Nothing-இன் தில்லாலங்கடி வேலை! "இதெல்லாம்" வேணுமா? அப்போ எக்ஸ்ட்ரா காசு கொடு!

|

நத்திங் (Nothing) நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் (1) ஆனது யூகிக்க முடியாத பட்ஜெட் பிரிவின் கீழ், நினைத்து கூட பார்க்காத (அறிமுக விலை + பேங்க் ஆபர்) சலுகை விலையின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

ரூ.5,000 வரை ஆபர்!

ரூ.5,000 வரை ஆபர்!

அறியாதோர்களுக்கு, நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.32,999 க்கும், அதன் 8ஜிபி + 256ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.35,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆன 12ஜிபி + 256ஜிபி ஆனது ரூ.38,999 க்கும் அறிமுகமானது.

ஆனால் ரூ.3,000 என்கிற அறிமுக தள்ளுபடியின் கீழ் இவைகள் முறையே ரூ.29,999, ரூ.32,999 மற்றும் ரூ.35,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக எச்டிஎப்சி பேங்க் கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில் மேலும் ரூ.2000 என்கிற ஆபர் கிடைக்கும்.

கண்டிப்பாக நல்ல ஆபர் தான்.. ஆனால்?

கண்டிப்பாக நல்ல ஆபர் தான்.. ஆனால்?

மேற்குறிப்பிட்டபடி, லேட்டஸ்ட் நத்திங் போன் 1-இன் விலையை நீங்கள் ரூ.50,00 வரை குறைத்து, அதை ரூ.27,999 க்கு சொந்தமாக்கி கொள்ள முடியும்.

நிச்சயமாக இதுவொரு "நல்ல அம்சங்களை வழங்கும் ஸ்மார்ட்போனின் மீதான நல்ல ஆபர்" என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை!

ஆனால் 33W சார்ஜிங் சப்போர்ட்-ஐ அறிவித்துவிட்டு பாக்ஸில் எந்த சார்ஜரையும் அனுப்பாமல், சந்தையில் 45W ஃபாஸ்ட் சார்ஜரை அறிமுகம் செய்து, அதை விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம்? நீங்களே சொல்லுங்கள்!

பட்ஜெட் விலையில் 2K டிஸ்பிளே, 8340mAh பேட்டரி; Samsung-ஐ மிரட்டும் புதிய Realme Pad!பட்ஜெட் விலையில் 2K டிஸ்பிளே, 8340mAh பேட்டரி; Samsung-ஐ மிரட்டும் புதிய Realme Pad!

நத்திங் போன் 1-இன் அக்ஸசெரீஸ்களை அறிமுகம் செய்த நத்திங்!

நத்திங் போன் 1-இன் அக்ஸசெரீஸ்களை அறிமுகம் செய்த நத்திங்!

ஆம்! நேற்று 33W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் நத்திங் போன் 1-ஐ அறிமுகம் செய்துவிட்டு, தற்போது நத்திங் நிறுவனம் நத்திங் பவர் 45W 3A மொபைல் சார்ஜர்-ஐ அறிமுகம் செய்துள்ளது.

சார்ஜர் மட்டுமல்ல, நத்திங் போன் 1-க்கான க்ளியர் கேஸ் மற்றும் டெம்பர்டு கிளாஸ் ப்ரொடெக்டர் ஆகியவைகளையும் அறிமுகம் செய்துள்ளது.

நத்திங் போன் 1-இன் இந்த அக்ஸசெரீஸ்கள் அனைத்துமே பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் வழியாக வாங்கவும் கிடைக்கிறது.

நத்திங் போன் 1 க்ளியர் கேஸின் விலை என்ன?

நத்திங் போன் 1 க்ளியர் கேஸின் விலை என்ன?

க்ளியர் கேஸ்-ஐ பொறுத்தவரை, இது ரூ.1,499 க்கு வாங்க கிடைக்கும். நத்திங் போன் 1-இன் பேக் பேனல் ஆனது ஸ்மார்ட்போனின் முக்கியமான "ஹை-லைட்களில் ஒன்று" என்பதால், பலரும் இந்த க்ளியர் கேஸ்-ஐ வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம்.

இந்த கேஸ் பாலிகார்பனேட் கட்டமைப்பை கொண்டுள்ளதாகவும், ஷாக்-ப்ஃரூப்-ஐ வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

சார்ஜரின் விலை என்ன?

சார்ஜரின் விலை என்ன?

Nothing Power 45W 3A மொபைல் சார்ஜரை பொறுத்தவரை, சொல்லவே வேண்டாம்; கட்டாயம் வாங்கியே ஆக வேண்டும். இதன் விலை ரூ.1,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஒயிட் கலரில் மட்டுமே வருகிறது.

வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் இந்த சார்ஜர் USB Type-C PD (பவர் டெலிவரி) 3.0 போர்ட் வழியாக 3A அவுட்புட் உடனான 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை வழங்குகிறது.

நிறுவனத்தின் கூற்றுப்படி, வெறும் 30 நிமிட சார்ஜிங்கின் கீழ் இது 65% வரை பேட்டரியை சார்ஜ் செய்யும். மேலும் இந்த சார்ஜர், லேப்டாப்கள் உட்பட PD3.0 / QC4.0+ / QC3.0 / QC2.0 / PPS எனேபிள்டு டிவைஸ்களிலும் வேலை செய்யும் என்று கூறப்படுகிறது.

டெம்பர்டு கிளாஸின் விலை என்ன?

டெம்பர்டு கிளாஸின் விலை என்ன?

கடைசியாக உள்ள டெம்பர்டு கிளாஸ் ஸ்கிரீன் ப்ரொடக்டர் ஆனது ரூ.999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.

நத்திங் போன் 1-க்கான இந்த புதிய டெம்பர்டு கிளாஸ் கார்டு (tempered glass guard) ஆனது 9H ஹை-ஹார்ட்னஸ் ப்ரொடெக்ஷனை வழங்குகிறது. மேலும் இது ஸ்க்ராட்ச் மற்றும் ட்ராப்-ரெசிஸ்டன்ட் என்றும் கூறப்படுகிறது.

Vivo T1x இந்திய அறிமுகம் உறுதி; பல பட்ஜெட் போன்களை வச்சி செய்ய போகுது!Vivo T1x இந்திய அறிமுகம் உறுதி; பல பட்ஜெட் போன்களை வச்சி செய்ய போகுது!

இந்த அக்ஸசெரீஸ்கள் மீது ஏதேனும் சலுகைகள் உண்டா?

இந்த அக்ஸசெரீஸ்கள் மீது ஏதேனும் சலுகைகள் உண்டா?

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த மூன்று அக்ஸசெரீஸ்களுமே தற்போது Flipkart இல் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளன.

நீங்கள் ஆக்சிஸ் பேங்க் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் போது, இந்த இ-காமர்ஸ் இணையதளம் உங்களுக்கு 5 சதவீதம் வரை கேஷ்பேக்கை வழங்கும்

நத்திங் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் - ஒரு பார்வை:

நத்திங் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் - ஒரு பார்வை:

நத்திங் போன் 1 ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிக்கும் 6.55-இன்ச் ஃபுல் எச்டி+ ஓஎல்இடி டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G+ சிப்செட், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான நத்திங் ஓஎஸ், 50MP சோனி IMX766 சென்சார்-ஐ பேக் செய்யும் மெயின் கேமரா + 50MP அல்ட்ரா-வைட் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராக்களை பேக் செய்கிறது

16MP செல்பீ கேமராவை உட்பொதிக்கும் நத்திங் போன் 1 ஆனது 33W யூஎஸ்பி பிடி ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவை கொண்ட 4,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 15W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவை வழங்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது 12GB வரையிலான ரேம் மற்றும் 256GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது.

Photo Courtesy: Nothing

Best Mobiles in India

English summary
Nothing 45W Charger Clear Case Tempered Glass Launched in India Sale Starts in Flipkart Check Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X