நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Poco போன்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ சி61 ஸ்மார்ட்போனை நாளை (26-3-2024) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி, பெரிய டிஸ்பிளே, மீடியாடெக் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது.
அதேபோல் நாளை மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் போக்கோ சி61 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் வெளியான இந்த போக்கோ சி61 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ சி61 அம்சங்கள் (Poco C61 specifications): 6.67-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே (LCD display) வசதியைக் கொண்டுள்ளது போக்கோ சி61 ஸ்மார்ட்போன். பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
சக்திவாய்ந்த மீடியாடெக் ஹலியோ ஜி36 சிப்செட் ( Helio G36 SoC) வசதியுடன் இந்த போக்கோ சி61 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் போக்கோ சி61 போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்களில் புதிய போக்கோ சி61 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
8எம்பி மெயின் கேமரா + 0.8எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது போக்கோ சி61 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் போக்கோ சி61 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது.

வைஃபை, புளூடூத், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ சி61 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.
இந்தியாவில் போக்கோ சி61 ஸ்மார்ட்போன் ரூ.6999 அல்லது ரூ.7499 விலையில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக மலிவு விலையில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








