Home
News

பார்க்கவே செமயா இருக்கே.. ரூ.8,499 விலை.. மாஸ் ரிங் பம்ப் போன்.. என்ன மாடல்? எப்போ அறிமுகம்?

புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் மக்களே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, பட்ஜெட் விலையில் சூப்பரான ஒரு ஸ்மார்ட்போன் வெளிவரவிருக்கிறது. இன்னும் 2 நாட்களில் வெளிவரவிருக்கும் புதிய போகோ C61 (POCO C61) போனை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

போகோ இந்தியா (POCO India) ஒரு புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போன் சாதனத்தை வரும் மார்ச் 26 ஆம் தேதி அன்று இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகப்படுத்தஉள்ளது. இது POCO C61 என்ற பெயருடன் அட்டகாசமான பின்பக்க கேமராவுடன் வெளிவரப்போகிறது. போகோ C61 (POCO C61) சாதனம் ஆனது கடந்த ஆண்டு POCO C51 போனுக்கு அடுத்தபடியாக வெளிவரும் மற்றொரு பட்ஜெட் சாதனமாகும்.

பார்க்கவே செமயா இருக்கே.. ரூ.8,499 விலை.. மாஸ் ரிங் பம்ப் போன்..

போகோ C61 (POCO C61): இந்த புதிய போகோ C61 (POCO C61) ஸ்மார்ட்போன் சாதனம் இந்த 2024 ஆம் ஆண்டின் ஒரு பெஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன் விருப்பமாக வெளிவரும் என்று நம்பப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் பட்ஜெட் பயனர்களை இலக்காகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போகோ C61 (POCO C61) சாதனத்தின் அறிமுகத்தை நிறுவனம் அதன் சமூக ஊடக சேனல் வழியாக உறுதி செய்துள்ளது.

POCO நிறுவனம் எப்படி அதன் மற்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்ததுப் போலவே, வரவிருக்கும் POCO C61 ஸ்மார்ட்போன் சாதனமும் Flipkart இந்தியா வழியாக பிரத்தியேகமாக விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. POCO C61 வெளியீட்டை உறுதி செய்யும் வகையில் Flipkart இல் விளம்பரம் லைவ் செய்யப்பட்டுள்ளது. இதில் போகோ C61 (POCO C61) வெறும் பிளாக் நிறத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிளிப்கார்ட் மைக்ரோசைட் தளம் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் சில முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்துகிறது. இதில் POCO C61 ஆனது ஒரு ரேடியன்ட் ரிங் டிசைனைக் கொண்டிருக்கும் என்பது தெளிவாக காண்பித்துள்ளது. இதில் பெரிய வட்ட கேமரா தொகுதி உள்ளது. வரவிருக்கும் சி-சீரிஸ் ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் உடன் வரும் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

பார்க்கவே செமயா இருக்கே.. ரூ.8,499 விலை.. மாஸ் ரிங் பம்ப் போன்..

POCO C61 சிறப்பம்சம்: இதன் முன்னர் மாடல் 60 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. POCO C61 ஸ்மார்ட்போன் சாதனம் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. POCO C61 இன் மைக்ரோசைட் டீஸர்கள் இது டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது LED ஃபிளாஷ் உடன் ஆதரிக்கப்படும். இந்த போகோ C61 சாதனம் 6ஜிபி ரேம் + 6ஜிபி விர்ச்சுவல் ரேம் அம்ஸத்தை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் பட்ஜெட் விலையில் இடம்பெறும் 12ஜிபி ரேம் சாதனமாக இந்த போகோ C61 (POCO C61) சாதனம் பார்க்கப்படுகிறது. POCO C61 ஆனது Google Play Console, Bluetooth SIG மற்றும் Bureau of Indian Standard certification வலைத்தளங்களில் ஏற்கனவே காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் பிளே கன்சோல் தரவுத்தள பட்டியலின் படி, ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி36 சிப்செட் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

POCO C61 ஆனது கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மறுபெயரிடப்பட்ட Redmi A3 ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சாதனம் ரூ.8,499 விலையில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO C61 Launching in India at Rs 8499 On March 26 2024 Sale Via Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X