Home
Gadgets

வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?

சியோமி (Xiaomi) நிறுவனம் இந்திய சந்தையில் சியோமி ரோபோட் வாக்யூம் S10 (Xiaomi Robot Vacuum S10) மற்றும் ஹேன்ட்ஹெல்ட் கார்மெண்ட் ஸ்டீமர் (Handheld Garment Steamer) என்ற இரண்டு புதிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

சியோமி நிறுவனம் ரெட்மி பேட் SE (Redmi Pad SE) மற்றும் ரெட்மி பட்ஸ் 5A (redmi Buds 5A) போன்ற சாதனங்களுடன் சியோமி ரோபோட் வாக்யூம் S10 (Xiaomi Robot Vacuum S10) மற்றும் சியோமி ஹேன்ட்ஹெல்ட் கார்மெண்ட் ஸ்டீமர் (Xiaomi Handheld Garment Steamer) ஆகிய புதிய சாதனங்களை இந்தியாவில் நடைபெற்ற ஸ்மார்ட் லிவ்விங் ஈவென்ட் (Smart Living Event) நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.

வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer..

சியோமி ரோபோட் வாக்யூம் S10 (Xiaomi Robot Vacuum S10) மற்றும் சியோமி ஹேன்ட்ஹெல்ட் கார்மெண்ட் ஸ்டீமர் (Xiaomi Handheld Garment Steamer):
என்ன தான் சியோமி நிறுவனம் நான்கு சாதனங்களை நச்சென்று அறிமுகம் செய்திருந்தாலும். சியோமி ரசிகர்களின் கவனம் முழுக்க, சியோமி அறிமுகம் செய்த புதிய கையடக்க கார்மெண்ட் ஸ்டீமர் சாதனத்தின் மீது பதிந்துள்ளது. இந்த சாதனத்தை சியோமி நிறுவனம் சியோமி ஹேன்ட்ஹெல்ட் கார்மெண்ட் ஸ்டீமர் (Xiaomi Handheld Garment Steamer) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது.

இது வழக்கமான எலக்ட்ரிக் ஐயன் பாக்ஸ் சாதனத்தின் மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சியோமி ஹேன்ட்ஹெல்ட் கார்மெண்ட் ஸ்டீமர் (Handheld Garment Steamer) உங்கள் துணியை நீராவி மூலம் ஸ்டீம் செய்து, துணியில் உள்ள சுருக்கங்களை நிவர்த்தி செய்கிறது. இந்த சாதனம் வெறும் 775 கிராம் எடையுடன் மட்டுமே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது 1300W ஸ்டீம் திறனை கொண்டுள்ளது.

இந்த சியோமி ஹேன்ட்ஹெல்ட் கார்மெண்ட் ஸ்டீமர் சாதனம் டூயல் ஹீட் ஐயனிங் பிளேட் (dual-heat ironing plate) உடன் வருகிறது. இது வெறும் 26 வினாடிகளில் சூடாகிறது என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சியோமி ஹேன்ட்ஹெல்ட் கார்மெண்ட் ஸ்டீமர் சாதனம் கழட்டி மாடக்கூடிய 160ml அளவு கொண்ட வாட்டர் டேங்க் (removable 160ml water tank) கருவியையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer..

சியோமி ஹேன்ட்ஹெல்ட் கார்மெண்ட் ஸ்டீமர் விலை என்ன?
சியோமி ஹேன்ட்ஹெல்ட் கார்மெண்ட் ஸ்டீமர் டிவைஸ் 16-24 g/min ஸ்டீம் ரேட் திறனை கொண்டுள்ளது. இது துணியில் சுருக்கங்கள் இல்லாததை உறுதி செய்கிறது. இந்த சியோமி ஹேன்ட்ஹெல்ட் கார்மெண்ட் ஸ்டீமர் டிரை ஐயனிங் (dry ironing mode) மோட் உடன் வருகிறது. இதனால், நீங்கள் நீராவி இல்லாமல் வெறும் சூடான காற்றை வைத்து துணிகளை ஐயன் செய்ய முடியும் என்று சியோமி தெரிவித்துள்ளது.

இந்த புதிய சியோமி ஹேன்ட்ஹெல்ட் கார்மெண்ட் ஸ்டீமர் விலை (Xiaomi Handheld Garment Steamer Price) பற்றி பேசுகையில், இது இந்திய சந்தையில் வெறும் ரூ. 2,299 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாக்யூம் கிளீனர் ரூ.20,999 என்ற விலையில் வருகிறது. இந்த இரண்டு தயாரிப்புகளும் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ரீடெய்ல் பார்ட்னர்கள், பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon) ஆகியவற்றில் வாங்க கிடைக்கும்.

இந்த தயாரிப்புகளின் விற்பனை மே 6,2024 ஆம் தேதி துவங்குகிறது. ஆனால் தள்ளுபடி சலுகைகளுடன் ஏப்ரல் 29, 2024 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்ய கிடைக்கும் என்று சியோமி விளம்பரம் செய்துள்ளது. உங்களிடம் இருக்கும் பழைய ஐயன் பாக்ஸை தூக்கி எறிந்துவிட்டு, இந்த புதிய கையடக்க ஸ்டீமரை நீங்கள் பயணிக்கும் பொழுது கூட கையுடன் எடுத்து செல்லுங்கள்.

Best Mobiles in India

English summary
Xiaomi Robot Vacuum S10 and Xiaomi Handheld Garment Steamer Price and Sale Details in India Check Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X