இனி "பத்தல பத்தல"னு சொல்ல முடியாது; நியாயமான விலையில் உலகின் முதல் 200W போன்!

|

50எம்பி மெயின் கேமரா, சக்திவாய்ந்த Snapdragon 8+ Gen 1 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் போன்ற முக்கிய அம்சங்களுடன் ஐக்யூ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக iQOO 10 மற்றும் iQOO 10 Pro நேற்று (ஜூலை 19) அறிமுகம் ஆகின.

ப்ரோ மாடலுக்கும் வெண்ணிலா மாடலுக்கும் என்னென்ன வேறுபாடு? இரண்டும் என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்? எப்போது முதல் விற்பனை? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

ப்ரோ vs வெண்ணிலா: முக்கியமான.. அதே சமயம்

ப்ரோ vs வெண்ணிலா: முக்கியமான.. அதே சமயம் "வெயிட்டான" வேறுபாடு!

இந்த 2 ஸ்மார்ட்போன்களுக்குமான முக்கிய வேறுபாடு; ப்ரோ மாடலில் உள்ள 200W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆகும். நிறுவனத்தின் கூற்றுப்படி, இது "உள்ளமைக்கப்பட்ட" 4700mAh பேட்டரியை வெறும் 12 நிமிடங்களில் 100% சார்ஜ் செய்யும்.

மேலும் 200W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டு வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போனும் இதுவாகும்.

இந்த 5 அறிகுறியில் 1 இருந்தாலும் உங்கள் போனில் பெரிய சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்!இந்த 5 அறிகுறியில் 1 இருந்தாலும் உங்கள் போனில் பெரிய சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்!

ஐக்யூ 10-இன் டிஸ்பிளே, ப்ராசஸர், ஸ்டோரேஜ்:

ஐக்யூ 10-இன் டிஸ்பிளே, ப்ராசஸர், ஸ்டோரேஜ்:

வெண்ணிலா மாடலான ஐக்யூ 10 ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர், "குறுகிய" பெசல்ஸ், பஞ்ச்-ஹோல் கட்அவுட், 2400×1080 பிக்சல்ஸ் ரெசல்யூஷனை வழங்கும் 6.78-இன்ச் அளவிலான FHD+ E5 AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இது அட்ரெனோ ஜிபியு உடனான Qualcomm Snapdragon 8+ Gen1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது 12ஜிபி வரையிலான LPDDR5 ரேம் மற்றும் 512GB அளவிலான UFS 3.1 ஸ்டோரேஜையும் பேக் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-அடிப்படையிலான OriginOS Ocean Skin உடன் வருகிறது.

iQOO 10-இன் கேமரா மற்றும் பேட்டரி:

iQOO 10-இன் கேமரா மற்றும் பேட்டரி:

கேமராக்களை பொறுத்தவரை, iQOO 10 ஆனது 50MP மெயின் கேமரா (சாம்சங் GN5 சென்சார்) + 13MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 12MP IMX663 போர்ட்ரெய்ட் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை 16MP செல்பீ கேமரா உள்ளது.

மேலும் இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 4,700mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது மற்றும் இது ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை வழங்குகிறது.

சீன ஸ்மார்ட்போன்களின் ஆட்டத்தை கலைக்க முடிவு செய்த Google! என்ன சமாச்சாரம்?சீன ஸ்மார்ட்போன்களின் ஆட்டத்தை கலைக்க முடிவு செய்த Google! என்ன சமாச்சாரம்?

ஐக்யூ 10 ப்ரோவின் டிஸ்பிளே, ப்ராசஸர், ஸ்டோரேஜ்:

ஐக்யூ 10 ப்ரோவின் டிஸ்பிளே, ப்ராசஸர், ஸ்டோரேஜ்:

மறுகையில் உள்ள ப்ரோ மாடல் ஆனது "அதே" 6.78-இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது. ஆனால் இதுவொரு 2கே இ5 AMOLED LTPO 3.0 டிஸ்ப்ளே ஆகும்.

மேலும் இந்த டிஸ்பிளே 1Hz - 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10+, 3200 x 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 1500நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ், DCI-P3 கலர் கேமட் மற்றும் பன்ச்-ஹோல் கட-அவுட் டிசைனுடன் வருகிறது.

இது Adreno GPU உடன் இணைக்கப்பட்ட Qualcomm Snapdragon 8+ Gen1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 12GB LPDDR5 ரேம் மற்றும் 512GB UFS 3.1 ஸ்டோரேஜை பேக் செய்கிறது. இதுவும் வெண்ணிலா மாடலை போலவே, ஆண்ட்ராய்டு 12ஓஎஸ்-அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ் ஓஷன் ஸ்கின் கொண்டு இயங்குகிறது.

iQOO 10 Pro-வின் கேமரா, பேட்டரி!

iQOO 10 Pro-வின் கேமரா, பேட்டரி!

இது 50MP மெயின் கேமரா + 150 டிகிரி FoV உடன் 50MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 14.6MP 3X போர்ட்ரெய்ட் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவை கொண்டுள்ளது. "இமேஜிங்கிற்காக' இதில் பிரத்யேகமாக V1+ சிப்பும் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, 16MP செல்பீ கேமரா உள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, ஐக்யூ 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 200W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஆதரவுடனான 4,700mAh பேட்டரியை கொண்டுள்ளது.

மேலும் இது ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், 3930mm² லார்ஜ் ஏரியா சோக்கிங் பிளேட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், ஹை-ஃபை ஆடியோ மற்றும் டைப்-சி ஆடியோ, 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவைகளையும் வழங்குகிறது.

Google Drive யூஸ் பண்ற எல்லாருக்கும் Google Drive யூஸ் பண்ற எல்லாருக்கும் "இது" கட்டாயம் தெரிஞ்சு இருக்கனும்! என்னது அது?

iQOO 10 விலை விவரங்கள்:

iQOO 10 விலை விவரங்கள்:

ஐக்யூ 10 ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் விலைகளை பொறுத்தவரை...

8GB + 128GB - தோராயமாக ரூ.43,900
8GB + 256GB - தோராயமாக ரூ.47,400
12GB + 256GB - தோராயமாக ரூ.51,000
12GB + 512GB - தோராயமாக ரூ.55,700

இது ஆரஞ்சு, பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

iQOO 10 Pro விலை விவரங்கள்:

iQOO 10 Pro விலை விவரங்கள்:

ஐக்யூ 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் விலைகளை பொறுத்தவரை...

8GB + 256GB - சுமார் ரூ.59,200
12GB + 256GB - சுமார் ரூ.65,200
12GB + 512GB - சுமார் ரூ.71,000

இது பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களின் வெளியாகி உள்ளது.

மேற்கண்ட விலைகளை சீன விலை விவரங்கள் ஆகும். இந்த 2 ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகம் குறித்து, இதுவரை எந்த தகவலும் இல்லை. அதுகுறித்த தகவல் கிடைத்தால் உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

Photo Courtesy: iQOO

Best Mobiles in India

English summary
World's First Smartphone Which Offers 200W Fast Charging Support iQOO 10 Pro launched along with iQOO 10 in China Check Full Specifications Price details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X