வரலாற்று விலை குறைப்பு.. 50% டிஸ்கவுண்ட்.. பாதி விலைக்கு கிடைக்கும் Samsung-ன் பிரீமியம் போன்.. என்ன மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் சற்றே பழைய பிரீமியம் ஸ்மார்ட்போன் ஒன்று, தற்போது பாதி விலைக்கு வாங்க கிடைக்கிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் 50% தள்ளுபடியை பெற்றுள்ளது. அதென்ன மாடல்? அதன் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? 50% நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது சாம்சங் கேலக்ஸி எஸ்22 5ஜி (Samsung Galaxy S22 5G) ஸ்மார்ட்போன் தான். தற்போது இது பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் வழியாக முன்னெப்போதும் கிடைக்காத விலைக்கு (All time Low Price) விற்பனை செய்யப்படுகிறது.

அசல் வெளியீட்டு விலை என்ன? நினைவூட்டும் வண்ணம், சாம்சங் நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டில் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அப்போது எஸ்22 சீரீஸின் வெண்ணிலா வேரியண்ட் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்22 5ஜி மாடலானது ரூ.72,999 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது கிடைக்கும் ஆபர் விலை என்ன? தற்போது இது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் வெறும் ரூ.36,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்22 5ஜி மாடலானது ரூ.36,000 என்கிற அபார விலைக்குறைப்பை பெற்றுள்ளது. இதற்கு முன்பாக கேலக்ஸி எஸ் சீரீஸின் கீழ் கிடைக்கும் மிகவும் மலிவான மாடலாக கேலக்ஸி எஸ்23 எப்இ மாடல் இருந்தது. தற்போது எஸ்22 மாடலானது, அதை விட மலிவாகி உள்ளது.

சற்றே பழைய எஸ்22 மாடலை இப்போது நம்பி வாங்கலாமா? கேலக்சிஸி எஸ்22 மாடலானது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே என தற்போது வாங்க கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் அம்சங்களை "அப்போதே" பேக் செய்த ஒரு மாடலாகும்.
கூடவே இது பிரீமியம் கிளாஸ்-மெட்டல் பாடி, ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் பிரத்யேக அல்ட்ரா-வைட் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ், செல்பீ கேமராவில் 4கே ரெக்கார்டிங் திறன் போன்ற கவனிக்கத்தக்க அம்சங்களையும் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி கேலக்ஸி எஸ்22 ஆனது (தற்போது) லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஒன்யுஐ 6 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது.

ஒட்டுமொத்தமாக ஒரு கச்சிதமான ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை, மிகவும் மலிவான விலைக்கு வாங்க விரும்பினால், அது லேட்டஸ்ட் சிப்செட்டை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றால்.. சாம்சங் கேலக்ஸி எஸ்22 மாடலை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம். இதற்கு இன்னும் 2 ஆண்டுகளுக்கான சாஃப்ட்வேர் அப்டேட்களும், இன்னும் 3 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பிளிப்கார்ட்டில் தற்போது கிடைக்கும் மற்ற சாம்சங் ஸ்மார்ட்போன்களின் மீதான ஆபர்களை பொறுத்தவரை.. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 57% தள்ளுபடியை பெற்று ரூ.69,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 5 (Samsung Galaxy Z Flip 5) ஸ்மார்ட்போன் ஆனது 2% தள்ளுபடியை பெற்று ரூ.1,02,999 க்கு பதிலாக ரூ.99,999 க்கு வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி (Samsung Galaxy F14 5G) ஸ்மார்ட்போன் ஆனது 43% தள்ளுபடியை பெற்று ரூ.18,490 க்கு பதிலாக ரூ.10,490 க்கு வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி (Samsung Galaxy F15 5G) ஸ்மார்ட்போன் ஆனது 18% தள்ளுபடியை பெற்று ரூ.15,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மேலும் சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி (Samsung Galaxy F34 5G) ஸ்மார்ட்போன் ஆனது 34% தள்ளுபடியை பெற்று ரூ.25,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி (Samsung Galaxy M14 5G) ஸ்மார்ட்போன் ஆனது 36% தள்ளுபடியை பெற்று ரூ.18,990 க்கு பதிலாக ரூ.12,009 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications