ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
சாம்சங் (Samsung) நிறுவனம், பட்ஜெட் பிரியர்களை கவரும் வகையில் புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போனை சாம்சங் அதன் F சீரிஸ் வரிசையில் வெளியிடும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான சாம்சங்கின் மிட்ரேஞ்ச் வரிசையில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக 4 ஸ்மார்ட்போன் சாதனங்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆம், சரியாக தான் படித்தீர்கள். ஒரே போனை 4 வெவ்வேறு மாடலாக சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்ய பார்க்கிறது போல் தெரிகிறது. சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி M55 (Samsung Galaxy M55) இன் மூன்று மறுபெயரிடப்பட்ட வேரியண்ட் மாடல்களை வெளியிட திட்டமிடுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 55 (Samsung Galaxy F55):
இவற்றில் ஒன்று சாம்சங் கேலக்ஸி எஃப் 55 (Samsung Galaxy F55) ஆக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஹார்ட்வேர் அம்சங்களை உறுதிப்படுத்தும் வகையில், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது கூகுள் பிளே கன்சோல் (Google Play Console) தளத்தில் தோன்றியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ.
கூகுள் பிளே கன்சோல் தளத்தில், சாம்சங் கேலக்ஸி எப்55 (Samsung Galaxy F55) சாதனம் காணப்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளது சமீபத்திய லீக் தகவல். இந்த ஃபோன் சாம்சங் கேலக்ஸி M55 இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம் என்று இந்த பட்டியல் வெளிப்படுத்தியுள்ளது. வடிவமைப்பைத் தவிர, ஸ்மார்ட்போன் ஒரே செசிப்செட்டை பகிர்ந்து கொள்கின்றன என்பது கவனிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மாடல் எண், SM7450 உடன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Snapdragon 7 Gen 1) சிப்செட்டைக் குறிக்கிறது,.இது 4nm செயல்முறையைப் பயன்படுத்தி செயல்படும் சிப்செட் மாடலாகும். இது 2022 இல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் Galaxy M55 ஆனது Galaxy C55 என மறுபெயரிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே போன் சாம்சங் Galaxy M55, Samsung Galaxy C55 என வேற பெயர்:
இந்த குழப்பத்தை அதிகரிக்கும் வகையில், இதே சாதனம் சீனாவில் Samsung Galaxy Y55 ஆக அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சமீபத்திய தகவலைன் படி, இந்த போன் 8ஜிபி ரேம் உடன் முழு HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஒன் யுஐ 6.0 ஸ்கின் மூலம் இயங்குகின்றன என்று பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென் கொரிய சாம்சங் நிறுவனம் இன்னும் எதையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், சாம்சங் கேலக்ஸி எஃப்55, ஆதரவு பக்கப் பட்டியலின் அடிப்படையில் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரலாற்று ரீதியாக, Samsung Galaxy F தொடர் Flipkart மற்றும் Samsung Shop போன்ற ஆன்லைன் சேனல்கள் மூலம் விற்கப்படுவதை போல இதுவும் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய சாம்சங் சாதனம் 6.7" இன்ச் கொண்ட FHD+ சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் 1,000 nits பீக் பிரைட்னஸ் ஆதரவை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் உடன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவை கொண்டிருக்கும்.
கேமரா பற்றி பேசுகையில், இது OIS உடன் 50MP பிரைமரி சென்சார், 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமராவை கொண்டிருக்கும். முன்பக்கத்தில் 50MP செல்பி கேமராவுடன் வருகிறது. இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.


Click it and Unblock the Notifications