2 புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்த யமஹா! விலையை சொன்னா நம்புவீங்களா?

|

என்னது? பைக் மற்றும் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் ஒரு நிறுவனத்திடம் இருந்து இயர்பட்ஸ்கள் அறிமுகம் ஆகிறதா? என்று ஷாக் ஆக வேண்டாம். அறியாதோர்களுக்கு யமஹா, வெறுமனே ஒரு ஆட்டோமொபைல் நிறுவனம் மட்டுமல்ல; இசைக்கருவிகளை தயாரிக்கும் ஒரு பிரபல ஆடியோ நிறுவனமும் கூட.

ஆக யமஹா நிறுவனத்திற்கு, ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (True Wireless Stereo) இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்யும் தகுதி ஒப்பீட்டளவில் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

இதன் அடிப்படையில் தான் யமஹா நிறுவனம், இந்திய சந்தையில் இரண்டு புதிய இயர்பட்ஸ்-களை அறிமுகப்படுத்தியுள்ளது. என்னென்ன மாடல்கள்? என்ன விலை? அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எதன் வழியாக வாங்க கிடைக்கும்? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.

யமஹா நிறுவனத்திற்கு இதுவொன்றும் புதிதல்ல!

யமஹா நிறுவனத்திற்கு இதுவொன்றும் புதிதல்ல!

யமஹா நிறுவனம், TW-E3B மற்றும் TW-E5B என்கிற இரண்டு புதிய இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்துள்ளது. நினைவூட்டும் வண்ணம், இந்த இரண்டும் யமஹா நிறுவனத்தின் முதல் இயர்பட்ஸ்கள் அல்ல.

இந்நிறுவனம் ஏற்கனவே சில தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த இரண்டு புதிய டிடபுள்யூஎஸ்-களும் யமஹாவின் போர்ட்ஃபோலியோவில் புதிய வரவுகள் ஆகும்.

ஆடியோ துறையில், இசைக்கருவிகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற யமஹா நிறுவனம், கடந்த ஆண்டு நெக் பேண்ட் மற்றும் இரண்டு ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களுடன் TWS சந்தையில் நுழைந்தது.

இசைக்கு நெருக்கமாக உங்களை கொண்டு செல்லும்!

இசைக்கு நெருக்கமாக உங்களை கொண்டு செல்லும்!

புதிய வரவுகளான, TW-E3B மற்றும் TW-E5B மாடலை பொறுத்தவரை, இரண்டுமே யமஹாவின் 'ட்ரூ சவுண்ட்' தத்துவத்துடன் வெளி வந்துள்ளன.

உடன் பல்வேறு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் கேட்போரை இசைக்கு நெருக்கமாக கொண்டுவரும் என்கிற உறுதிமொழியையும் வழங்குகின்றன.

மேலும் மனித காதுகளின் சிறப்பு உணர்திறன் பண்புகளை கருத்தில் கொண்டு, இந்த இயர்பட்ஸ்கள் சில "பராமரிப்பு" அம்சங்களையும் (care features) பேக் செய்கின்றன.

யமஹா TW-E5B TWS இயர்பட்ஸின் அம்சங்கள்

யமஹா TW-E5B TWS இயர்பட்ஸின் அம்சங்கள்

அம்சங்களை பொறுத்தவரை, யமஹா TW-E5B இயர்பட்ஸ் ஆனது 7mm டைனமிக் டிரைவர்களுடன் 20ஹெர்ட்ஸ் முதல் 20கேஹெர்ட்ஸ் வரையிலான ப்ரீவஎன்சி ரெஸ்பான்ஸ் உடன் வருகின்றன. மேலும் இது ஐபிஎக்ஸ்5 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் கோட்டிங் உடன் வருகிறது. கனெக்டிவிட்டிக்காக இதில் ப்ளூடூத் வெர்ஷன் 5.2 உள்ளது.

மேலும் இந்த இயர்பட்ஸ் குவால்காமின் சிவிசி (Clear Voice Capture) மற்றும் குவால்காம் aptX தொழில்நுட்பங்களுடன் வருகிறது. மேலும் இதில், நீங்கள் எம்மாதிரியதான சுற்றுப்புறத்தில் இருக்கிறீர்கள் என்கிற புரிதலை உங்களுக்கு வழங்கும் 'ஸ்மார்ட் ஆம்பியண்ட் சவுண்ட் மோட்' என்கிற அம்சமும் உள்ளது.

கேமிங், பேட்டரி லைஃப் என்று வரும் போது.. எப்படி?

கேமிங், பேட்டரி லைஃப் என்று வரும் போது.. எப்படி?

கேமிங் விரும்பிகளுக்கு என்ன ஸ்பெஷல் என்று கேட்டால்? TW-E5B ஆனது ஒரு பிரத்யேக கேமிங் மோட்-ஐ கொண்டுள்ளது, இது கேமிங் ஆப் மற்றும் வீடியோ கன்டென்ட்டிற்கான ஆடியோ செயல்திறனை மேம்படுத்தும் போது சவுண்ட் மற்றும் வீடியோ ஆகியவற்றிற்கு இடையே உள்ள டிலே-வை (reduces the delay) குறைக்கிறது.

பேட்டரி லைஃப்-ஐ பொறுத்தவரை, யமஹா TW-E5B இயர்பட்ஸ் ஆனது 30 மணிநேரங்கள் என்கிற தொடர்ச்சியான பிளேபேக் டைம்-ஐ வழங்குகின்றன. சார்ஜிங் டைம்-ஐ பொறுத்தவரை இதன் கேஸுக்கு 2.5 மணிநேரமும், இயர்பட்ஸ்களுக்கு 1.5 மணிநேரமும் ஆகும். இந்த இயர்பட்ஸ்களை 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரம் வரை பேட்டரி லைஃப்-ஐ வழங்கும் என்று யமஹா கூறுகிறது.

கவனிக்கவேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, போன் கால்களுக்கான கண்ட்ரோல்ஸ், மியூசிக் பிளேபேக் மற்றும் சிரி / கூகுள் அசிஸ்டென்ட் ஆக்டிவேஷன் போன்றவைகளை கூறலாம். இது கருப்பு மற்றும் நீல வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.

Nothing Phone 1 பர்ஸ்ட் லுக் வெளியானதுக்கே இவ்ளோ சலசலப்புகளா! அசத்துமா? சொதப்புமா?Nothing Phone 1 பர்ஸ்ட் லுக் வெளியானதுக்கே இவ்ளோ சலசலப்புகளா! அசத்துமா? சொதப்புமா?

யமஹா TW-E3B TWS இயர்பட்ஸின் அம்சங்கள்:

யமஹா TW-E3B TWS இயர்பட்ஸின் அம்சங்கள்:

யமஹா TW-E3B TWS இயர்பட்ஸ்களுக்கு வரும் போது, இதுவும் 20ஹெர்ட்ஸ் முதல் 20கேஹெர்ட்ஸ் வரையிலான ப்ரீக்வென்சி ரெஸ்பான்ஸ் உடன் வருகிறது, ஆனால் 6mm டைனமிக் டிரைவர்களுடன் வருகிறது.

மேலும் இது ஐபிஎக்ஸ்5 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் கோட்டிங் உடன் வருகிறது. இதுவும் கனெக்டிவிட்டிக்காக ப்ளூடூத் வெர்ஷன் 5.2-ஐ கொண்டுள்ளது.

இதனுடைய ஆடியோ குவாலிட்டி, பேட்டரி லைஃப் எப்படி இருக்கும்?

இதனுடைய ஆடியோ குவாலிட்டி, பேட்டரி லைஃப் எப்படி இருக்கும்?

உடன் இந்த இயர்பட்ஸ், ஹை-குவாலிட்டி ஆடியோ கோடெக், குவால்காம் aptX-ஐயும் பேக் செய்கிறது. மேலும் இது SBC, AAC மற்றும் Qualcomm இன் அட்வான்ஸ்டு aptX ஆடியோவை, ஹையர் சவுண்ட் குவாலிட்டிக்காக ஆதரிக்கிறது.

பேட்டரி லைஃப்-ஐ பொறுத்தவரை, இது 24 மணிநேரங்கள் என்கிற தொடர்ச்சியான பிளேபேக் டைம்-ஐ வழங்குகிறது மற்றும் முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் இரண்டு மணிநேரம் எடுத்துக்கொள்ளும். இந்த பட்ஸ் நீலம், இளஞ்சிவப்பு, ஊதா மற்றும் கருப்பு வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

இந்தியாவில் யமஹா TW-E3B TWS இயர்பட்ஸின் விலை ரூ.8,490 என்றும், மறுகையில் உள்ள யமஹா TW-E5B இயர்பட்ஸின் விலை ரூ.14,200 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு இயர்பட்ஸ்களுமே யமஹா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வாங்க கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இயர்பட்ஸ்களை பற்றி யமஹா என்ன கூறுகிறது?

இந்த இயர்பட்ஸ்களை பற்றி யமஹா என்ன கூறுகிறது?

இந்த புதிய அறிமுகத்தைப் பற்றிப் பேசுகையில், யமஹா மியூசிக் இந்தியாவின் ஏவி சேல்ஸ் அன்ட் மார்க்கெட்டிங்கின் பிஸ்னஸ் ஹெட் ஆன வெங்கடேஷ் பிரசாத் மன்யம், "ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்கள், அவற்றின் இயக்கம் மற்றும் பல்துறை பயன்பாடு காரணமாக அதிக விற்பனையாகும் தயாரிப்பாக இருப்பதால், ட்ரூ வயர்லெஸ்களை வடிவமைக்கும் போது யமஹா நிறுவனம் அதிக அக்கறை எடுத்துக்கொண்டது. குறிப்பாக TW-E3B மற்றும் TW- E5B மாடல்கள் ஆனது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும் கூட பயன்படுத்துபவர்களின் கேட்கும் திறனைப் பாதிக்காமல், அவர்களை இசையுடன் இணைந்திருக்க உதவும்" என்று கூறி உள்ளார்.

Best Mobiles in India

English summary
Yamaha introduced two new TWS earbuds in India with 30 hours continuous playback time Check price specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X