Galaxy M15) போனானது, தள்ளுபடியில் விற்பனைக்கு வந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்15 விலை (Samsung Galaxy M15 Price): இந்த சாம்சங் போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,299ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,799ஆகவும் இருக்கிறது. எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு (HDFC Bank Credit Card) ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

அமேசான் (Amazon) மற்றும் சாம்சங் இந்தியா (Samsung India) ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. செலஸ்டியல் ப்ளூ (Celestial Blue), ஸ்டோன் கிரே (Stone Grey) மற்றும் ப்ளூ டாபஸ் (Bule Topaz) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் இந்த போனில் என்னென்ன அம்சங்கள் வருகிறது என்பதை பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எம்15 அம்சங்கள் (Samsung Galaxy M15 Specifications): இந்த பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஒன்யுஐ 6 (OneUI 6) வருகிறது. 4 ஜென் அப்கிரேட் கொடுக்கப்படுகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமைன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வருகிறது.
ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 போனில் 6.5 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) இன்பினிட்டி-வி சூப்பர் அமோலெட் (Infinity-V Super AMOLED) டிஸ்பிளே வருகிறது.

இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் உள்ளது.
25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) கொண்டிருக்கிறது. 50 எம்பி ரியர் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் + 2 மேக்ரோ சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera Syatem) வருகிறது.
இதுவொரு ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கொண்ட கேமரா மாடலாகும். 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (10x Digital Zoom) மற்றும் ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. 13 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளது.
217 எடை, 9.3 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி வருகிறது. ஹைபிரிட் சிம் சிலாட் மற்றும் மைக்ரோஎஸ்டி சிலாட் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








