ஒரே ரீசார்ஜ்.. 84 நாட்களுக்கு நோ டென்ஷன்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அசத்தும் BSNL..
தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட குறைந்த விலையில் அதிக சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளன.
ஆனால் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ஏற்கனவே 4ஜி, 5ஜி சேவைகளை வழங்கி வருகின்றன. பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் இன்னும் நாடு முழுவதும் 4ஜி சேவையைக் கூட வழங்கவில்லை. அதாவது சமீபத்தில் வெளியான தகவலின்படி, பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்காக உருவாக்கப்பட்ட உள்நாட்டுத் தொழில்நுட்பம் (Homegrown Technology) ஆனது சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இந்த 4ஜி சேவை வெளியிட இன்னும் சிறிது காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் கம்மி விலையில் தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகளை வழங்கும் ஒரு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. அதாவது ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் பல சலுகைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல். இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 499 prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் அன்லிமிடெட் ப்ரீ நைட் டேட்டாவை வழங்கி வந்தது. ஆனால் தற்போது இந்த அன்லிமிடெட் ப்ரீ நைட் டேட்டா நன்மையை நீக்கவிட்டது பிஎஸ்என்எல் நிறுவனம். ஆனாலும் இந்த திட்டத்தில் எக்கச்சக்க நன்மைகள் உள்ளன.
அதாவது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஜிங்க் (Zing) பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக மாற்றப்படும். அதேபோல் இன்னொரு 84 நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டத்தை வைத்துள்ளது பிஎஸ்என்எல்.
அதாவது பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கும். மேலும் BSNL ட்யூன்ஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீஸ், ஹார்டி மொபைல் கேம் சேவை, லோக்துன் மற்றும் ஜிங் உள்ளிட்ட பல பயன்பாட்டு நன்மைகள் கிடைக்கிறது.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கம்மி விலையில் அதிக நன்மைகளைத் தரும் திட்டங்களை வழங்குவதால் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications