யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனின் 8ஜிபி ரேம் கொண்ட வேரியண்டை இன்று அறிமுகம் செய்துள்ளது. அதாவது கடந்த மாதம் தான் இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
குறிப்பாக 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் ரூ.12,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.14,999 விலையில் வெளிவந்தது. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனின் புதிய 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.15,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

அதேபோல் 8ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த புதிய வேரியண்டை ரூ.14,999 இருந்தால் வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F15 5G Specifications): 6.5-இன்ச் அளவிலான சூப்பர் அமோஎல்இடி (sAMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 2340 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
50எம்பி மெயின் கேமரா + 5எம்பி கேமரா + 2 எம்பி கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் இந்த போனின் முன்பக்கத்தில் 13எம்பி செல்பீ கேமரா உள்ளது.
குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 13 5ஜி பேண்ட்களுக்கான ஆதரவுடன் (13 5G Bands Support) வருகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் 4 ஆண்டுகளுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates For 4 Years)மற்றும் 5 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை (Security Updates For 5 Years) பெறும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த போன் 6000mAh பேட்டரியை பேக் செய்கிறது. எனவே சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் ( Dimensity 6100+ Chipset) வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 217 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications