வாட்ஸ்அப்பில் சைலன்ட் ஆக அறிமுகமான ஆட்டோமெட்டிக் ஆல்பம்ஸ்! என்ன யூஸ்? யாருக்கெல்லாம் கிடைக்கும்?

|

'மல்டி டிவைஸ் சப்போர்ட்' அறிமுகமான பின்னர், வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு நிற்க கூட நேரமில்லை என்றே கூறலாம். முன்னதாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்களுக்கான அப்டேட்களில் மட்டுமே பெரிதும் கவனம் செலுத்தி வந்த வாட்ஸ்அப் நிறுவனம், தற்போது விண்டோஸ் வெர்ஷனுக்கான அப்டேட்டிலும் தீயாக வேலை செய்து வருவது போல் தெரிகிறது.

வாட்ஸ்அப்பில் சைலன்ட் ஆக அறிமுகமான ஆட்டோமெட்டிக் ஆல்பம்ஸ்! என்ன யூஸ்?

ஏனெனில் வாட்ஸ்அப் நிறுவனம் அதன் விண்டோஸ் பீட்டா வெர்ஷனில் 'ஆட்டோமெட்டிக் ஆல்பம்ஸ்' (automatic albums) என்கிற அம்சத்தை 'டெஸ்ட்' செய்து வருவதாக கூறப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் இந்த அம்சம் ஏற்கனவே அணுக கிடைக்கிறது. தற்போது இது விண்டோஸ் பீட்டாவிற்கு வருகிறது.

ஆட்டோமெட்டிக் ஆல்பம்ஸ் என்கிற அம்சமானது, சாட் விண்டோவில் அனுப்பப்படும் தொடர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வகைப்படுத்த அனுமதிக்கும். அதாவது வாட்ஸ்அப் யூசர்கள் தொடர்ந்து மூன்று புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அனுப்பும்போது அல்லது பெறும்போது, ​​ஸ்க்ரோல் செய்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்க, வாட்ஸ்அப் தானாகவே அவற்றை ஒரு ஆல்பமாக உருமாற்றும். அப்படியாக உருவான ஆல்பத்தை கிளிக் செய்வதன் மூலம் யூஸர்களால் குறிப்பிட்ட மீடியா கலெக்ஷனை முழுமையாக பார்க்க முடியும்.

மெட்டாவுக்கு சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்பார்ம் ஆன வாட்ஸ்அப், அதன் யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்ஃபார்ம் ( Universal Windows Platform - UWP) வெர்ஷன் மூலம் இந்த அம்சத்தை வெளியிடுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் அம்சங்களை கண்காணிக்கும் வலைத்தளமான வாட்ஸ்அப்இன்ஃபோபீட்டா (WABetaInfo) வழியாக வெளியான அறிக்கையின்படி, விண்டோஸ் பீட்டாவில் ஆட்டோமெட்டிக் ஆல்பங்களுக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம், சாட்டில் தொடர்ச்சியாக ஷேர் செய்யப்படும் மீடியாக்கள், சிங்கிள் ஆல்பமாக ஒழுங்கமைக்கப்படும். அதாவது யூஸர்கள் தொடர்ந்து மூன்று புகைப்படங்கள் அல்லது வீடியோக்களுக்கு மேல் பெறும்போது - வாட்ஸ்அப்பின் யுடபுள்யூபி (UWP) வெர்ஷனை பயன்படுத்தும் பட்சத்தில் - ​​கிடைக்கப்பெற்ற முழு கலெக்ஷனையும் காண, வெறுமனே ஆட்டோமெட்டிக் ஆல்பமை கிளிக் செய்தால் போதும்.

இந்த அம்சம், மைக்ரோசாப்ட் ஸ்டோரிலிருந்து விண்டோஸ் பீட்டா ஆப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனை இன்ஸ்டால் செய்த யூஸர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், முன்னரே குறிப்பிட்டபடி, இந்த அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-க்கான வாட்ஸ்அப் பீட்டாவிலும் அணுக கிடைக்கிறது.

ஆட்டோமெட்டிக் ஆல்பம்ஸ் அம்சத்தை தவிர்த்து, விண்டோஸிற்கான வாட்ஸ்அப் பீட்டாவில், வியூ ஒன்ஸ் போட்டோக்களை (View once photos) ஷேர் செய்யும் அம்சமும், வாய்ஸ் நோட்ஸ்களை ரெக்கார்ட் (Record voice notes) செய்யும் அம்சமும் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தவிர, வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை வெளியிடத் தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது, அது யூஸர்களை ஒரு க்ரூப் சாட்டில் 512 மெம்பர்களை சேர்க்க அனுமதிக்குமாம்.

உடன் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களுக்கான புதிய அன்டூ (Undo) விருப்பத்தையும் வாட்ஸ்அப் சோதித்து வருகிறதாம். இந்த விருப்பத்தின் கீழ் 'டெலிட் ஃபார் மீ (Delete for Me) என்கிற ஒரு விருப்பத்தைப் பயன்படுத்த, டெலிட் செய்யப்பட்ட ஒரு மெசேஜ் ஆனது ஸ்க்ரீனின் அடிப்பகுதியில் ஒரு புதிய பாப்-அப் பார் ஸ்க்ரீனில் தோன்றுமாம்.

மேலும் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.13.6 வெர்ஷனில் வாட்ஸ்அப் வழியாக 2ஜிபி வரை அளவிலான ஃபைல்களை ஷேர் செய்வதற்கான ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம், தற்போது வரையிலாக 100எம்பி வரை அளவிலான ஃபைல்களை மட்டுமே நம்மால் ஷேர் செய்ய முடியும்.

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகி உள்ள லேட்டஸ்ட் அம்சங்கள் குறித்த இந்த பட்டியலில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்து "புதிய" ஐபோனிற்கு வாட்ஸ்அப் டேட்டாக்களை டிரான்ஸ்பர் செய்யும் அம்சம் மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் ஐபோனில் இருந்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கு டேட்டா டிரான்ஸ்பர் செய்யும் ஆதரவு அறிமுகமாகி ஒரு ஆண்டு கழித்து இது வருகிறது. இந்த அம்சம் குறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Best Mobiles in India

English summary
WhatsApp to get a new feature called Automatic Albums on Windows Beta. This feature is already available in the Android iOs beta. Check details and other upcoming Whatsapp updates.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X