Home
News

ஹை டிமாண்ட்.. 1 இல்லை 3-ஆ ஆர்டர் போடும் மக்கள்.. ரூ.6000 விலையில் அட்டகாசமான Mobile.. என்ன மாடல்?

ரூ.6000 விலை புள்ளியில் 6.7" இன்ச் டிஸ்பிளே, 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ், 1TB மெமரி, 8MP AI கொண்ட டூயல் கேமரா, 5000mAh பேட்டரி, டூயல் சிம், GPS என்று ஒட்டுமொத்த அம்சங்களையும் கொண்டுள்ள ஸ்மார்ட்போன் தான் இது.

இதுக்குமேல வேற என்னயா வேணும்? எந்த விதத்தில் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் அம்சங்களையும் மிகவும் குறைந்த விலையில் வழங்கி, மக்களின் கவனத்தை கவர்ந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் சாதனம் தான் இந்த போகோ C61 (POCO C61). கடந்த மாதம் 28 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. அறிமுகத்திற்கு முன்பாகவே இந்த போனின் மீது அதிக ஏதிர்பார்ப்பு இருந்து வந்தது.

ஹை டிமாண்ட்.. 1 இல்லை 3-ஆ ஆர்டர் போடும் மக்கள்.. ரூ.6000 விலை Mobile..

போகோ C61 (POCO C61):

விற்பனைக்கு வந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகம் விற்பனை செய்யப்பட்ட மலிவு விலை பட்ஜெட் சாதனமாக இந்த மொபைல் இருக்கிறது. இப்போது விற்பனைக்கு வந்து 2 வாரங்களை கடந்த பிறகு, இந்த மொபைல் சாதனம் ஹை-டிமாண்ட்டிற்கே சென்றுள்ளது. பின்ன இவ்வளவு குறைந்த விலையில் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போன் கிடைத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். இந்த மலிவு விலைக்கு இந்த போனில் என்னென்ன அம்சங்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாமா?

இந்த போகோ C61 ஸ்மார்ட்போன் சாதனம் 6.7" இன்ச் கொண்ட எச்டி பிளஸ் (HD+) டிஸ்பிளேவை வழங்குகிறது. இந்த டிஸ்பிளே 90Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் அளவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே உறுதியான கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்புடன் வருகிறது. மிகவும் துடிப்பான நிறங்களை கிரிஸ்டல் கிளியர் படத்துடன் இந்த டிஸ்பிளே காண்பிக்கிறது.

போகோ C61 (POCO C61) ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி36 (MediaTek Helio G36 Processor) சிப்செட் உடன் வருகிறது. இது 2 ஸ்டோரேஜ் விருப்பங்களில் வாங்க கிடைக்கிறது. இவை 4ஜிபி ரேம் (RAM) + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகின்றன. இந்த போனில் 6GB டர்போ ரேம் (Turbo RAM) அம்சமும் உள்ளது.

ஹை டிமாண்ட்.. 1 இல்லை 3-ஆ ஆர்டர் போடும் மக்கள்.. ரூ.6000 விலை Mobile..

போகோ C61 விலை (POCO C61 Price):

இதனால் ரேம் அளவு மொத்தமாக 12ஜிபி வரை செல்கிறது. கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்காக இந்த போகோ C61 (POCO C61) ஸ்மார்ட்போன் சாதனம் 1TB வரையிலான மைக்ரோ SD (microSD) கார்டு மெமரி (memory) அம்சத்தையும் ஆதரிக்கிறது. கேமரா (camera) பற்றி பேசுகையில், இந்த சாதனம் AI அம்சம் கொண்ட 8MP டூயல் ரியர் கேமராவை வட்ட வடிவ ரேடியன்ட் ரிங் டிசைனிற்குள் (Radiant Ring) வழங்கியுள்ளது.

முன்பக்கத்தில் 5MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இந்த போகோ C61 (POCO C61) ஸ்மார்ட்போன் சாதனம் 10W வயர்டு சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இத்துடன் டூயல் சிம், 4ஜி, வைஃபை, ப்ளூடூத் 5. 4, ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போன்ற அம்சங்களை வழங்குகிறது. ஒட்டுமொத்தத்தில் இதுவொரு குறைந்த விலை ஆல் ரவுண்டர் ஸ்மார்ட்போனாக வெளிவந்துள்ளது.

போகோ C61 போனின் 4ஜிபி ரேம் (RAM) + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.6,999 மற்றும் ரூ.7999 என்ற விலையுடன் 3 நிறங்களில், அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO C61 4GB RAM 6GB Turbo RAM 128GB Storage 1TB Memory 8MP Camer 5000mAh Battery Phone Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X