Home
Mobile

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. மலிவு விலை.. 5000எம்ஏஎச் பேட்டரி.. எல்சிடி டிஸ்பிளே.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனம் இன்று இந்தியாவில் போக்கோ சி61 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான அம்சங்களுடன் மலிவு விலையில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

போக்கோ சி61 அம்சங்கள் (Poco C61 specifications): 6.67-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே (LCD display) வசதியைக் கொண்டுள்ளது போக்கோ சி61 ஸ்மார்ட்போன். பின்பு 1650 x 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. மலிவு விலை.. எந்த மாடல்?

தரமான மீடியாடெக் ஹலியோ ஜி36 சிப்செட் (MediaTek Helio G36 SoC) கொண்டு வெளிவந்துள்ளது போக்கோ சி61 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் போக்கோ சி61 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அதேபோல் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்களில் புதிய போக்கோ சி61 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்(MicroSD card slot) ஆதரவு இதில் உள்ளது.

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. மலிவு விலை.. எந்த மாடல்?

போக்கோ சி61 ஸ்மார்ட்போன் ஆனது 8எம்பி மெயின் கேமரா + 0.8எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் போக்கோ சி61 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது.

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. மலிவு விலை.. எந்த மாடல்?

டூயல் சிம், 4ஜி, வைஃபை 5, புளூடூத் 5.3, 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ சி61 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் குறைந்த எடையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜிபி ரேம்+ 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ சி61 போனின் விலை ரூ.7,499-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.8,499-ஆக உள்ளது. பின்பு வரும் மார்ச் 28-ம் தேதி இந்த போனை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும். மேலும் இந்த போனுக்கு ரூ.500 கூப்பன் சேல் டே ஆஃபர் (Rs 500 coupon sale day offer) கூட வழங்கப்பட்டுள்ளது. எனவே போக்கோ சி61 போனை ரூ.6999 விலையில் வாங்கிவிட முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO C61 launched in India at low price: check specifications, price, sale date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X