6 அடி தூரம் இருந்தா போதும்.. யாரு வேணா வாங்கலாம்.. 98-இன்ச் Samsung TV அறிமுகம்.. என்ன விலை?
குடும்பத்தோடு தியேட்டருக்கு போய் படம் பார்க்கும் பழக்கமானது.. அதே குடும்பத்தோடு ஓடிடி தளங்களின் வழியாக படம் பார்க்கும் பழக்கமாக மாற்றிவிட்டடது. ஒப்பீட்டளவில் ஓடிடி வழியாக படம் பார்ப்பது நம்பமுடியாத அளவிற்கு செலவுகளையும் குறைக்கிறத. ஆனால் இதற்கு ஒரு பெரிய ஸ்மார்ட் டிவி நிச்சயம் தேவை!
நிச்சயமாக 32-இன்ச் அல்லது 43-இன்ச் ஸ்மார்ட் டிவியிலும் கூட குடும்பத்தோடு உட்காந்து படம் பார்க்கலாம் தான். ஆனால் அது தியேட்டர் லெவல் எக்ஸ்பீரியன்ஸை வழங்குமா என்று கேட்டால் - சந்தேகம் தான். இந்த இடத்தில் தான் 55-இன்ச் அல்லது மேற்பட்ட அளவிலான ஸ்க்ரீன் சைஸ் கொண்ட ஸ்மார்ட் டிவிகளின் தேவை வருகிறது.

அந்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தின்கீழ் தான் சாம்சங் (Samsung) நிறுவனமானது, கடந்த ஜனவரி மாதம் நடந்த சிஇஎஸ் 2024 நிகழ்வில் 98-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தது. அந்த நேரத்தில் குறிப்பிட்ட ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் விற்பனை குறித்து எந்த தகவலும் வெளிப்படுத்தப்படவில்லை, தற்போது 3 மாதங்களுக்கு பின்னர் இந்த டிவி விற்பனைக்கு வந்துள்ளது.
என்ன விலை? சாம்சங் நிறுவனத்தின் புதிய 98-இன்ச் கிளாஸ் கிரிஸ்டல் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவியானது $4,000-க்கு.. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.3,34,655 க்கு, சாம்சங் நிறுவனத்தின் சொந்த வெப்ஸ்டோர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து கிடைக்கிறது. இந்த டிவியின் இந்திய அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை.
என்னென்ன அம்சங்கள்? இந்த 98-இன்ச் சாம்சங் ஸ்மார்ட் டிவியின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, படத்தின் தரத்தை மேம்படுத்த ஏஐ-அடிப்படையிலான அம்சம் பயன்படுத்துகிறது. பொதுவாக, டிஸ்பிளேவின் அளவு பெரிதாகும்போது அவற்றின் பிக்சல்களும் பெரிதாகின்றன. இருப்பினும், சூப்பர்சைஸ் பிக்சர் என் ஹான்சர் (Supersize Picture Enhancer) மூலம், இந்த டிவியின் ஷார்ப்னஸ் அதிகரிக்கப்படும். இதன் பிக்சல் சிதைவு இருக்காது, கூடவே ஸ்க்ரீனில் புலப்படும் நாய்ஸ்ஸும் குறையும்.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 4கே அப்ஸ்கேலிங், பர்கலர் மற்றும் எச்டிஆர் போன்ற ஆதரவுகளையும் கொண்டுள்ளது. இதிலுள்ள மோஷன் எக்ஸ்செலரேட்டர் செயல்பாடு மற்றும் 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் ஆனது சீரான கேம்ப்ளேவையும் உறுதிப்படுத்தும்.
இதிலுள்ள கேமிங் ஹப் மூலம் எக்ஸ்பாக்ஸ் கிளவுட் கேமிங் மற்றும் அமேசான் லூனா போன்றவற்றிலிருந்து கேம்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மற்ற கேமிங் அம்சங்களை பொறுத்தவரை, இதில் ஏஐ ஆட்டோ கேம் மோட், மினி மேப் ஆட்டோ டிடெக்ஷன் மற்றும் விர்ச்சுவல் ஏம் பாயிண்ட் ஆகியவைகள் உள்ளன.
சாம்சங்கின் இந்த 98-இன்ச் டிவியை உங்கள் வீட்டில் வைக்க எவ்வளவு பெரிய அறை தேவைப்படும்? சாம்சங்கின் கூற்றுப்படி.. ஒரு 98-இன்ச் டிவியை பார்க்க.. உங்களுக்கும் டிவிக்கும் இடையே இருக்க வேண்டிய பரிந்துரைக்கப்படும் தூரம் 6 முதல் 12 அடி வரை ஆகும். இந்த அளவிலான் இடைவெளி இருக்கும் ஒரு அறை உங்கள் வீட்டில் இருந்தால்.. 98-இன்ச் டிவியை நம்பி வாங்கலாம்.
100-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி! சமீபத்தில் சீன பிராண்ட் ஆன ஷாவ்மீயின், துணை நிறுவனமான ரெட்மி, அதன் ஸ்மார்ட் டிவி தயாரிப்பின் கீழ் 100-இன்ச் அளவிலான டிஸ்பிளே (100-inch Display) கொண்ட ஒரு புதிய கேமிங் டிவியை அறிமுகம் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. ரெட்மி மேக்ஸ் (Redmi MAX) என்று அழைக்கப்படும் இந்த டிவியை ஒரு "கேமிங் ஸ்பெஷலிஸ்ட்" ஆக மாற்றுவது இதிலுள்ள 144ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz screen refresh rate) தான்!
விலையை பொறுத்தவரை, சீன சந்தையில் ரெட்மியின் இந்த 100-இன்ச் கேமிங் டிவியானது, இந்திய மதிப்பின்படி தோராயமாக 1 லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்கே இந்த டிவியை முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.17,300 மதிப்புள்ள ஷாவ்மீ டிவி ஸ்பீக்கர் (Xiaomi TV Speaker) இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!


Click it and Unblock the Notifications