Home
How to

SBI வங்கியின் ஒரே ஒரு அறிவிப்பு; ஒட்டுமொத்த கஸ்டமர்களும் செம்ம ஹேப்பி!

எஸ்பிஐ என்று நன்கு அறியப்படும் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India - SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு (ஒருவழியாக) அதன் வங்கிச் சேவையை எளிதாக்கும் நோக்கத்தின் கீழ் வாட்ஸ்அப் பேங்கிங் சேவைகளை (WhatsApp Banking services) அறிமுகப்படுத்தி உள்ளது.

இனிமேல் ஏடிஎம்-க்கு போகும் வேலை குறையும்!

இனிமேல் ஏடிஎம்-க்கு போகும் வேலை குறையும்!

இன்னும் புரியும் படி கூற வேண்டும் என்றால், இனிமேல் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து சில வங்கி சேவைகளை மிகவும் எளிமையாக அணுகலாம்.

எஸ்பிஐ வங்கியின் இந்த சமீபத்திய நடவடிக்கை பலருக்கும் வசதியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனெனில் இது எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வமான ஆப்பை பதிவிறக்குவது / பயன்படுத்துவது அல்லது ஏடிஎம்-மிற்கு செல்லும் தேவையை குறைக்கிறது.

இதற்கு முதலில் 'ரிஜிஸ்டர்' செய்ய வேண்டும்!

இதற்கு முதலில் 'ரிஜிஸ்டர்' செய்ய வேண்டும்!

எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள வாட்ஸ்அப் பேங்கிங் வழியிலான சேவைகளை பெற, அதன் வாடிக்கையாளர்கள் முதலில் குறிப்பிட்ட சேவைக்கு 'பதிவு' செய்ய வேண்டும்.

அதை செய்ய 7208933148 என்ற எண்ணிற்கு WAREG என்கிற டெக்ஸ்ட்-ஐ டைப் செய்து, பின் ஒரு ஸ்பேஸ் விட்டு, உங்கள் அக்கவுண்ட் நம்பரை டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பவும்.

மெசேஜ் னுப்பும் போது.. இன்னொரு முக்கியமான மேட்டர்!

மெசேஜ் னுப்பும் போது.. இன்னொரு முக்கியமான மேட்டர்!

எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் சேவைக்காக ரிஜிஸ்டர் செய்யும் போது, நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மேற்குறிப்பிட்ட எஸ்எம்எஸ்-ஐ ஏதோவொரு மொபைல் நம்பரில் இருந்து அனுப்பிவிட வேண்டாம்.

அது உங்கள் SBI அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பராக இருக்க வேண்டம். அந்த எண்ணிலிருந்து தான் மேற்குறிப்பிட்ட SMS-ஐ நீங்கள் அனுப்ப வேண்டும்.

ரிஜிஸ்டர் செய்த பின்னர்.. ஒரு மொபைல் நம்பர் வரும்!

ரிஜிஸ்டர் செய்த பின்னர்.. ஒரு மொபைல் நம்பர் வரும்!

எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் சேவைக்காக நீங்கள் வெற்றிகரமாக பதிவுசெய்த பிறகு, எஸ்பிஐ-யின் 90226 90226 என்கிற எண் உங்களுக்கு ஒரு மெசேஜ் ஆக வந்து சேரும். ஒருவேளை இந்த நம்பர் உங்கள் போனில் 'சேவ்' செய்யப்பட்டு இருக்கலாம். இல்லையென்றால் Save செய்து கொள்ளவும்.

"ஹாய்" சொல்லி எஸ்பிஐ-க்கு ஒரு மெசேஜ் அனுப்புங்க!

இப்போது வாட்ஸ்அப் வழியாக 90226 90226 என்ற எண்ணுக்கு "Hi SBI" என்று ஒரு மெசேஜ் அனுப்பவும் அல்லது உங்களுக்கு கிடைத்த வாட்ஸ்அப் மெசேஜிற்கு 'ரிப்ளை' செய்யவும்.

உங்கள் பக்கத்தில் இருந்து ஒரு மெசேஜை அனுப்பிய பிறகு, அதனை தொடர்ந்து நீங்கள் ஒரு அறிவிப்பை பெறுவீர்கள். அதன் வழியாக உங்களின் அக்கவுண்ட் பேலன்ஸ் விவரங்கள் மற்றும் மினி ஸ்டேட்மெண்ட்டை பார்க்கலாம்.

எஸ்பிஐ கிரெடிட் கார்டு யூசர்களுக்கும் சில சேவைகள் கிடைக்கும்!

எஸ்பிஐ கிரெடிட் கார்டு யூசர்களுக்கும் சில சேவைகள் கிடைக்கும்!

பேலன்ஸ் செக் மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் உடன் நின்று விடாமல், எஸ்பிஐ வங்கியானது அதன் வாட்ஸ்அப் பேங்கிங் சேவையின் கீழ் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிரெடிட் கார்டு பயனர்களும், சில தகவல்களை அணுக கிடைக்கும்படி செய்துள்ளது.

அதாவது நீங்களொரு SBI கிரெடிட் கார்ட்டை வைத்திருந்தால், உங்கள் அக்கவுண்ட் சம்மரி, ரிவார்ட் பாயிண்ட்ஸ், அவுட்ஸ்டேண்டிங் பேலன்ஸ் மற்றும் பிற தகவல்களை சரிபார்க்க வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தி கொள்ளலாம்.

அதெப்படி? - அதற்கும் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்!

அதெப்படி? - அதற்கும் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்!

இதற்கு பதிவு செய்ய, எஸ்பிஐ கார்டு பயனர்கள் 90040 22022 என்ற எண்ணுக்கு "OPTIN" என்று டைப் செய்து, வாட்ஸ்அப் வழியாக மெசேஜ் அனுப்ப வேண்டும். இதை செய்ய மேற்குறிப்பிட்ட விவரங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதற்கு பதிவு செய்ய, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப் செயலியை நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 08080 945040 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் செய்வதன் வழியாகவும் கூட குறிப்பிட்ட சேவைக்காக நீங்கள் ரிஜிஸ்டர் செய்யலாம்.

எஸ்பிஐ அண்ணே.. இதுவே ரொம்ப லேட்டு!

எஸ்பிஐ அண்ணே.. இதுவே ரொம்ப லேட்டு!

குடும்பம் தொடர்பான விடயமாக இருந்தாலும் சரி, அலுவலக வேலையாக இருந்தாலும் சரி, வாட்ஸ்அப் என்பது எல்லா இடங்களிலும் தொடர்பு கொள்ள மிகவும் எளிமையான ஒரு வழியாகிவிட்டது. இதனாலேயே, பல வங்கிகளும் வாட்ஸ்அப் மூலம் தத்தம் வங்கி வசதிகளை வழங்கி வருகின்றன.

அந்த பட்டியலில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) இணைந்துள்ளது கொஞ்சம் தாமதம் தான் என்றாலும் கூட, ஒருவழியாக வந்துவிட்டது என்பதில் மகிழ்ச்சி!

எஸ்பிஐ வங்கியின் இந்த வாட்ஸ்அப் பேங்கிங் சேவைகள் மூலம் பேங்க் பேலன்ஸ், மினி ஸ்டேட்மெண்ட் உள்ளிட்ட பல சேவைகளை மொபைல் வழியாகவே அணுக முடியும் என்பதால், வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் குறையும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

நினைவூட்டும் வண்ணம், சில நாட்களுக்கு முன்பு, எஸ்பிஐ தலைவர் ஆன தினேஷ் காரா, வாட்ஸ்அப் வழியிலான வங்கி சேவைகளை வழங்கும் எஸ்பிஐ-யின் திட்டங்களை வெளிப்படுத்தினார். பின்னர் கடந்த ஜூலை 19 ஆம் தேதியன்று, எஸ்பிஐ வங்கி ஒரு ட்வீட் மூலம் இந்த வாட்ஸ்அப் பேங்கிங் சேவைகளை அறிமுகம் செய்தது.

Best Mobiles in India

English summary
SBI Customers Now Check Account Balance Get Mini Statement via WhatsApp How to Register and Use
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X