Home
Gadgets

அதிரவிடும் விலை.. 3D சரவுண்ட் ஸ்பீக்கர்.. 75 இன்ச்.. புதிய சாம்சங் 4K ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்..

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் 4கே கிரிஸ்டல் ஸ்மார்ட்டிவிகளை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய டிவிகள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தற்போது சாம்சங் நிறுவனம் கிரிஸ்டல் 4கே விவிட் (Crystal 4K Vivid), கிரிஸ்டல் 4கே விவிட் ப்ரோ (Crystal 4K Vivid Pro ), கிரிஸ்டல் 4கே விஷன் ப்ரோ (crystal 4K Vision Pro) ஆகிய மூன்று மாடல்களில் டிவிகளை அறிமுகம் செய்துள்ளன. குறிப்பாக 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் ஆகிய அளவுகளில் இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை வாங்க முடியும்.

அதிரவிடும் விலை.. புதிய சாம்சங் 4K ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்..

சாம்சங் கிரிஸ்டல் 4கே டிவி 2024 சீரிஸ் அம்சங்கள் (Samsung Crystal 4K TV 2024 Series Specifications): இப்போது அறிமுகம் செய்யப்பட்ட மூன்று சாம்சங் கிரிஸ்டல் 4கே டிவி 2024 சீரிஸ் மாடல்களும் ஒரே மாதிரியான டிஸ்பிளே பேனல் அம்சங்களை (display panel specifications) கொண்டுள்ளன. ஆனால் ஸ்கிரீன் சைஸ்(screen size) மற்றும் பிரேம் வடிவமைப்பு ( frame design) ஆகியவை மூன்று மாடல்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் ஆகும்.

குறிப்பாக சாம்சங் கிரிஸ்டல் 4கே 2024 டிவிகள் ஆனது டிவி எல்சிடி பேனல் மற்றும் LED பேக்லிட் (LED backlit) வசதியைக் கொண்டுள்ளன. மேலும் பிக்ஸ்பி (Bixby) மற்றும் அமேசான் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவுகளைக் கொண்டுள்ளன இந்த புத்தம் புதிய சாம்சங் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

சாம்சங் கிரிஸ்டல் 4கே 2024 டிவிகள் ப்யூர்கலர் டெக்னாலஜி (PurColor Technology), எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), 1 பில்லியன் ட்ரூ கலர்ஸ் (One Billion True Colors) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த டிவிகள் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிஸ்டல் பிராசஸர் 4கே வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் டிவிகள். குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த டிவிகளின் ஆடியோ வசதிக்கு அதிக கவனம் கொடுத்துள்ளது சாம்சங் நிறுவனம். அதாவது க்யூ சிம்போனி (Q-Symphony) மற்றும்OTS Lite (ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட்) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன இந்த டிவிகள். எனவே சிறந்த ஆடியோ அனுபவம் இந்த டிவிகளில் கிடைக்கும்.

அதேபோல் சாம்சங் கிரிஸ்டல் 4கே 2024 டிவிகளில் டால்பி டிஜிட்டல் பிளஸ் மூலம் 3டி சரவுண்ட் ஆடியோ அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோ கேம் மோட் (Auto Game Mode), மோஷன் எக்ஸ்செலரேட்டர் (Motion Xcelerator) போன்ற பல கேமிங் வசதிகளையும் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் டிவி. எனவே கேமிங் பயனர்கள் இந்த 4கே சாம்சங் டிவிகளை நம்பி வாங்கலாம்.

அதிரவிடும் விலை.. புதிய சாம்சங் 4K ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்..

சாம்சங் கிரிஸ்டல் 4கே டிவி 2024 சீரிஸ் மாடல்களுக்கு 2 வருட வாரண்டியை வழங்குகிறது சாம்சங் நிறுவனம். குறிப்பாக சாம்சங் கிரிஸ்டல் 4கே டிவி விவிட் சீரிஸ் ஆரம்ப விலை ரூ.32,990-ஆக உள்ளது. சாம்சங் கிரிஸ்டல் 4கே டிவி விஷன் ப்ரோ சீரிஸ் ஆரம்ப விலை ரூ.34,490-ஆக உள்ளது. கடைசியாக கிரிஸ்டல் 4கே டிவி விவிட் ப்ரோ சீரிஸ் ஆரம்ப விலை ரூ.35,990-ஆக உள்ளது.

அமேசான், பிளிப்கார்ட், சாம்சங் ஆன்லைன் ஸ்டோர்களில் இந்த புதிய சாம்சங் கிரிஸ்டல் 4கே 2024 டிவிகளை வாங்க முடியும். குறிப்பாக இந்த டிவிகள் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

Best Mobiles in India

English summary
Samsung 2024 Crystal 4K Vivid, 4K Vision Pro, 4K Vivid Pro TV Series Launched in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X