Home
Mobile

தூள் பறக்குது ஆர்டர்.. 50MP செல்பி கேமரா.. 256GB மெமரி.. புதிய சாம்சங் 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

சாமசங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி (Samsung Galaxy M55 5G) போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி போனின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி அம்சங்கள் ( Samsung Galaxy M55 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் பிளஸ் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே (Super AMOLED Plus Infinity-O Display) வசதியுடன் இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் கொண்டுள்ளது இந்த போன்.

தூள் பறக்குது ஆர்டர்..  புதிய சாம்சங் 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த சாம்சங் 5ஜி போன். 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு (micro SD card) ஸ்லாட் ஆதரவும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தூள் பறக்குது ஆர்டர்..  புதிய சாம்சங் 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

அதேபோல் சாம்சங் ஒன் யுஐ 6.1 (Samsung One UI 6.1)சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி போன் மாடல்.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா (f/1.8 aperture) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா (f/2.2 aperture) + 2எம்பி மேக்ரோ கேமரா (f/2.4 aperture) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி போன். மேலும் 50எம்பி (f/2.2 aperture) செல்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் போன்.

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ(USB Type-C audio) மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் போனில் உள்ளன. மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி போனின் எடை 180 கிராம் ஆகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

தூள் பறக்குது ஆர்டர்..  புதிய சாம்சங் 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி போனின் விலை ரூ.26,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.29,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.32,999 விலையிலும் வாங்க முடியும். டெனிம் பிளாக் (Denim Black) மற்றும் லைட் கிரீன் ( Light Green) நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.

அதேபோல் அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர்களில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி போன் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த புதிய சாம்சங் போனை ரூ.24,999 விலையில் வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M55 5G with Snapdragon 7 Gen 1 launched in India: check specifications price, offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X