பிச்சிக்குது பிளிப்கார்ட்.. வெறும் ரூ.15,249 போதும்.. 108MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?
கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக 108 எம்பி ப்ரோ கிரேடு கேமரா, 3எக்ஸ் லாஸ்லெஸ் ஜூமிங் சப்போர்ட் உடன் வெளியான போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி (POCO X6 Neo 5G) போன் நம்ப முடியாத தள்ளுபடியில் விற்பனையாகிறது. விவரம் இதோ.
போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி அம்சங்கள் (POCO X6 Neo 5G Specifications): 6.67 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் வருகிறது.

அதுமட்டுமல்லாமல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. இந்த டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) 3எக்ஸ் லாஸ்லெஸ் ஜூமிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது.
போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் மோட் (Night Mode), வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter), டில்ட் ஷிப்ட் (Tilt Shift) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 16 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் ஃபிலிம் ஃபில்டர் (Film Filter), பால்ம் ஷட்டர் (Palm Shutter) பீச்சர்கள் இடம்பெற்றுள்ளன.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6எம்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் கொண்டிருக்கிறது. எம்ஐயுஐ 14 (MIUI 14) மற்றும் மீடியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் வருகிறது.

இந்த போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 2 மெமரி வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகின்றன. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு பயன்படுத்தலாம்.
அதுமட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் மாடலில் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் மாடலில் 12 ஜிபிக்கான டைனாமிக் ரேம் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போக்கோவில் IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வருகிறது.
அஸ்ட்ரல் பிளாக் (Astral Black), ஹரிசோன் ப்ளூ (Horizon Blue) மற்றும் மார்டியன் ஆரஞ்ச் (Martian Orange) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆகவும் இருக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் 8 ஜிபி மாடலுக்கு ரூ.750 மற்றும் 12 ஜிபி மாடலுக்கு ரூ.850 தள்ளுபடி கிடைக்கிறது. அதோடு எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி போனை ரூ.15,249 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications