இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி விட சிறந்ததா Poco M5 4G: வாங்க பார்ப்போம்.!

|

போக்கோ நிறுவனம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி புதிய போக்கோ எம்5 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

போக்கோ எம்5 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். மேலும் 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Android vs iPhone: ஆண்ட்ராய்டை விட ஐபோன் ஏன் சிறந்தது தெரியுமா? காரணம் தெரிஞ்சு ஐபோன் வாங்குங்க..Android vs iPhone: ஆண்ட்ராய்டை விட ஐபோன் ஏன் சிறந்தது தெரியுமா? காரணம் தெரிஞ்சு ஐபோன் வாங்குங்க..

மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட்

மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட்

இந்த போக்கோ எம்5 4ஜி போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் பயன்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாக பயன்படும்.மேலும் இந்த போக்கோ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2 புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்த யமஹா! விலையை சொன்னா நம்புவீங்களா?2 புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்த யமஹா! விலையை சொன்னா நம்புவீங்களா?

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி

போக்கோ எம்5 4ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

வியக்க வைக்கும் சுவாரஸ்யம்- 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் வைஃபை சேவை: சாத்தியமானது எப்படி தெரியுமாவியக்க வைக்கும் சுவாரஸ்யம்- 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் வைஃபை சேவை: சாத்தியமானது எப்படி தெரியுமா

 50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

போக்கோ எம்5 4ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

புதிய போக்கோ எம்5 4ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதேபோல் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.

கம்மி விலையில் புதிய போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிமுகம் செய்த வோடபோன் ஐடியா.! என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?கம்மி விலையில் புதிய போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிமுகம் செய்த வோடபோன் ஐடியா.! என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், என்எப்சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போக்கோ எம்5 4ஜி ஸ்மார்ட்போன் மாடல்.மேலும் அருமையான வடிவமைப்புடன் வெளிவரும் இந்த போக்கோ போன்.

வாட்ஸ்அப்பில் சைலன்ட் ஆக அறிமுகமான ஆட்டோமெட்டிக் ஆல்பம்ஸ்! என்ன யூஸ்? யாருக்கெல்லாம் கிடைக்கும்?வாட்ஸ்அப்பில் சைலன்ட் ஆக அறிமுகமான ஆட்டோமெட்டிக் ஆல்பம்ஸ்! என்ன யூஸ்? யாருக்கெல்லாம் கிடைக்கும்?

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி விட சிறந்ததா?

போக்கோ எம்5 4ஜி போலவே ஹீலியோ ஜி99 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த
இன்பினிக்ஸ் போன் AMOLED டிஸ்ப்ளே, 108எம்பி கேமரா, 8ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் எனப் பல சிறப்பு அம்சங்களுடன்ரூ.16,999-விலையில் வெளிவந்துள்ளது.

எனவே விரைவில் அறிமுகமாகும் போக்கோ ஸ்மார்ட்போனும் இதேபோன்ற பட்ஜெட் விலையில் வெளிவந்தால் நல்ல வரவேற்பு இருக்கும். அதேபோல்இந்த இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி போனும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் இதை வாங்குவது நல்லது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Poco M5 4G will be launched on September 5: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X