ரூ.30,000 க்குள் நீங்க வேற ஏதாச்சும் ஒரு 43-inch TV வாங்குனா.. நாங்க பொறுப்பில்ல!
ஸ்மார்ட்போன்களை போலவே ஸ்மார்ட் டிவிகளும் (Smart TV) மிகவும் பொதுவானதாகிவிட்டன.
உங்களின் பட்ஜெட் என்னவாக இருந்தாலும் சரி.. அது ரூ.10,000 ஆக இருந்தாலும் சரி அல்லது ரூ.1 லட்சம் ஆக இருந்தாலும் சரி.. மற்ற தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில், மார்க்கெட்டில் மிகவும் ஈஸியாக வாங்க கிடைக்கும் ஒரு தயாரிப்பு என்றால் - அது ஸ்மார்ட் டிவிகள் தான்!

ஒருவேளை உங்கள் பட்ஜெட் ரூ.30,000 க்குள் என்றால்?
நீங்களொரு புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள், ஆனால் உங்கள் பட்ஜெட் ரூ.1 லட்சம் வரை செல்லாது, அதே சமயம் ரூ.10,000 க்குள் என்கிற அளவிலும் இல்லை; அது ரூ.30,000 க்குள் என்கிற புள்ளியில் நிற்கிறது என்றால்.. நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.
சாம்சங், சியோமி, ஒன்பிளஸ் தொடங்கி நோக்கியா, வு (Vu) வரையிலாக, ரூ.30,000 க்குள் வாங்க கிடைக்கும் 7 பெஸ்ட் ஸ்மார்ட் டிவிகளை பற்றிய தொகுப்பே இது.

07. MI நிறுவனத்திடம் இருந்து..
பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவி என்றாலே பலரின் நினைவிற்குள்ளும் வருவது Mi நிறுவனம் தான். எனவே இந்த பட்டியலில் ஒரு 'எம்ஐ' ஸ்மார்ட் டிவி இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
நாங்கள் பரிந்துரைப்பது - எம்ஐ எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ 43-இன்ச் மாடல்; இதன் விலை ரூ.23,999 ஆகும்.

MI LED Smart TV 4A 43-inch மாடலின் முக்கிய அம்சங்கள்:
இந்த ஸ்மார்ட் டிவி ஃபுல்-எச்டி ரெசல்யூஷனுடன் வருகிறது. மேலும் இது 64-பிட் ப்ராசஸர் உடன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது.
இதில் 3 HDMI போர்ட்கள், 3 USB போர்ட்கள், ஈதர்நெட் போர்ட், A/V போர்ட்கள், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் பல உள்ளன. இது இரண்டு 10W ஸ்பீக்கர்களை கொண்ட 20W ஸ்பீக்கர் சிஸ்டம் உடன் வருகிறது.

06. Vu நிறுவனத்திடம் இருந்து..
சிலருக்கு வு (Vu) நிறுவனம் மிகவும் அந்நியமாக தெரியலாம். ஆனால் உண்மை என்னவென்றால், இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையை "ஆளும்" பெரிய-பெரிய நிறுவனங்களுக்கு 'டஃப்' கொடுக்கும் சில மாடல்கள் வு நிறுவனத்திடம் உள்ளன.
அதில் ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கும் வு பிரீமியம் 43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியும் அடங்கும். வு நிறுவனத்தின் இந்த 4K ஸ்மார்ட் டிவியை நீங்கள் பிளிப்கார்ட் வழியாக சொந்தமாக்கி கொள்ளலாம்.

VU Premium 43-inch 4K Smart TV-யின் முக்கிய அம்சங்கள்:
இந்த ஸ்மார்ட் டிவி அல்ட்ரா-எச்டி 4கே ரெசல்யூஷன் உடன் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டையும் பேக் செய்கிறது. மேலும் டால்பி விஷன் மற்றும் HDR 10-க்கான ஆதரவையும் வழங்குகிறது.
64-பிட் ப்ராசஸர் உடன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்கும் இந்த டிவி மூன்று HDMI போர்ட்கள், இரண்டு USB-A போர்ட்கள், ஒரு ஈதர்நெட் போர்ட், 24W சவுண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

5. Nokia நிறுவனத்திடம் இருந்து..
நீங்களொரு 'நோக்கியா லவ்வர்' என்றால், சந்தையில் எத்தனையோ ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைத்தும் நீங்கள் நோக்கியா மாடலை தேர்வு செய்து வாங்கும் ஒரு நபர் என்றால்.. நீங்கள் நோக்கியா 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி மாடலை கருத்தில் கொள்ளலாம்; மற்றவரக்ளும் தான்!
ஏனெனில் நோக்கியாவின் இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.28,999 மட்டுமே ஆகும். இந்தியாவில் இது பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது.

NOKIA 43-inch Ultra HD 4K Smart TV-யின் முக்கிய அம்சங்கள்:
இந்த டிவி 4கே அல்ட்ரா எச்டி ரெசல்யூஷன், HDR10 சப்போர்ட், மைக்ரோ-டிம்மிங் டெக்னாலஜி, 350 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், Onkyo-பவர்டு 39W சவுண்ட் சிஸ்டம் போன்ற முக்கிய அம்சங்களுடன் வருகிறது.
இது ஒரு Android ஸ்மார்ட் டிவி என்பதும் இங்கே குறிப்பிடத்தகக்து.

4. REALME நிறுவனத்திடம் இருந்து..
இந்த பட்டியலில் அடுத்ததாக நாம் பார்க்கப்போவது Realme.com, Flipkart மற்றும் பல ரீடெயில் ஸ்டோர் களின் வழியாக வாங்க கிடைக்கும் ரியல்மி ஸ்மார்ட் டிவி 4கே 43-இன்ச் மாடல் ஆகும்.
இந்தியாவில் இது ரூ.27,999 என்கிற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Realme Smart TV 4K 43-inch மாடலின் முக்கிய அம்சங்கள்:
இந்த ஸ்மார்ட் டிவி 4K அல்ட்ரா-எச்டி ரெசல்யூஷன், டால்பி விஷன், TUV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட் சான்றிதழ் மற்றும் பலவற்றிற்கான ஆதரவுடன் வருகிறது.
மேலும் இந்த 4கே டிவி ஆனது 3 HDMI போர்ட்கள், 2 USB-A போர்ட்கள், ஒரு LAN போர்ட், ஆப்டிகல் ஆடியோ அவுட்புட் போர்ட், AV போர்ட்கள், ட்யூனர் உடன் வருகிறது.
வைஃபை, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களுடன் வரும் இந்த டிவியில் 24W ஸ்பீக்கர் சிஸ்டமும் உள்ளது.

3. ONEPLUS நிறுவனத்திடம் இருந்து..
"என்னது ஒன்பிளஸ் டிவி-ஆ! வேண்டாம்ப்பா.. காசு அதிகமா இருக்கும்" என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.
உண்மை என்னவென்றால், இந்த பட்டியலிலேயே கொஞ்சம் மலிவான மாடல் - ஒன்பிளஸ் டிவி ஒய்1எஸ் 43-இன்ச் மாடல் தான்; இந்த டிவி Flipkart வழியாக வழியாக ரூ. 24,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Oneplus TV Y1S 43-inch மாடலின் முக்கிய அம்சங்கள்:
இது HDR10+ டிகோடிங், 1920 x 1080 ஃபுல்-எச்டி ரெசல்யூஷன், 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 64 பிட் ப்ராசஸர், 2 HDMI போர்ட்கள், 2 USB-A போர்ட்கள், வைஃபை, ப்ளூடூத் 5.0 போன்ற பல அம்சங்களுடன் வருகிறது.
மேலும் இது கூகுள் பிளே ஸ்டோர், கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் ஒன்பிளஸ் கனெக்ட் 2.0 போன்ற பிற ஸ்மார்ட் அம்சங்களுக்கான ஆதரவுடன் வருகிறது.

02. XIAOMI நிறுவனத்திடம் இருந்து..
இது, இந்த பட்டியலில் வரும் இரண்டாவது சியோமி ஸ்மார்ட் டிவி மாடல் ஆகும். முதலில் இந்நிறுவனத்தின் 4ஏ சீரீஸின் கீழ் வரும் ஒரு மாடலை பார்த்தோம். இப்போது 4எக்ஸ் சீரீஸின் கீழ் வரும் மாடலை பார்க்க போகிறோம்.
அது எம்ஐ டிவி 4எக்ஸ் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆகும். இந்தியாவில் இது ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.

MI TV 4X 43-inch மாடலின் முக்கிய அம்சங்கள்:
இது அல்ட்ரா-எச்டி 4கே ரெசல்யூஷன், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3 HDMI போர்ட்கள், 2 USB-A போர்ட்கள், ஒரு இயர்போன் அவுட்லெட், 1 AV அவுட்லெட், வைஃபை, HDR 10 சப்போர்ட், கூகுள் அசிஸ்டண்ட், ஆண்ட்ராய்டு டிவி சப்போர்ட், டேட்டா சேவர், 20W சவுண்ட் சிஸ்டம் மற்றும் பல அம்சங்களுடன் வருகிறது.

01. SAMSUNG நிறுவனத்திடம் இருந்து..
சாம்சங் நிறுவனத்தின் வொண்டர்டெயின்மென்ட் சீரிஸின் (Wondertainment series) முக்கிய நோக்கமே, மலிவு விலையில் ஸ்மார்ட் டிவிகளை விற்பனை செய்வதே ஆகும்.
இந்த சீரிஸின் கீழ் வாங்க கிடைக்கும் 43-இன்ச் ஃபுல்-எச்டி மாடலின் விலை (அமேசான் இந்தியா பட்டியலின்படி) ரூ.28,999 ஆகும்.

Samsung Wondertainment 43-inch TV-யின் முக்கிய அம்சங்கள்:
இதன் டிஸ்பிளே 1920 x 1080 பிக்சல்ஸ், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வருகிறது. மேலும் இது 2 HDMI போர்ட்கள் மற்றும் 1 USB-A போர்ட்டுடன் வருகிறது.
20W சவுண்ட் சிஸ்டம், ப்ளூ ரே பிளேயர் ஆதரவு மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸிற்கான ஆதரவுடன் வரும் இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவியில் வாய்ஸ் அசிஸ்டென்ட், ஸ்மார்ட் திங்ஸ் ஆப், டெக்ஸ் சப்போர்ட், ஸ்கிரீன் ஷேர் போன்ற அம்சங்களும் அணுக கிடைக்கிறது.
இந்த பட்டியலில் உங்களுக்கு விருப்பமான ஒரு ஸ்மார்ட் டிவி 'மிஸ்' ஆகி இருந்தால் அதை கமெண்ட் வழியாக தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications