இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
போக்கோ நிறுவனத்தின் போக்கோ சி61 ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 5000எம்ஏஎச் பேட்டரி, 6.71-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது.
அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ சி61 ஸ்மார்ட்போன் ஆனது முன்பு ரூ.7,499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட விலை குறைப்பின் மூலம் இந்த 4ஜிபி ரேம் கொண்ட போக்கோ சி61 போனை ரூ.6,999 விலையில் வாங்க முடியும்.

போக்கோ சி61 அம்சங்கள் (Poco C61 specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் ஹலியோ ஜி36 சிப்செட் (MediaTek Helio G36 SoC) கொண்டு வெளிவந்துள்ளது போக்கோ சி61 ஸ்மார்ட்போன். அதேபோல் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் போக்கோ சி61 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
போக்கோ சி61 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே (LCD display) வசதியைக் கொண்டுள்ளது . பின்பு 1650 x 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ சி61 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 8எம்பி மெயின் கேமரா + 0.8எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது போக்கோ சி61 ஸ்மார்ட்போன். இதற்கு பதிலாக 50எம்பி ரியர் கேமரா கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். மேலும் செல்பிகளுக்கும்இ வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ சி61 ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது.

குறிப்பாக டூயல் சிம், 4ஜி, வைஃபை 5, புளூடூத் 5.3, 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போக்கோ சி61 போன் வெளிவந்துள்ளது. டயமன்ட் டஸ்ட் பிளாக், எதர்னல் ப்ளூ மற்றும் மிஸ்டிசல் கிரீன் ஆகிய 3 நிறங்களில் இந்த புதிய போக்கோ சி61 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் போக்கோ சி61 ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் போக்கோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications