Home
Mobile

அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. ரூ.14,999 போதும்.. 108MP கேமரா.. ஆஃபரில் போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் அசத்தலான போக்கோ 5ஜி போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அதாவது போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி போனுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.14,999 விலையில் வாங்கிவிட முடியும்.

அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. ரூ.14,999 போதும்.. ஆஃபரில் போக்கோ 5ஜி போன்

போக்கோ எக்ஸ்6 நியோ அம்சங்கள் (Poco X6 Neo specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6080 (MediaTek Dimensity 6080) சிப்செட் வசதியுன் இந்த போன் வெளிவந்தது. MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13 ) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் 2 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 4 வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

போக்கோ எக்ஸ்6 நியோ 6.67-இன்ச் பன்ச் ஹோல் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் வெளிவந்தது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1920Hz PWM டிம்மிங், 2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் (2160Hz instant touch sampling rate), 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

போக்கோ எக்ஸ்6 நியோ ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் இந்த போனில்3X இன்-சென்சார் ஜூம் ஆதரவு (3x in-sensor zoom support) உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ( 33W fast charging) வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும்.

அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. ரூ.14,999 போதும்.. ஆஃபரில் போக்கோ 5ஜி போன்

5ஜி, வைஃபை 5, புளூடூத் 5.3, ஜிஎன்எஸ்எஸ் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ ஸ்மார்ட்போன் மாடல்.

அதேபோல் போக்கோ நிறுவனம் கூடிய விரைவில் பட்ஜெட் விலையில் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
20 Percent Discount on POCO X6 Neo 5G With 128GB Storage in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X